நடிகை செம்மீன் ஷீலாவின் மகன் நான்! எந்த இடத்திலும் இதை சொல்ல மாட்டேன்! நடிகர் ஜார்ஜ் உருக்கம்
சென்னை: சினிமா திரையுலகில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நாயகியாக விளங்கியவர் செம்மீன் ஷீலா. இலக்கிய நாவல்கள் திரைப்படங்களாக மாற்றப்பட்ட காலகட்டத்தில், அந்தப் படங்களில் பெரும்பாலும் கதாநாயகியாக நடித்தவர் ஷீலா என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிப்பு முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரங்களிலேயே பெரும்பாலும் அவர் நடித்திருந்தார்.
திருமணத்திற்குப் பிறகு, குறிப்பாக மகன் மீது கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக நடிகை ஷீலா திரைப்படங்களில் இருந்து ஒதுங்கினார். சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு 'மனசின்னக்கரை', 'அகலே' போன்ற படங்களின் மூலம் அவர் வலுவான மறுபிரவேசம் செய்தார். முக்கியத்துவமில்லாத கதாபாத்திரங்களை அவர் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் அவரது திரைப் பயணத்தின் தனிச்சிறப்பு.

தமிழிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். இப்போதுள்ள தலைமுறையினர்களுக்கும் தெரியும் படம் என்றால் சந்திரமுகி படத்தை சொல்லாம். சந்திரமுகி படத்தில் அகிலாண்டேஸ்வரி என்று கேரக்டரில் செம்மீன் ஷீலா நடித்திருந்தார். அதுபோல பட்ஜெட் பத்மநாதன் படத்திலும் நடித்திருப்பார்.
இந்த நிலையில், சமீபத்தில் நடிகர் ஜார்ஜ் விஷ்ணு, நடிகர் ஸ்ரீயுடன் இணைந்து அளித்த பேட்டி தற்போது கவனம் பெற்றுள்ளது. அந்த பேட்டியில், தனது குடும்ப பின்னணி குறித்து ஜார்ஜ் விஷ்ணு வெளிப்படையாக பேசியுள்ளார்.
"என்னுடைய அம்மா செம்மீன் ஷீலா என்பதையும், அப்பா நடிகர் ரவிச்சந்திரன் என்பதையும் நான் எங்கும் வெளியே சொல்லிக் கொண்டது கிடையாது. இருவரும் சினிமாவில் இருந்தாலும், அந்த அடையாளத்தை வைத்து எனக்கு ஒரு பெயர் வர வேண்டும் என்று நினைக்கவில்லை. நமக்கென தனி அடையாளம் இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் எங்கும் இவர்களுடைய மகன் என்று சொல்லி வாய்ப்பு தேடியது இல்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நீண்ட காலத்திற்கு பிறகு தனது பழைய நண்பர்களை சந்தித்த அனுபவம் குறித்து பேசும் போது, அது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்ததாகவும் கூறினார். பள்ளி கால நினைவுகளை பகிர்ந்த அவர், நடிகர் சூர்யா குறித்து நகைச்சுவையாக பேசினார்.
"நடிகர் சூர்யா ஆரம்பத்தில் என்னுடைய ஜூனியராக தான் பள்ளியில் படித்தார். பிறகு அவர் என்னை விட முன்னேறி சீனியராகிவிட்டார். நான் படிப்பில் அதிக கவனம் செலுத்தாததால் ஒரே கிளாசில் பல வருடங்கள் படித்துக் கொண்டிருந்தேன்" என்று சிரித்தபடி கூறினார்.
இதற்கிடையே, தமிழ் திரையுலக பத்திரிகையாளர் செய்யாறு பாலு, ஷீலா குறித்து சமீபத்தில் பேசிய போது, "எவ்வளவு புகழ் பெற்ற நடிகையாக இருந்தாலும், தனது மகன் திரையுலகில் பெரிய இடத்தைப் பெற முடியாமல் போனது ஷீலாவை உள்ளுக்குள் வருத்துகிறது" என்று தெரிவித்துள்ளார்.
'காதல் ரோஜா' திரைப்படத்தில் ஜார்ஜ் விஷ்ணு நடித்திருந்தாலும், அந்த படம் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு அவர் சில சிறிய கதாபாத்திரங்களிலேயே நடித்ததாகவும் செய்யாறு பாலு குறிப்பிட்டார். ஒரு அம்மாவாக மகனுடன் நேரம் செலவிட வேண்டும் என்பதற்காகவே சினிமாவை விட்டு விலகினேன் என்றும், செட்டில் இருந்தபோது மகனுக்கு ஏதாவது நடந்தால் உடனே வீட்டிற்கு ஓடிச் சென்ற தருணங்கள் உள்ளன என்றும் நடிகை ஷீலா முன்பு பேட்டிகளில் பகிர்ந்திருந்தார்.
தற்போது 78 வயதைக் கடந்தும், செம்மீன் ஷீலா மலையாள சினிமாவில் மரியாதைக்குரிய இடத்தை தக்க வைத்திருக்கிறார். தாய் ஷீலாவின் புகழை பயன்படுத்தாமல், தனிப்பாதையில் பயணிக்க முயன்ற ஜார்ஜ் விஷ்ணுவின் பேச்சு, ரசிகர்களிடையே பேசுபொருளாகி வருகிறது.
-
அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய பாரதிராஜா.. தன்னம்பிக்கை மனிதனின் எழுச்சி! லீக்கான போட்டோஸ் -
சங்கீதா சொன்னது தான் உண்மையா? விஜயின் சொத்து பட்டியலை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள்! அடுத்த பஞ்சாயத்து -
அறந்தாங்கி நிஷா ஓபனாக சொன்ன ஒரு வார்த்தை.. அறிவே இல்லையா இப்படியா பேசுறது? மேடையிலேயே திட்டிய நடிகர் -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பிரதமர் நடித்த ஒரே படம் அமைதிப்படை தான்.. அதுவும் இந்த காட்சியை மறக்க முடியுமா? சத்யராஜ் சர்ச்சை பேச்சு -
Happy Raj OTT: ஓடிடிக்கு வரும் ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ்... எந்த தளத்தில், எப்போ பார்க்கலாம்? லீக்கான தகவல் -
நடிகர் பிரகாஷ் ராஜின் அம்மா திடீர் இறப்பு.. இவ்வளவு பெரிய சோகங்களை கடந்து வந்தவரா அவர்! நெகிழ வைத்த கதை -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா?












Click it and Unblock the Notifications