அக்ஷராவை கண்டுகொள்ளாத ராஜுவின் அம்மா..பாவனியிடம் பாசம் காட்ட காரணம் இதுதானா??
சென்னை: பிக்பாஸ் வீட்டில் நேற்றைய எபிசோட்டில் ராஜுவின் அம்மாவின் செயல்பாடு அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தன் மகனை அண்ணனாக நினைத்து இருக்கிறேன் என்று கூறும் அக்ஷராவிடம் பாசமாக பேசாத காரணம் என்னவென்று ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.
அக்ஷராவிடம் காட்டாத பாசத்தை பாவனியிடம் ராஜுவின் அம்மா காட்டியிருப்பது பலருக்கும் வியப்பை கொடுத்திருக்கிறது.

சரியான முடிவுதான்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வழக்கமாக நடக்கும் சடங்கு சம்பிரதாயங்களில் ஒன்று தான் ஃப்ரீஸ் டாஸ்க். தற்போது இந்த போட்டியாளர்களின் உறவினர்கள் திடீரென்று என்ட்ரி கொடுத்து அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்து வருகின்றனர். இதில் இந்த சீசனில் இருக்கும் 10 போட்டியாளர்களில் குடும்பத்தினரும் ஒவ்வொரு விதமாக நடந்து கொள்வதைப் பார்க்கும்போது ரசிகர்களுக்கு சுவாரஸ்யம் ஏற்பட்டுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பலருக்கும் ஃபேவரைட் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் ராஜுவின் அம்மாவின் செயல்பாடுகள் நேற்றைய எபிசோட்டில் சரியான முடிவு என்று கூறி வருகின்றனர்.

மாற்றமான கேரக்டர்
இந்த ஐந்தாவது சீசன் தொடங்கிய முதல் நாளில் இருந்து ராஜூ தான் என்னுடைய அண்ணன் என்று அக்ஷரா கூறியிருப்பது ராஜுவின் ரசிகர்களுக்கு பெருமையாக இருந்தாலும், ராஜுவை முதுகுக்கு பின்னாடி சில நேரங்களில் அக்ஷராவை தரைகுறைவாக பேசி வருகிறார் என்று தெரிந்ததும் அவர் மீது கோபத்தில் இருந்து வருகின்றனர். என்னதான் ராஜு பலநேரங்களில் நியாயமாக நடந்து கொண்டாலும் பாவனி விஷயத்தில் அவர் நடந்து கொண்டது பலருக்கும் வியப்பாக இருந்து வருகிறது.

கருத்து வேறுபாடு காரணம்
சமையலறையில் சரியாக வேலை செய்யவில்லை என்று பாவனி ராஜுவை குறை கூறிய நாளிலிருந்தே அவர் மீது வெறுப்பைக் காட்ட ஆரம்பித்த ராஜு அதற்குப்பிறகு டாஸ்க் விஷயத்தில் தாமரையிடம் பாவனி நடந்து கொண்டது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்று முகத்துக்கு நேராக ஒவ்வொரு முறையும் மட்டம் தட்டிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்து பலர் ரசிகர்கள் ராஜூக்கு எதிராக சில நேரங்களில் சமூக வலைத்தளங்களில் கமெண்டுகளை அனுப்பி வருகின்றனர்.

மிரட்டல் கொடுத்த ராஜுவின் அம்மா
தற்போது ஒவ்வொரு போட்டியாளர்களின் உறவினர்களும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் ராஜூவின் குடும்பத்தினரின் வருகை பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருந்தது. ராஜுவின் அம்மா அக்ஷராவிடம் தான் பாசமாக நடந்து கொள்வார் என்று பலர் எதிர்பார்த்து இருந்த நேரத்தில் அவர் அக்ஷராவை துளி கூட கண்டுகொள்ளவில்லை. ஆனால் அதற்கு நேர்மறையாக பாவனியுடன் மிகவும் பாசமாகவும் நடந்து கொண்டதோடு அவருக்கு தைரியமாக இருக்க வேண்டும் என்று அறிவுரையும் கூறி இருக்கிறார். அதை பார்க்கும்போது பல ரசிகர்கள் ராஜுவின் அம்மா மிகவும் மெச்சூரிட்டி ஆக செயல்பட்டுள்ளார். இதில் யாரு கூடவே இருந்து குழி பறிப்பது என்பதை நன்றாக தெரிந்து கொண்டுதான் இந்த மாதிரி நடந்துள்ளார் என்று கூறியிருக்கிறார். இதை பார்த்த பிறகாவது ராஜு மாறவேண்டும் என்று சில அறிவுரைகளை கூறி வருகின்றனர்.
Recommended Video

ராஜுவின் மனைவியின் அறிவுரை
ராஜுவின் அம்மா மட்டுமல்லாமல் அவருடைய மனைவியும் அதை தான் சொல்லியிருக்கிறார். நல்லா விளையாடு அதை விட்டுவிட்டு தங்கச்சி, அக்கா இந்த மாதிரி பாசம் எல்லாம் வேண்டாம் என்று அக்ஷராவின் மனதில் வைத்துக் கொண்டுதான் இதை சொல்லியுள்ளார் என்று பலர் கூறியுள்ளனர். பாவனி,பிரியங்கா இருவரும் ராஜுவின் குடும்பம் வந்து சென்றபின் பேசியதையும், அக்ஷரா, தாமரை இருவரும் பேசியதும் கவனித்தால் புரியும் விஷயம் என்பது இனிமேலாவது ராஜூ அக்ஷரா கூட சேராமல் இருந்தால் நல்லது என்று பலர் அறிவுரை கூறி வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications