அப்படி இப்படி கலக்கும் சனம்...தவிக்குது ரசிகர்களின் மனம்
சென்னை: கருப்பு புடவையில் நெருப்பாய் அமர்ந்திருக்கும் சனத்தை பார்த்து ரசிகர்களின் மனது தவித்துக் கொண்டிருக்கிறது.
ஆர்ப்பரிக்கும் அழகை அமைதியாக காட்டி அடங்காமல் மனதை துள்ள வைத்து விட்டாரே என ரசிகர்கள் குதூகலித்து வருகின்றனர்.
விதவிதமாக போஸ் கொடுத்து கண்களுக்கு குளுமையை காட்டியிருக்கும் சனம் ஷெட்டியின் போட்டோஸ்கள் பலருடைய வாட்ஸ்அப் டிபி யாக வலம் வருகிறது.

அசத்தும் விதவிதமான போட்டோக்கள்
வெள்ளித்திரையில் எப்போது ஜொலிப்பார் என காத்திருக்கும் ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராமில் ஜொலித்துக் கொண்டிருக்கும் சனம் ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஸ்கள் இன்ப அதிர்ச்சியாகவும் ஆறுதலாகவும் இருந்து வருகிறதாம். சனம் ஷெட்டி என்று சொன்னதுமே அவருடைய துடிப்பான பேச்சும் எதற்கும் பயப்படாத போல்டான கேரக்டரும் தான் ரசிகர்கள் பலருக்கும் நினைவுக்கு வரும். ஒரு சிலர் மட்டும்தான் இந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் இடத்தை பிடிக்க முடியும் அந்த வகையில் சனம் ஷெட்டியும் நிரூபித்து விட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இவரை பார்த்து திட்டி தீர்த்த ரசிகர்கள் இவர் நிகழ்ச்சியை விட்டு விலகும் போது ரொம்பவே பீல் பண்ணி விட்டனர்.

இவர் வேற மாதிரி
பொதுவாக மனிதர்கள் பலருக்கும் டேர்னிங்க் பாயிண்ட் என்று ஒன்று வரும், அந்த மாதிரி கிடைத்த பிறகுதான் அவரைப் பற்றி பலருக்கும் புரிந்து கொள்ளவே முடியும். அதுவரைக்கும் சிலரை பார்க்காமலே அவர்கள் மீது தப்பான அபிப்ராயத்தை வைத்து விடுகின்றனர். அதுபோலத்தான் சனம் ஷெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு வரைக்கும் பெரிய அளவில் ரசிகர்களிடம் பிரபலமாகவில்லை. மாறாக இவரைப் பற்றி பல வதந்திகளும் கிளம்பிக் கொண்டிருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சி இவருடைய உண்மையான குணத்தை உலகிற்கு எடுத்துக் காட்டி விட்டது. பட்டிதொட்டியெல்லாம் பிரபலமான சனம் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்று தான் திரும்புவார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருந்தனர்.

புரிஞ்சுக்கவே முடியலையே
இவர் ஒரு மாடலாக இருந்தாலும் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் அடியெடுத்து வைத்த பிறகுதான் இவர்தான் அந்த சனம் என்றே பலருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனாலும் தன்னுடைய போல்டான கேரக்டரால் இவர்மீது அதுவரைக்கும் இருந்த தப்பான எண்ணங்களை தகர்த்து எறிந்து விட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பலர் எப்போது வெளியேறுவார்கள் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருபவர். ஒவ்வொரு வாரமும் இவர் வெளியேறி விட மாட்டாரா என்று ஒரு சிலரை பார்த்து கூறுவர். ஆனால் சனம் ஷெட்டி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அதனால்தான் சமூக வலைத்தளத்தில் சனம் ஷெட்டிக்கு பல ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வந்தது.

அழகுக்கே அழகா
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் நடித்து வந்த ஒரு சில திரைப்படங்கள் இன்னமும் வெளி ஆகாமல் தான் இருந்து வருகிறது. இது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்துவருகிறது. எப்போது திரைப்படம் வெளியாகும் என்று ஆர்வத்துடன் கேட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இவர் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருவதால் ரசிகர்கள் அவரிடம் அடிக்கடி போஸ்ட் போட சொல்லியும் கேட்டு வருகின்றனர். ரசிகர்கள் ஆசைக்காக சனம் ஷெட்டி தனக்கு நேரம் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் போஸ்ட் போட்டு கொண்டுதான் இருக்கிறார். அந்த மாதிரி தான் தற்போது இன்ஸ்டாகிராமில் இப்போது கருப்பு கலர் புடவையில் கலகலக்க வைக்கும் வகையில் தீயாக ஒரு சில போட்டோக்களை எடுத்திருக்கிறார். இந்த போட்டோக்களை பார்த்ததும் ரசிகர்களின் மனம் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளமே கதிகலங்கி தான் போயிருக்கிறது. போட்டோவை பார்த்ததும் ரசிகர்கள் கமெண்டுகளை பூப்போல தூவுகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications