வானத்தைப்போல சின்ராசு கேரக்டரில் இனி நடிக்கப் போவது ஜீதமிழ் முத்துராசுவா???
சென்னை: சன் டிவியில் டி ஆர் பி யில் முதலிடத்தில் ஒளிபரப்பாகி வந்த வானத்தைப்போல சீரியலின் தொடர் மாற்றம் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே இப்போதுதான் தங்கச்சி கேரக்டரை மாற்றிவிட்டார்கள், அடுத்தது அண்ணனா?? என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.
சின்ராசு விலகி விட்டதால் அவரை சீரியலில் காணவில்லை என ஒருவாரமாக தேடிக் கொண்டிருக்கிறார்கள் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

குடும்ப கதை
சன் டிவியில் டி ஆர் பி யில் முதலிடத்தில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றான வானத்தைப்போல சீரியலுக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சீரியலின் கதை பல திரைப்படங்களில் வருவது போன்று இருந்தாலும் இந்த சீரியலுக்கு என்று தனித்துவமான ரசிகர்கள் பலர் இருந்து வருகின்றனர். அண்ணன், தங்கச்சி கதையை மையமாக கொண்டு இந்த சீரியலில் இருந்து வருவதால் குடும்ப பாங்காக இருக்கிறது என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ரசிகர்களுக்கு ஏமாற்றம்
திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் குடும்ப சீரியல்களை அதிகமாக ரசிக்கும் ரசிகர்களுக்கு இந்த சீரியலை நன்றாக பிடித்து விட்டது. ஆனால் தற்போது இந்த சீரியலில் நடந்து வரும் மாற்றங்கள் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சீரியல்களில் கதாநாயகனோ, கதாநாயகியோ மாற்றப்படுவது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. ஆனால் வெற்றிகரமான சீரியல்களில் அடுத்தடுத்து தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு கொண்டிருப்பது பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் சரி ஏமாற்றமாக தான் இருந்து வருகிறதாம்.

சின்ராசு மாரியாச்சா??
தங்கையின் மீது உயிரையே வைத்திருக்கும் அண்ணனாக தமன் குமார் சின்ராசு எனும் பெயரில் நடித்து வருகிறார். இந்த சீரியல் தொடங்கி தற்போது ஒரு வருடங்களை முடிவடைந்து இருக்கும் நேரத்தில் ஒரு வருட காலமாக அண்ணன் கேரக்டரில் தமன் குமாரை பார்த்து வந்த ரசிகர்கள் தற்போது அவருடைய மாற்றம் சீரியலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறிவருகின்றனர். ஏற்கனவே ஸ்வேதா கெல்கே துளசி கேரக்டரில் சின்ராசு வின் தங்கச்சியாக நடித்து வந்தார். தற்போது அவரும் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக மான்யா ஆனந்த் துளசி கேரக்டரில் நடித்து வருகிறார். துளசியின் மாற்றம் நல்லாவே இல்லை என்று ரசிகர்கள் ஃபீல் பண்ணி கொண்டிருக்கும்போது சின்ராசுவின் மாற்றமும் ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது.

ஜீதமிழ் முத்துராசு
தற்போது வரைக்கும் சின்ராசுவின் கேரக்டரில் யார் நடிக்கப் போகிறார் என்று ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்த நேரத்தில் தற்போது ஸ்ரீகுமார் நடிக்கப் போகிறார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. ஸ்ரீகுமார் ஏற்கனவே பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் கடைசியாக ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் நடித்து இருந்தார். தற்போது அந்த சீரியல் முடிவடைந்த பிறகு எந்த சீரியல்களிலும் நடிக்காமல் இருந்த இவர் வானத்தைப்போல சீரியலில் சின்ராசு கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என்ற செய்தியை கேட்டு ரசிகர்கள் இனி ஜீதமிழ் முத்துராசு தான் சன்டிவி சின்ராசுவா??என்று கலாய்த்து வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications