Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாட்ஸ் அப் நம்பர் கொடுத்த ரம்யா பாண்டியன்.. மதுரை முத்துவோட வைப்ரேஷனா..? இது என்ன புது ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமது ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் கேட்டு வரும் கேள்விகளுக்கு சுவாரசியமாக பதில் அளித்து வரும் ரம்யா பாண்டியனின் பதில்கள் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரசிகர்கள் ரம்யா பாண்டியனிடம் கேட்கும் குண்டக்க மண்டக்க கேள்விகளுக்கும் திறமையாக பதில் அளித்து சமாளித்து வந்துள்ளார்.

கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் எல்லா நடிகைகளிடமும் கேட்கப்படும் கேள்விகள் தான் என்றாலும் ரம்யா பாண்டியனின் பதில்கள் சற்று வித்தியாசமாகத்தான் இருக்கிறது.

 செலிப்ரிட்டியான ரம்யாபாண்டியன்

செலிப்ரிட்டியான ரம்யாபாண்டியன்

என்னதான் திரைத்துறை பின்புலங்கள் இருந்தாலும் பெரிதளவிற்கு வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிற்குள்ளே இருந்த ரம்யா பாண்டியன், கொஞ்சம் வெளியே வந்து வீட்டில் இருக்கும் மொட்டை மாடி வரை ஏறி போய் கேஷுவலாக போட்டோக்கள் எடுத்து தன்னோட சமூக வலைதளங்கள் பக்கங்களில் போஸ்ட் பண்ணார். அதுவரை காற்று வாங்கிய இவருடைய சமூகவலைதள பக்கங்கள், அந்தப் போட்டோக்களை போஸ்ட் பண்ண பிறகு காத்து கூட போக முடியாத அளவுக்கு லைக்குகளும் கமாண்டுகளும் குவிய தொடங்குச்சு. போட்டோவ போஸ்ட் பண்ணிட்டு நைட்டு தூங்கப்போன சாதாரண ரம்யா பாண்டியன் காலையில் செலிபிரிட்டி ரம்யா பாண்டியனாத்தான் முழிச்சாங்க.

பினிஷிங் சரியில்லை

பினிஷிங் சரியில்லை

ஒரே போட்டோல உலக ஃபேமஸான ரம்யா பாண்டியன் அந்த பேமஸ் யூஸ் பண்ணி வந்த வாய்ப்பு எல்லாம் தவிர்க்காமல் பயன்படுத்திக்கிட்டாங்க. வீட்டின் வெளிய மொட்டை மாடிய வச்சி பேமஸான ரம்யா பாண்டியன் வீட்டுக்குள்ள போய் பேமஸ் ஆகனும்னு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் போனாங்க. எல்லாம் நல்லாத்தான் இருக்கு உங்க கிட்ட பினிஷிங் சரியில்லப்பா என்று ரசிகர்கள் நினைத்து விட்டார்கள் போல, கொஞ்ச நாளிலேயே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தாங்க. பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ரம்யா பாண்டியன் வழக்கம் போல கடைகளுக்கு ரிப்பன் கட் பண்றது, மரக்கன்று வைக்கிறது,ரியாலிட்டி ஷோல உக்கார்றதுன்னு கொஞ்சம் பிஸியா தான் இருந்தாங்க.

ரம்யா பாண்டியன் ரிட்டன்

ரம்யா பாண்டியன் ரிட்டன்

எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்ட ரம்யா பாண்டியன் எந்த வாய்ப்புகள் பயன்படுத்துவதுகிறதுல கொஞ்சம் கவன குறைவாக இருந்து விட்டார் போல, சினிமாவில் அவருக்கான வாய்ப்புகளும் சமூக வலைதளங்களில் அவர் போடும் போஸ்ட் மீது இருந்த கிரேஸும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. அத கொஞ்சம் லேட்டா புரிஞ்சுகிட்ட ரம்யா பாண்டியன் தற்போது திரும்ப தன்னோட ஒரே பிளஸ் ஆனா கிளாமர கையில எடுத்து ரீசென்ட்டாக சூடாக சில போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி ஐ அம் பேக் என்று சொல்லாமல் சொல்லியுள்ளார்.

சூடான கேள்விகளும் சுவையான பதில்களும்

சூடான கேள்விகளும் சுவையான பதில்களும்

ட்ரெண்டிங்க விட்ற கூடாதுன்னு நினைச்சா ரம்யா பாண்டியன் இதே ஸ்பீட்ல இன்ஸ்டாகிராமில் தன் ரசிகர்களிடம் உரையாடி உள்ளார்.ரசிகர்கள் ரம்யா பண்டியனிடம் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் கூறிய பதில்களும், என்னதான் அரைச்சமாவையே அரைத்த மாதிரியே இருந்தாலும் ரம்யா பாண்டியன் ரசிகர்கள் அதையும் கொண்டாடி வருகின்றனர்.பிக் பாஸ் நிகழ்ச்சி தனக்கு ஊக்கமாகவும்,நல்ல பெயரை பெற்று தந்த நிகழ்ச்சியாக இருந்தது என்று கூறியுள்ள ரம்யா பாண்டியன் தன்னிடம் வாட்ஸ் அப் நம்பர் கேட்ட ரசிகருக்கு 0 முதல் 10 நம்பர் வரை கூறி இதற்குள்ள தான் வாட்ஸ் அப் நம்பர் இருக்கு கண்டுபிடிங்க என்று
மதுரை முத்து ரேஞ்சுக்கு காமெடி பண்ணி உள்ளார்.

கேள்வி பதில்கள்

கேள்வி பதில்கள்

ரம்யா பாண்டியன் ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள சுவாரசியமான பதில்கள் சில;
கேள்வி:உங்களுடைய விருப்பமான பொழுதுபோக்கு என்ன?

பதில்: படம் பார்ப்பது.

கேள்வி: உங்கள் வாட்ஸ் அப் நம்பர் வேணும்?

பதில்:0,123456789 இந்த நம்பருக்குள் தான்இருக்கிறது கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்.

கேள்வி:உங்க ஹஸ்பண்ட் யார்?

பதில்: தற்போதைக்கு ஹேர்பேண்ட் தான் உள்ளது. ஹஸ்பண்ட் இல்லை.

கேள்வி:அடுத்த போஸ்ட் எப்ப ஜி?

பதில்:லைக் பண்ணி, ஷேர் பண்ணி,சப்ஸ்கிரைப் பண்ணி, வெயிட் பண்ணுங்க கூடிய விரைவில்.

கேள்வி:பிக் பாஸ் போட்டியாளர்கள் மக்களிடமிருந்து காலவரையின்றி வரும் விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

பதில்: எனக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. என்னை ஊக்குவிக்க தான் செய்கிறார்கள்.

கேள்வி:உங்களுக்கு மிகவும் பிடித்த மனிதர் யார்

பதில்:சொல்ல மாட்டேன்...

கேள்வி:எனக்கு மிகவும் பிடித்தவர்கள் லிஸ்டில் நீங்கள்தான் எப்பொழுதும் டாப்பில் இருக்கிறீர்கள் எப்படி?

பதில்:உங்கள் லிஸ்ட்டை புதுப்பிக்க உங்களுக்கு தெரியவில்லை. இவ்வாறு பல சுவாரசியமான கேள்விகளுக்கு நகைச்சுவையான பதில்களை ரம்யா பாண்டியன் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+