சிறகடிக்க ஆசை: அருண் வைத்த பிரஸ் மீட்டிங்.. ஆடிப்போன முத்து.. மீனாவுக்கு எதிராக திரும்பிய சீதா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜூன் 12-ம் தேதிக்கான எபிசோடில் ஒரு திருடனை பிடித்த விவகாரத்தில் அருண் பொய் சொல்ல அதனை கேட்டு முத்து கோபம் ஆகிறார். அதே நேரத்தில் மீனாவிடம் சீதா வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் அருண் சீதாவுக்கு போன் செய்து தனக்கு பிரமோஷன் கிடைக்க போகும் விஷயத்தை சொல்கிறார். அதை கேட்டதும் சீதா சந்தோஷமாக அவருடைய அம்மா மற்றும் மீனாவிடம் அதைப்பற்றி சொல்ல, அதற்கு மீனாவின் அம்மா இப்ப எதுக்கு அவரை இங்க வர சொன்ன? அதான் செட்டாகாதுன்னு சொல்லிட்டோமே அதற்கு அதோடு மாப்பிள்ளைக்கு பிடிக்கலைன்னா இங்கே எதுவும் நடக்காது என்று சொல்லிவிட்டு பூ கொடுக்க கிளம்புறேன் என்று கிளம்பி விடுகிறார்.

சீதாவின் அம்மா முடிவு
அம்மா போனதும் மீனா எதுவும் பேசாமல் இருக்க, சீதா மீனாவிடம் அப்பா மட்டும் இருந்திருந்தால் எனக்கு புடிச்ச வாழ்க்கையை முடித்து தந்து இருப்பாரு. எனக்கு தடையாக இருக்க மாட்டார், நீ கூட எனக்காக இப்ப பேச மாட்டியா அக்கா? என்று கேட்க, அதற்கு மீனா இப்போ என்னால பேச முடியாத நிலைமையில் இருக்கிறேன் என்று பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் அருண் கோவிலுக்கு வருகிறார்.
வாக்குவாதம் செய்த சீதா
அங்கு மீனாவிடம் பேசும்போது நான் அந்த திருடனை பிடிப்பதற்கு உங்க கணவரும் சேர்ந்து தான் எனக்கு உதவி பண்ணினாரு என்று நடந்த விஷயத்தை சொல்கிறார். வீட்டில் அம்மா பெண் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க, அவங்களும் இவ்வளவு பேசி பார்த்துட்டாங்க இப்ப அவங்களுக்கு நம்பிக்கை போயிடுச்சு அதனாலதான் இந்த முடிவுக்கு வந்துட்டாங்க, உங்க புருஷன் என்ன பழிவாங்க பாக்குறார். நான் அந்த மாதிரி ஆளு கிடையாது.
அருண் சொன்ன விஷயம்
ஆனா இந்த ஜென்மத்தில் சீதாவை தவிர நான் வேற யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போய் விடுகிறார். மறுபக்கத்தில் அருண் பிரஸ் மீட்டிங் வைத்து அவர் மட்டும் அந்த திருடனை பிடித்தது போல பேட்டி கொடுத்து இருப்பதை செல்வமும் அவருடைய நண்பர்களும் பார்த்து அருணை பாராட்டுகின்றனர். பிறகு அந்த வீடியோவை முத்துவிடம் காட்ட முத்து கோபமாகி நடந்த விஷயத்தை எல்லாம் சொல்கிறார்.
முத்து கேட்ட கேள்வி
அப்போது செல்வம் அப்போ ஏன் இந்த அருண் இப்படி நடிக்கிறான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். உடனே முத்து அருணுக்கு போன் செய்து நீதான் அந்த அம்மாவை காப்பாத்துனியா? நான்தானே அந்த நேரத்தில் சாமர்த்தியமா செயல்பட்டு அந்த திருடனை பிடித்தேன் ஆனால் நீயே ஏதோ சாதிச்சது போல பேட்டி கொடுக்கிற என்று முத்து கேட்க, நான் சொல்ல வேண்டிய இடத்தில் உண்மையை சொல்லிட்டேன் என்று போனை கட் பண்ணி விடுகிறார். இதனால் முத்து கோபம் ஆகிறார்.
உண்மை உடைந்தது
அப்போது செல்வம் அவரை சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார். மறுபக்கத்தில் ரோகிணி சொன்ன ரெஸ்டாரண்டுக்கு மனோஜ் போய் உட்கார்ந்து இருக்கிறார். அப்போது ரோகிணி ஒரு ஆணிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து மனோஜ் கோபம் ஆகிறார். ஒரு கட்டத்தில் ரோகிணியிடம் நான் இன்னைக்கு உன்னை கையும் களவுமாக புடிச்சிட்டேன். இவன் தான் அந்த மகேஷா? எனக்கு தெரியாம இவன்கிட்ட தான் நீ பேசிட்டு இருக்கியா? உன்னை யாருக்கும் விட்டு தர மாட்டேன் என கோபமாக சொல்கிறார்.
மனோஜ் சொன்ன வார்த்தை
மனோஜ் பேசியதை கேட்டு ரோகிணி சிரித்துக் கொண்டு என் மேல உனக்கு இவ்ளோ பாசம் இருக்கு ஆனா நீ ஏன் என்ன விட்டு விலகி நிற்கிற? உங்க அம்மா சொன்னதுக்காக நீ இப்படி மாறிட்ட அதனாலதான் உன் வாயால் என் மீது உனக்கு இருக்கும் பாசத்தை வெளிப்படுத்த இப்படி பண்ணுனேன் என்று சொன்னதும் மனோஜ் இன்ப அதிர்ச்சி ஆகிறார். பிறகு எனக்கு உன்னை பிடிக்கும் ஆனால் எங்க அம்மா பேச்சை என்னால தட்ட முடியாது அம்மாவை சமாதானப்படுத்தணும்னா ஏதாவது சாமியார் சொன்னால் தான் நடக்கும் என்று சொல்ல, அதற்கு ரோகிணி இதைத்தான் ஏற்கனவே மீனாவும் ஸ்ருதியும் சொன்னாங்க அப்போ நீ ஓகே சொன்னா இதுக்கு ஒரு வழி பண்ணலாம் என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications