சிறகடிக்க ஆசை: போதையில் ரகசியத்தை உளறிய மனோஜ்.. கையில் கட்டுடன் வந்த சீதா.. முத்து எடுத்த அதிரடி முடிவு
சென்னை: (Siragadikka Aasai serial today episode) விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் 2026 பிப்ரவரி 5ஆம் தேதிக்கான எபிசோடில் ரசிகர்களை உணர்ச்சிப்பூர்வமாகவும், ட்விஸ்ட் நிறைந்ததாகவும் இருந்தது. ரவியும், மனோஜும் தங்களுடைய மனக்கவலையை முத்துவிடம் சொல்லி இருக்கின்றனர். அதுபோல ரோகிணியின் புதிய சதி தீட்டுகிறார், இறுதியில் சீதாவை பார்த்து மீனா அதிர்ச்சி அடைகிறார், இப்படியாக பல முக்கிய சம்பவங்கள் நடந்தன.
(Siragadikka Aasai serial 5 February 2026 ) எபிசோடு தொடங்கும் போதே, ரவி தன்னால் நடந்த தவறுகளை நினைத்து மனமுடைந்து, முத்துவிடமும் மீனாவிடமும் மன்னிப்பு கேட்கிறார். அப்போது ரவியின் பாக்கெட்டில் இருந்து பாட்டில் சத்தம் கேட்க, மீனாவுக்கு சந்தேகம் வருகிறது. தொடர்ந்து ரவி, மனோஜ் இருவரும் தனியாக கிளம்ப, முத்துவும் மீனாவிடம் அனுமதி கேட்டுவிட்டு அவர்களுடன் சேர்ந்து மாடிக்கு போகிறார்.

மாடியில் சரக்கு
முதலில் ரவியும், மனோஜும் மட்டும் குடித்துக் கொண்டிருக்கின்றனர். முத்து வேண்டாம் என்று சொன்னாலும் ரவி சென்டிமெண்டாக பேசுவதால் முத்துவும் குடிக்க தொடங்கி விடுகிறார். பிறகு மூவரும் மொட்டை மாடியில் உட்கார்ந்து சரக்கு அடித்தபடி, தங்களுக்குள் இருக்கும் மனக்கவலைகளை வெளிப்படையாக பேசிக்கொள்கிறார்கள்.
ரவியோ, "என் பொண்டாட்டி ஸ்ருதி திரும்பி வரணும்" என்று கண்ணீர் விட்டபடி புலம்புகிறார்.
மனோஜ் அதற்கு நேர்மாறாக, "என் பொண்டாட்டி வரவே வேண்டாம்... எப்படியாவது டைவர்ஸ் வாங்கிட்டா போதும்" என கடுப்பாக பேசுகிறார். இந்த இடத்தில் குடிபோதையில் மனோஜ், ரோகிணி தன்னை ரொமான்டிக்கா போன் செய்து தன்னை மயக்க முயற்சி செய்த விஷயத்தையும் முத்துவிடம் உளறிவிடுகிறார்.
அதைக் கேட்ட முத்து, "பார்லர் அம்மா இப்படி எல்லாம் உன்னை மயக்க பாக்குதா? கவலைப்படாத... சீக்கிரமே டைவர்ஸ் கிடைக்கும்" என்று மனோஜுக்கு நம்பிக்கை கொடுக்கிறார். இதை முத்து வக்கீலிடமோ, விஜயாவிடமோ சொல்வாரா என்பதும் சஸ்பென்ஸாக விடப்படுகிறது.
முத்துவிடம் மனம் திறந்த ரவி
அடுத்த நாள், ரவி தன்னால் முத்துவை சந்தேகப்பட்டதை நினைத்து மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார். அதற்குப் பரிகாரமாக, முத்துவுக்காக ஸ்பெஷலாக சாப்பாடு செய்து கொண்டு வந்து கொடுக்கிறார். "உன்னை சந்தேகப்பட்டதே எனக்கு ரொம்ப கில்டியா இருக்கு" என்று ரவி மனம் திறந்து பேச, முத்துவோ, என்ன நடந்தாலும் நீ என் தம்பிதான். என் பாசம் உன் மேல எப்போதும் மாறாது என்று ரவியை சமாதானப்படுத்துகிறார். இந்த காட்சி ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ரோகிணியின் புதிய நாடகம்
இதற்கிடையில், மனோஜை தன் வலையில் சிக்க வைக்க ரோகிணி புதிய திட்டம் போடுகிறார். சிந்தாமணியின் அடியாளை வைத்து, மனோஜ் ஃப்ரெண்ட் சந்தோஷுக்கு போன் செய்து, "ரோகிணி இன்னொரு ஆளோடு பார்க்கில் தினமும் நெருக்கமாக பேசிக்கிட்டு இருக்காங்க. ஆனா இதை மனோஜிடம் சொல்ல வேண்டாம்" என்று தகவல் சொல்ல வைக்கிறார். ஆனால் இந்த விஷயம் மனோஜ் காதில் விழுந்துவிட, உண்மை என்ன என்று நேரில் போய் பார்க்க வேண்டும் என்று பதற்றமாக முடிவு செய்கிறார். இதனால் ரோகிணி போட்ட சூழ்ச்சியில் மனோஜ் சிக்குவாரா? என்ற கேள்வியும் எழுகிறது.
சீதாவை பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனா
எபிசோடின் கடைசியில், சீதா தன் அம்மா வீட்டுக்கு வந்து அழுதபடி உட்கார்ந்திருப்பதை மீனா பார்க்கிறார். சீதாவின் கையில் கட்டும், முகம் முழுக்க வீக்கமும் இருப்பதை கவனித்த மீனா, "என்னாச்சு?" என்று கேட்கிறார். சீதா எதுவும் சொல்லாமல் அழுதபடியே நிற்க, அவளை இந்த நிலைக்கு கொண்டு வந்தது அருண் தான் போல என்று கதை போகும் விதம் காட்டப்படுகிறது. இப்படியாக இன்றைய எபிசோடு முடிகிறது.
-
குலதெய்வ கோவிலில் கணவருடன் மகிழ்ச்சியை பகிர்ந்த மணிமேகலை.. அடடா சூப்பர்! குவியும் வாழ்த்துக்கள் -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள்












Click it and Unblock the Notifications