செல்லம்மா சீரியல் நடிகை அன்ஷிதாவை மனைவி என்று கூறும் அர்ணவ்..கதறும் செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா
சென்னை: செல்லம்மா டிவி சீரியல் நடிகை அன்ஷிதாவை மனைவி என்று கூறிக்கொண்டு தனது கணவர் அர்ணவ் தன்னை தவிர்ப்பதாக செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா கண்ணீர் மல்க குற்றம் சாட்டியுள்ளார். ஒரே வீட்டில் இருந்தாலும் தன்னை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்பது திவ்யாவின் புகார்.
சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி சீரியல்தான் அர்ணவ், திவ்யாவை இணைத்து வைத்தது. நட்பு காதலாகி ஒரே வீட்டில் லிவ் இன் வாழ்க்கை வாழ்ந்தனர்.
கொரோனா காலத்தில் டிவி சீரியல் சூட்டிங் நிறுத்தப்பட்டாலும் மகராசி டிவி சீரியல் மூலம் சன்டிவியில் நடித்து வந்தார் திவ்யா. அந்த சீரியலில் இருந்து பாதியில் விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

செவ்வந்தி vs செல்லம்மா
சன் டிவியில் மீண்டும் செவ்வந்தி சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அர்ணவ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா டிவி சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். அர்ணவ் யாருக்கு என்பதில்தான் இப்போது செல்லம்மாவிற்கும் செவ்வந்திக்கும் இடையேதான் இப்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

சீரியலில் இரு தாரங்கள்
பெரும்பாலான டிவி சீரியல்களில் எல்லாம் இரண்டு தாரங்கள் இருப்பது சர்வ சாதாரணமாகி விட்டது. இரண்டு பெண்களை காதலிப்பது, இரண்டு பெண்களை திருமணம் செய்வது என்பது போல காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதை நிஜ வாழ்க்கையிலும் நடைமுறைப்படுத்தி விட்டார் அர்ணவ் என்பது திவ்யாவின் குற்றச்சாட்டு.

மதம் மாறினேன்
அர்ணவ் சொன்னார் என்பதற்காக தான் முஸ்லீம் மதத்திற்கு மாறியதாகவும், தன்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாகவும் கண்ணீருடன் கூறியுள்ளார் திவ்யா. வேறு சீரியலில் கூட நடிக்கும் அஞ்சிதா உடன் நெருங்கி பழகி வரும் அர்ணவ், கர்ப்பமாக இருக்கும் தன்னை வெறுத்து ஒதுக்குவதாகவும் கூறியுள்ளார். திருமணம் நடத்தது பற்றியும் கர்ப்பமானது பற்றியும் இதுவரை அர்ணவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போடவில்லை என்றும் கூறியுள்ளார்.

மனைவி என்று கூறும் அர்ணவ்
உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் அர்ணவை தேடி அன்ஷிதா இருக்கும் அபார்ட்மென்ட் சென்ற போது, அங்கே இருவரும் கணவன் மனைவியாக வாழ்க்கை நடத்துவது தெரியவந்தது. அங்கிருக்கும் வாட்ச்மேன், அஞ்சிதாவை அர்ணவின் மனைவி என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார் திவ்யா. நான்தான் அவரது மனைவி என்று கூறினேன்.

எனக்கு நியாயம் வேண்டும்
என்னுடைய குடும்பத்தினரை எல்லாம் அவருக்காக விட்டுக்கொடுத்து விட்டு வந்தேன். ஆனால் என்னை இப்போது ஒதுக்கி விட்டார். என்னுடைய ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் எல்லாவற்றையும் பிளாக் செய்து விட்டார் அர்ணவ். இதற்கெல்லாம் காரணம் அந்த பெண்ணுடனான தொடர்புதான். எங்கள் மதத்தில் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று அர்ணவ் கூறியதாகவும் திவ்யா தெரிவித்துள்ளார். என் கணவருக்கு அஞ்சிதா மீதுதான் ஆசை அதிகரித்து விட்டது. என்னைப்பற்றி அஞ்சிதா அசிங்கமாக பேசியதை நான் ரெகார்ட் செய்து வைத்துள்ளேன் என்றும் திவ்யா தெரிவித்துள்ளார்.

உடல் நலம் பாதிப்பு
எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். வயிற்றில் குழந்தை சிக்கலாக இருக்கிறது ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். எந்த நேரத்திலும் கரு கலைய வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த நிமிடம் வரைக்கும் நான் எப்படி இருக்கிறேன் என்று அர்ணவ் விசாரிக்கவில்லை. குழந்தை மீது அர்ணவிற்கு அக்கறை இல்லை. அவர்தான் நாடகமாடுகிறார் என்று கூறியுள்ளார் திவ்யா. நான் தனி ஆளாக போராடி வருகிறேன் எனக்கு நியாயம் வேண்டும் என்றும் கூறியுள்ளார் திவ்யா.
-
Gold Rate Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,120 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு? -
வங்கிக் கணக்கில் மேலும் ரூபாய் 6,000.. BLO ஊதியம் டபுள் மடங்கு ஆனது.. ஊக்கத்தொகையும் உயர்வு! -
வெயில் மண்டையை பொளக்கப்போகுது.. வார்னிங் கொடுத்த வானிலை மையம்! இந்த மாவட்டங்கள் உஷார் -
DMK Alliance: 42/234! இதுவரை திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு? -
"ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை.." சென்னையில் மூடப்படும் பெட்ரோல் பங்குகள்.. உண்மையில் என்ன காரணம்! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி?












Click it and Unblock the Notifications