இந்த வாரம் பிக்பாஸிலிருந்து வெளியேறுவது இவர்தானா?? கடைசி நேரத்தில் பின்னடைவை சந்தித்த போட்டியாளர்
சென்னை: பிக் பாஸ் 5 வது சீசனில் ஆறாவது போட்டியாளராக வெளியேறுவது யார் என்று ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு தோன்றியிருக்கிறது.
இதுவரைக்கும் 5 போட்டியாளர்கள் வெளியே சென்றிருக்கும் நிலையில் இந்த வாரத்தின் கடைசி இடத்தில் இருக்கும் போட்டியாளர்களின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
விவரங்களை பார்த்ததும் ரசிகர்கள் இவரா?? இந்த வாரம் என்று கேட்டு வருகின்றனர்.

முதல் எதிர்பாராத வெளியேற்றம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் எலிமினேஷன் செய்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இது வரைக்கும் இல்லாத வகையில் இந்த ஐந்தாவது சீசனில் பதினெட்டு போட்டியாளர்கள் அறிமுகமாகி இருந்தனர். இந்த நிலையில் முதல் வாரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சில எதிர்பாராத காரணத்தால் நமிதா மாரிமுத்து வெளியேறிவிட்டார்.

முதல் எலிமினேஷன்
அவரைத் தொடர்ந்து முதல் எலிமினேஷனாக யார் வெளியேறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் நாடியா சிங் வெளியேறிவிட்டார். இது பலருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இவர் எப்படியும் இந்த நிகழ்ச்சியில் கடைசி வரைக்கும் இருப்பார் என்று அங்கு உள்ளே இருந்த அண்ணாச்சி முதல் பலரும் கூறி வந்த நிலையில் முதல் வாரத்தில் இவர் வெளியேறியது அவருடைய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது.

அபிஷேக் வெளியேற்றம்
மூன்றாவது போட்டியாளராக அபிஷேக் வெளியேறிவிட்டார். இவருடைய வெளியேற்றம் பலருக்கும் இப்ப வரைக்கும் ஏமாற்றமாக இருக்கிறது. இவர் இருந்த வரைக்கும் இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாகவும் சூடாகவும் இருந்தது என்று போட்டியாளர்கள் கூறிவந்த நிலையில் பல நெகட்டிவ் அரசு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட வேண்டும் என்று கூறி வந்த நிலையில் அவருக்கு குறைவான ஓட்டு அடிப்படையில் அவர் வெளியேறிவிட்டார்.

வெளியேறிய சுருதி
அபிஷேக்கை தொடர்ந்து சின்ன பொண்ணு வெளியேறி இருந்தார். இவரை தொடர்ந்து சுருதியோட வெளியேற்றம் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தது. அந்த வாரத்தில் சுருதி நன்றாகவே விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் கூறிக் கொண்டிருந்த நிலையில், சுருதிக்கு அதற்கு முன்பு தாமரையுடன் நடந்த தகராறு காரணமாக ரசிகர்களின் மத்தியில் இருந்த மதிப்பு குறைந்து விட்டது, அதனால் தான் குறைவான மதிப்பெண் கிடைத்தது அதனால் அவர் கடந்த வாரத்தில் வெளியேறிவிட்டார்.

கடைசி இடத்தில் அபிநய்
தற்போது ஆறாவது போட்டியாளராக யார் வெளியேறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்த வாரத்தில் ஓட்டுகளின அடிப்படையில் கடைசி இடத்தில் இப்ப வரைக்கும் அபிநய் தான் இருந்து வருகிறார் என்று செய்திகள் பரவி வருகிறது. கடைசி மூன்று இடங்களில் அபிநய் கடைசி இடத்திலும், அவருக்கு அடுத்ததாக பாவனியும், அவருக்கு அடுத்ததாக மதுமிதாவும் இருந்து வருகின்றனர். அதுபோல ராஜு இந்த வாரத்தில் முதலிடத்தில் அதிக மதிப்பெண்களை பெற்றிருக்கிறார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications