எதார்த்தமாக கேள்வி கேட்கிறேன் என்று ஏடாகூடமாக கேள்வி கேட்டு விட்டாரே ராஜு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சிகள் 'ட்ரூத் ஆர் டேர்' டாஸ்கில் அபினவ்வை பார்த்து ராஜு கேட்ட கேள்வி சக போட்டியாளர்கள் மட்டுமின்றி ரசிகர்களையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

கேள்வி கேட்பவரிடம் உண்மையைக் கூறும் இந்த டாஸ்கில் ராஜுக்கான வாய்ப்பு வந்த பொழுது அவர் அபினவ்வை பார்த்து.. 'நீங்கள் பாவனியை.. காதலிக்கிறீர்களா..!?..' என்று கேட்ட அந்தக் கேள்விதான் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களை, சீ.. சீ.. இதெல்லாம் ஒரு கேள்வியா..? என்று உச்சு கொட்ட வைத்தது.

இதுவரை தன் மீது பெரிய அளவிற்கு நெகட்டிவ் கமெண்ட்கள் வராமல் பார்த்துக் கொண்ட ராஜு, இந்த ஒரு கேள்வி மூலம் தனக்கு இன்னொரு முகமும் இருக்கிறது என்று காட்டியுள்ளார்.

குண்டக்க மண்டக்க கேள்வி

குண்டக்க மண்டக்க கேள்வி

ராஜுவின் இந்த குண்டக்க மண்டக்க கேள்வி குறித்து கருத்துக்கள் தெரிவித்துவரும் நெட்டிசன்கள், என்னதான் போட்டியாக இருந்தாலும் ஒரு பொது நிகழ்ச்சியில் ஒரு திருமணமான ஆணை.. இவ்வாறு இன்னொரு பெண்ணுடன் சம்பந்தப்படுத்தி பேசுவது ஒரு இழிவான செயல் என்று பதிவிட்டு வருகின்றனர். கலாச்சாரத்தின் கண்ணாடியே நான் தான் என்பது போல் பேசிவரும் தாமரை இந்த கேள்வியை கேட்டது குறித்து ராஜுவை கண்டிக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பாவனியை இரிட்டேட் செய்துவந்த ராஜு

பாவனியை இரிட்டேட் செய்துவந்த ராஜு

இந்த மாதிரியான கேள்விகள் அபிநவ், பாவனி இரு குடும்பத்திற்கும் எவ்வாறு பாதிப்பை உண்டுபண்ணும் என்று யோசித்திருக்க வேண்டாமா..!!?என்று கேட்டு வருகின்றனர்.ஆரம்பம் முதலே அவ்வப்போது வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பாவனியை இரிட்டேட் செய்துவந்த ராஜு.. அனைத்திற்கும் உச்சபட்சமாக அவரைப் பழிவாங்கும் பொருட்டு இந்த கேள்வியை கேட்டுள்ளதாக கூறிவருகின்றனர்.

அபிநய்-பாவனி உரையாடல்

அபிநய்-பாவனி உரையாடல்

ராஜூ இவ்வாறு கேள்வி கேட்டபோதும் அதன் பின்பு அதை மெசூரிட்டியாக பேசி தங்களுக்கள் சரிசெய்த அபிநய்-பாவனி உரையாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அபிநவ் இடம் சாதாரணமாக இந்த கேள்வியை கேட்டு விட்ட ராஜூவால் வருன்,நிருப், பிரியங்காவிடம் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால் நிலைமையே வேறு மாதிரி இருந்திருக்கும் என்று நிகழ்ச்சியின் பார்வையாளர்கள் பொங்கி வருகின்றனர்.

வேண்டுமென்றே அந்த கேள்வியை கேட்கவில்லை

வேண்டுமென்றே அந்த கேள்வியை கேட்கவில்லை

டாஸ்க்கிற்கு பின்பு, தான் வேண்டுமென்றே அந்த கேள்வியை கேட்கவில்லை... என்று கூறியது குறித்து கருத்துக்களைப் பதிவு செய்து வரும் நெட்டிசன்கள், நெருப்பில்லாமல் புகையாது.. ஏதோ இருக்க போய் தான் ராஜு இப்படி கேட்கிறார்... என்ற தவறான கருத்துக்களையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்திவிடாதா...? சென்ற சீசனில் செரின்-வனிதா இடையே நடந்த கேரக்டர் குறித்த மிகப் பெரிய வாக்குவாதம் போல் தற்போது இதுவும் நடந்துவிட்டதாக தெரிவித்து வருகின்றனர்.பிக்பாஸ் வீட்டில் தெரிந்து கொள்வதற்கு நிறைய ரகசியங்கள் இருக்கும் பொழுது இதை போய் ஒரு கேள்வியாக கேட்டு ராஜு தன் மீது இருந்த இமேஜ் கொஞ்சம் குறைத்துக் கொண்டார் என்று சொல்லலாம்.சகப் போட்டியாளர்களும் ராஜுவின் இந்த செயலை பெரிய அளவில் எதிர்க்காத கருத்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+