சீரியலில் மட்டுமல்ல நிஜத்திலும் தான்.. அம்மாவாக போகும் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்ட சன் டிவி நடிகை
சென்னை: சன் டிவி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் அனு தற்போது சீரியலில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியை ரசிகர்களோடு பகிர்ந்துள்ளார்.
பாண்டவர் இல்லம் சீரியலில் ரோஷினி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் அனு சீரியலில் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ஒளிபரப்பாகி ஒரு சில நாட்களில் இவரும் நிஜ வாழ்க்கையிலும் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.

சீரியல் வில்லி
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் சீரியல் மூலமாக சின்னத்திரையில் அடி எடுத்து வைத்த அனு விஜய் டிவி மட்டுமல்லாமல் ஜீ தமிழ், சன் டிவி என பல முக்கிய சேனல்களில் சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் சீரியலில் ரோஷினி கேரக்டரில் அனு நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவருடைய வில்லத்தனமான நடிப்பு பார்த்து பலரும் வெறுப்படைந்து வந்தாலும் இவர் இதற்கு முன்பு நடித்த சீரியல்களில் இவரை பார்த்த ரசிகர்களுக்கு இது கொஞ்சம் குறைவு தான் என்று கூறி வருகிறார்கள்.

நிஜத்தில் வேறு மாதிரி
ஜீ தமிழில் ஒளிபரப்பான மெல்ல திறந்தது கதவு என்னும் சீரியலில் இவருடைய மிரட்டலான வில்லத்தனம் பலரையும் வெறுப்படையவும், மிரண்டு போகவும் செய்திருந்தது. இவருடைய சீரியலை பார்த்து பல ரசிகர்கள் இவரை திட்டி வந்தாலும் நிஜ வாழ்க்கையில் இவர் ஒரு குழந்தைத்தனமாக தான் இருந்து வருகிறாராம். அதனால் தான் இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் இவருடைய துறுதுப்பான கேரக்டரையும், ஜாலியான நடவடிக்கைகளையும் பார்த்த ரசிகர்கள் சீரியலில் வரும் அவரா இவர் என்று பலரும் கேள்விகளை எழுப்பி வந்தார்களாம்.

காதல் திருமணம்
அனு நிஜ வாழ்க்கையிலும் விக்னேஷ் என்ற விக்கி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். திருமணத்திற்கு பிறகும் சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்தாலும் இவர்கள் இருவரும் ஜாலியாக எடுக்கும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி பதிவிட்டு வருவார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் ரீல்ஸ் வீடியோக்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருவார். இதனால் சீரியலை தாண்டியும் இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.

மகிழ்ச்சியான செய்தி
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் சீரியல் அண்ணன் தம்பி கதையை மையமாகக் கொண்டது. இதில் ரோஷினி கேரக்டரில் வில்லியாக அறிமுகமான அணு தற்போது நல்ல மருமகளாக மாறி குடும்ப ஒற்றுமைக்காக பாடுபட்டு வருவதாக காட்டப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இவர் சீரியலில் கர்ப்பமாக இருக்கிறாராம். சீரியலில் இவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியை கூறிய அடுத்த ஒரு சில நாட்களில் இவரும் நிஜ வாழ்க்கையில் கர்ப்பமாக இருப்பது உறுதியாகி உள்ளதாம். தற்போது அணு நான்காவது மாதம் கர்ப்பமாக இருக்கிறாராம். தற்போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களோடு மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

அனு மகிழ்ச்சி அண்ணாச்சி
அணு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "ஹாய் மை இன்ஸ்டா ஃபேமிலி, உங்கள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த தேவதையை என் வயிற்றில் சிறிது காலம் ஆக ரகசியமாக வைத்திருக்கிறேன். என் கனவுகளின் மனிதனுடன் இதுவரை நான் இந்த மகிழ்ச்சியை உணர்ந்ததில்லை. என் இனிய கணவருக்கு அவரது வாழ்க்கையின் சிறந்த பரிசை வழங்க போகிறேன். நாங்கள் பெற்றோராக போகிறோம். கடவுளின் கிருபையால் நாலாவது மாதத்தில்..."என்று கூறியிருக்கிறார் இந்த போஸ்ட் பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை நடிகைகளும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications