சீரியலில் நடித்தது ஒரு குத்தமா??அதுக்காக இப்படியா??கண்ணம்மாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை: விஜய் டிவியில் சீரியலில் நடித்த ரோஷ்னி ஹரிப்ரியனுக்கு இப்படி ஒரு நிலைமையா என நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் கலாய்த்து வருகிறார்கள்.
சீரியலின் கேரக்டர் என்கிற பெயரில் இப்படி ரோஷ்னியின் வாழ்க்கையையே மாற்றி விட்டார்களே என்று ரசிகர்கள் மீம்ஸ்களில் கலாய்த்து வருகிறார்கள்.

சீரியலை விட்டு விலக காரணம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சில சீரியல்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல மதிப்பைப் பெற்று விடுகிறது.இந்த சீரியலில் நடிக்கும் கேரக்டர்கள் ரசிகர்களின் மனதில் அப்படியே பதிந்து விடுகின்றன. அந்த மாதிரிதான் பாரதிகண்ணம்மா சீரியலின் மூலமாக புகழின் உச்சியில் வலம் வந்து கொண்டிருக்கும் ரோஷ்னி ஹரிப்ரியன் தற்போது இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார். சீரியலில் தன்னுடைய கேரக்டர் தனக்கு பிடிக்கவில்லை என்று இவர் விலகியதாக செய்திகள் கூறப்படுகிறது. அழுகை காட்சிகள் அதிகமாக வருவதால் அதனால் தனது திறமையை காட்ட முடியவில்லை என்று இவர் கூறியுள்ளாராம்.

நெட்டிசன்களால் பிரபலம்
பாரதிகண்ணம்மா சீரியலின் கண்ணம்மா கேரக்டரில் இவர் உலகம் சுற்றும் கண்ணமாவாக மீம்ஸ் கிரியேட்டர்களால் வலம் வந்து கொண்டிருந்தார். இவர் கால் படாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு, கையில் பேக்கோடு பல்வேறு இடங்களில் வலம் வந்து கொண்டிருந்தார். இவரை கலாய்ப்பதை விட்டுவிடுவதாக இல்லாமல் ஒரு சில மாதங்கள் சமூக வலைத்தளத்தில் புது விதமாக கலாய்த்து வந்தனர். ஒருவழியாக சீரியலின் கதை மாற்றப்படுகிறது என்று தெரிந்ததும் ரசிகர்கள் இனியாவது கதை வேற லெவல் மாறுமா?? என்று எதிர்பார்த்த நிலையில் மறுபடியும் அதே ட்ராக்கில் பயணிக்க ஆரம்பித்தது.

குக் வித் கோமாளியில் அறிமுகம்
சீரியலின் கதை தனக்கு ஆரம்பத்தில் பெரிய அளவில் வளர்ச்சியை கொடுத்து இருந்தாலும் நாட்கள் போகப்போக நெகட்டிவ் கமெண்ட்கள் அதிகமாக இவருக்கு வருவதால் இந்த சீரியலில் இருந்து இவர் விலகிவிட்டார். இந்த நிலையில் தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பலருடைய வாழ்கையே டோட்டலாக மாற்றியிருக்கும், காமெடி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அறிமுகமாகியிருக்கிறார். இது இவருடைய ரசிகர்களுக்கு சந்தோஷமான செய்திதான்.

டாக்டர் பட டயலாக்
மீண்டும் ரோஷினியை சின்னத்திரையில் பார்க்கலாமா என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி ஆறுதலான செய்தியாக இருந்தாலும் ஒருசில நெட்டிசன்கள் மீண்டும் இவரை கலாய்க்க தொடங்கியிருக்கின்றனர். டாக்டர் படத்தில் வரும் டயலாக்கை வைத்து ரோஷ்னி ஹரிப்ரியன் பாரதிகண்ணம்மா சீரியலின் இயக்குனரை கலாய்ப்பது போல மீம்ஸ்கள் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகின்றன. அதில் ரோஷ்னியின் மைண்ட் வாய்ஸ்... இதுதான், சமையல் அம்மா, சமையல் அம்மா என்று சொல்லி என்னை எங்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்க பார்த்தியா?? என்று சொல்வது போல கலாய்த்து இருக்கின்றனர். இந்த போஸ்டர்கள் சமூகவலைத்தளத்தில் அதிகமான ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
-
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு?












Click it and Unblock the Notifications