சிறகடிக்க ஆசை: ரோகிணியை காப்பாற்றிய முத்து.. அதிர்ச்சி கொடுத்த விஜயா! மீனா மீது விழுந்த பழி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial Feb 28 Episode) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 பிப்ரவரி 28ஆம் தேதி கான இன்றைய எபிசோடில், ரோகிணி போட்டிருந்த பிளானில் சிக்கிக்கொண்ட மனோஜ் எப்படி வெளியே வருகிறார் என்பதுதான் முழு கதை. அதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோடு
சிறகடிக்க ஆசை சீரியலில் எபிசோடில் (Siragadikka Aasai serial today episode) ரோகிணி ஹோட்டலுக்கு அழைத்து வந்து ரூமுக்குள் வைத்துவிட்டு, தான் கொடுத்த பேப்பரில் கையெழுத்து போடவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டுகிறார். வெளியே போக முடியாத நிலையில் மனோஜ் பாத்ரூமுக்குள் சென்று விஜயாவுக்கு போன் செய்து நடந்ததை எல்லாம் சொல்லிவிடுகிறார். விஜயாவும் அவரைத் திட்டி விட்டு, இதை வீட்டில் இருந்த முத்து, மீனா, அண்ணாமலை எல்லாரிடமும் சொல்ல, முத்து - மீனா உடனே அந்த ஹோட்டல் எது என்று கேட்டு கிளம்புகிறார்கள்.
ரோகிணியின் கண்டிஷன்
இதற்குள் ரோகிணி, "உங்க அம்மாவுக்கு போன் பண்ணி இங்க வர வேண்டாம் என்று சொல்லு... இல்லன்னா இப்பவே நான் தூக்கில் தொங்கிடுவேன்" என்று மீண்டும் பிளாக்மெயில் செய்கிறார். அவர் சொல்லியபடியே மனோஜ் விஜயாவுக்கு போன் செய்து வர வேண்டாம் என்று சொல்கிறார். ஆனால் அவன் பேசும் விதத்திலேயே ஏதோ சரியில்லை என்று முத்துவுக்கும் மீனாவுக்கும் புரிந்து, அவர்கள் ஹோட்டலுக்கு போகின்றனர்.
அதன்பிறகு ரோகிணி, "நாம் இருவரும் சேர்ந்து வாழ சம்மதம்" என்று எழுதியுள்ள பத்திரத்தில் கையெழுத்து போட சொல்கிறார். மனோஜ் அதற்கு முடியாது என்று மறுக்கிறார். உடனே தூக்கில் போகிறேன் என்று நாடகம் ஆரம்பிக்கிறார்.

முத்து செய்த செயல்
அந்த நேரத்தில் ரூம் கதவை தட்டும் சத்தம் கேட்கிறது. ரோகிணி கதவை திறக்க முடியாது நான் சாகப் போறேன் என்று மிரட்டிக்கொண்டிருக்கும் போது கிரிஷ் அம்மா என்று கூப்பிட, ரோகிணி கதவை திறக்கிறார். வெளியே கிரிஷ் மட்டும் நின்றிருக்கிறார். அடுத்த நிமிஷம் முத்து, மீனா உள்ளே வந்துவிடுகிறார்கள். மனோஜை பார்த்ததும் செம திட்டு வாங்குகிறார். ரோகிணியையும் இப்படிப்பட்ட சீப்பான வேலைகள் செய்யாதே என்று திட்டிவிட்டு, மனோஜை அங்கிருந்து அழைத்து செல்கிறார் முத்து.
மீனாவை குறை சொன்ன விஜயா
வீட்டில், மனோஜ் ஒருவேளை கையெழுத்து போட்டுட்டானோ என்று விஜயா பதறிக் கொண்டிருக்கிறார். அதற்குள் முத்து, மீனா மனோஜை வீட்டுக்கு கொண்டு வருகிறார்கள். வீட்டில் உள்ளவர்கள் எல்லாரும் மனோஜை திட்டுகிறார்கள். ஆனால் விஜயா மட்டும் இந்த பிரச்சனைக்கு காரணம் மீனா தான்... அவள் இந்த வீட்டில் இருக்கிறதால்தான் இப்படி நடக்குது என்று மீனாவை குறை சொல்லுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: கோமதி எடுத்த முடிவால் கலங்கி நிற்கும் குடும்பம்.. பாண்டியனுக்கு பெரிய தண்டனை! இது தேவைதான் -
குலதெய்வ கோவிலில் கணவருடன் மகிழ்ச்சியை பகிர்ந்த மணிமேகலை.. அடடா சூப்பர்! குவியும் வாழ்த்துக்கள் -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications