அருவியில் நனையும் ரோஜா.. தனிமையில் பயணம்.. பிரியங்கா நல்கரி எங்கே போனார் தெரியுமா?
ரோஜா சீரியல் நடிகை கர்நாடகாவிற்கு தனிமை சுற்றுலா சென்றுள்ளார். அந்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: ரோஜா சீரியலில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் பிரியங்கா நல்கரி தனிமை சுற்றுலா சென்றுள்ளார். அங்கே அவர் தனது உற்சாகமான அனுபவங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சன் டிவியில் இரவு 9 மணிக்கு ரோஜா டிவி சீரியல் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. டிஆர்பியிலும் நல்ல இடத்தை பிடித்துள்ளது. பாசமான குடும்பத்திற்கு மருமகளாக போன ரோஜா சந்திக்கும் பிரச்சினைகள்தான் கதை. கூடவே இருக்கும் அனு செய்யும் வில்லத்தனங்களை கணவன் அர்ஜூனுடன் சேர்ந்து முறியடிக்கிறாள் ரோஜா.

கர்ப்பமான ரோஜா
திருமணமாகி நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தோஷ செய்தி சொல்லியிருக்கிறாள் ரோஜா. ஆம் ரோஜா கர்ப்பமாக இருப்பதால் குடும்பமே அவளை கொண்டாடுகிறது. வயிற்றில் வளரும் வாரிசு ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் என்று பூஜை செய்யப்போகிறார்கள். அதை கெடுக்க பல வில்லத்தனங்கள் செய்யப்போகிறாள் அனு அதை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என்று திட்டமிடுகிறான் அர்ஜூன். கதை இப்படி போக ரோஜாவே தனியாக டூர் கிளம்பி விட்டார்.

ஊஞ்சல்
கர்நாடகா மாநிலத்தில் இப்போது அருமையான சீசன் காலம் என்பதால் மலைசார்ந்த இடத்தில் குளுமையை அனுபவிக்க கிளம்பி விட்டார் ரோஜா. அங்கே உற்சாமாக ஊஞ்சல் ஆடி மகிழ்வதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

புல் தரையில் பட்டாம்பூச்சி
கர்ப்பமான பொண்ணு கண்ட இடத்தில படுக்கக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால் ரோஜாவோ புல்தரையில் படுத்துறங்கி அதை போட்டோவாக பதிவிட்டுள்ளார். என்னதான் தனியா போனாலும் இப்படியா பூச்சி எதுவும் கடிச்சிடாமல் பத்திரம் என்று கமெண்ட் பதிவிட்டுள்ளனர் ரசிகர்கள்.

அருவியில் நனையும் ரோஜா
சின்ன அருவியில் சில்லென்று விரல் நனைத்து ஆனந்தமாக விளையாடுகிறார் ரோஜா... அடடா அப்போ தனிமை டூர் போனது இப்படி யாருடைய தொந்தரவும் இன்றி விளையாடத்தானா என்று கேட்டுள்ளனர். எல்லாம் சரி உங்களுக்காக பூஜை எல்லாம் பண்றாங்க சீக்கிரம் வீடு வந்து சேருங்க என்று பதிவிட்டுள்ளனர் ரசிகர்கள்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications