Siragadikka aasai Serial: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. காரணம் இதுதானா? வருத்தத்தில் ரசிகர்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து கொண்டிருந்த நடிகை ராஜேஸ்வரி குடும்ப பிரச்சனை காரணமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து இருக்கிறார்.

சென்னை பிராட்வே ராயப்பன் முதலி தெருவை சேர்ந்த நடிகை ராஜேஸ்வரி சில ஆண்டுகளுக்கு முன்பு சதிஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஹேமந்த் குமார் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவர் சதீஷ் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக நடிகை ராஜேஸ்வரிக்கும் அவருடைய குடும்ப கணவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி கணவன் மனைவி இருவருக்கும் வழக்கம்போல தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக மறுநாள் காலை நடிகை ராஜேஸ்வரி கணவரிடம் கோபித்துக் கொண்டு சைதாப்பேட்டை விஐபி சாலையில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டிற்கு போய்விட்டார். கடந்த மூன்று நாட்களாக மன உளைச்சலில் இருந்த ராஜேஸ்வரி நேற்று இரவு அம்மா வீட்டில் வைத்து அதிகமான ரத்த அழுத்தம் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.

பிறகு சிறிது நேரத்திலேயே அவர் மயக்கம் போட்டு விழுந்து விட, அதை கண்டதும் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக முதலில் கிண்டியில் உள்ள கலைஞர் அரசு மருத்துவமனையில் அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் அவர் மேல் சிகிச்சைக்காக கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார். தொடர்ந்து சிகிச்சை நடந்து வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி மரணம் அடைந்திருக்கிறார். இதுகுறித்து போலீசார் வழக்கு விசாரணை செய்து வருகிறார்கள்
சிறகடிக்க ஆசை சீரியலில் ராஜேஸ்வரி அருணின் அம்மாவாகவும், கதாநாயகி மீனாவின் தங்கை சீதாவின் மாமியாராகவும் நடித்துக் கொண்டிருந்தார். அவர் சிறகடிக்க ஆசை சீரியலில் மட்டுமல்லாமல் பாக்கியலட்சுமி சீரியலிலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்லாரும் மன்னிச்சிருங்க.. வாழ்க்கையில் நடந்த சோகம்! உருக்கமாக பேசிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
Top 10 Serial: இந்த வார டாப் 10 சீரியல்கள்.. பின்னுக்கு போன எதிர்நீச்சல், மாஸ் காட்டும் அழகே அழகு சீரியல் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி












Click it and Unblock the Notifications