காயின் விஷயத்தில் தாமரை பிளான் பண்ணி தான்... நிஜத்தில் நடந்தது இதுதான்..உண்மையை உடைத்த சுருதி
சென்னை: காயின் விஷயத்தில் தாமரை அதை பெரிசு பண்ணுவதற்கு பிளான் பண்ணித்தான் அப்படி செய்தார் என்று சுருதி தெரிவித்துள்ளார்.
அந்தப் பிரச்சனை காலையில் நடந்து முடிந்து விட்டது. ஆனால் அதைப்பற்றி பேச்சுக்கள் மதியம் தான் வெளியே வந்தது என்று கூறியிருக்கிறார்.
தாமரைக்கு தவறாக தெரிந்தது என்றால் அதை உடனே அனைவரிடம் கூறியிருக்கலாம் எதற்காக இவ்வளவு நேரம் யோசித்து செயல்பட வேண்டுமென்று ரசிகர்களும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

மறக்கமுடியாத காயின் டாஸ்க்
பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் ஒவ்வொரு சீசனிலும் புதுசு புதுசாக பல பிரச்சனைகள் பூதாகரமாக வெடித்து வருகிறது. அந்த மாதிரி தான் தற்போது கூட ஐந்தாவது சீசனில் அனைவரையும் அதிர வைத்த ஒரு பிரச்சனை என்றால் அது காயின் டாஸ்க்கில் தாமரை மற்றும் சுருதி, பாவனியின் இடையே நடந்த பிரச்சனைகள் தான். பலருக்கும் மறக்க முடியாததாக இருந்து வருகிறது. இந்த சீசனில் இதுவரைக்கும் இல்லாத வகையில் அந்தப் பிரச்சனை ஒன்று தான் இப்ப வரைக்கும் பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது.

சுருதி வெளியிட்ட நிகழ்வு
காயின் பிரச்சனையில் ரசிகர்கள் அதிகமானோர் தாமரைக்கு சப்போர்ட் செய்து கொண்டிருக்கும் போது, அதில் குற்றவாளிகளாக ரசிகர்களால் கருதப்படும் சுருதி மற்றும் பாவனி இவர்கள் இருவரில் சுருதி தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி விட்டு வெளியே வந்து விட்டார். அவர் வெளியே வந்த பிறகு அந்த நிகழ்ச்சியில் அன்று நடந்த நிகழ்வுகளை பற்றி பேசியிருக்கிறார். அதை பார்த்ததும் ரசிகர்கள் அட இப்படி நடந்ததை நம்மிடம் வேற மாதிரி காட்டி விட்டார்களோ என்று பலர் குழப்பத்தில் இருக்கின்றனர்.

இவ்வளவு வித்தியாசம் இருக்கா??
விளையாட்டு என்றால் அதில் விளையாட்டுத்தனமாக இல்லாமல், போட்டியில் போட்டியாக விளையாட வேண்டும் என்று இவர் எடுத்த முடிவு இவருக்கு வினையாக முடிந்துவிட்டது என்று பலர் கருத்து தெரிவித்து கொண்டிருந்தனர். ஆனால் அந்த மாதிரி ஒரு பிரச்சனையும் அங்கு நடைபெறவே இல்லைய இது எல்லாமே பிளான் தான். காயின் டாஸ்க்கில் சம்பந்தப்பட்ட தாமரையிடம் இருந்து அந்தக் காயினை சுருதி காலை 8 மணி அளவில் எடுத்து விட்டாராம். ஆனால் அதை தெரிந்து கொண்டும் தாமரை அவ்வளவாக ரியாக்ட் எதுவும் செய்யாமல் அமைதியாக தான் இருந்திருக்கிறார். ஆனால் நேரம் செல்ல செல்ல தான் அவரால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று தன்னுடைய கோபத்தை காட்டி இருக்கிறார் என்று சுருதி கூறியிருக்கிறார்.

இதில் எது உண்மை
மதிய வேளையில் தான் இந்த பிரச்சனை வெளியே அனைவருக்கும் தெரிய ஆரம்பித்தது. அந்த நேரத்தில் சுருதி மற்றும் பாவனி இருவரும் தாமரையிடம் சென்று பேச முயற்சிகளை எடுத்துக் கொண்டிருந்தோம் என்று தங்கள் பக்கத்து நியாயங்களை ரசிகர்களுக்கு எடுத்துக் கூறியிருக்கிறார். இதை பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் அப்போ நாங்கள் எபிசோட்டில் பார்த்தது பொய்யா?? எங்களிடம் வேறு மாதிரிதான் காட்டிக் கொண்டு இருக்கிறார்களா??என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே 24 மணி நேரமும் எடுக்கும் வீடியோக்களை ஒரு மணி நேரத்தில் ஒளிபரப்புவது பல கட்டிங் வேலைகள் நடைபெறுவதால் அப்படித்தான் எதுவும் இதில் நடந்திருக்குமோ என்று பலர் கூறி வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications