தமிழிசை மேடம்கிட்ட இருந்து.. ரொம்ப சந்தோஷமா இருக்கு.. பூரிப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் "தனம்"!
சென்னை: சின்னத்திரை சீரியலில் நடித்த சுஜிதாவுக்கு இப்படியொரு விருதா? அதுவும் ஆளுநர் தமிழிசை கைகளால்! மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார் சுஜிதா.
சுஜிதா குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்தவர். 41 நாட்கள் குழந்தையாக இருக்கும் போதே முந்தானை முடிச்சு படத்தில் அறிமுகமானவர். இவர் பூவிழி வாசலிலே படத்திலும் நடித்துள்ளார். இதில் வாய் பேச முடியாத குழந்தையாக லா.. லா.. லா என நடித்திருந்தார்.
அதன்பின்னர் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சுஜிதா, பின்னர் திருமணம், குழந்தை என செட்டிலாகிவிட்டார். இதையடுத்து அவருக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு வந்தது. இதுவரை 30 க்கும் மேற்பட்ட சீரியல்களில் அவர் நடித்துள்ளார். அதிலும் விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் எனும் சீரியலில் நடித்து வருகிறார்.

சீரியலில் டிஆர்பியில் நம்பர் 1
இந்த சீரியல் டிஆர்பியில் முன்னணியில் உள்ளது. இந்த சீரியலை பார்க்காதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு வீட்டுக்கு வீடு வாசற்படி என்பது போல் தங்கள் வீடுகளில் நடக்கும் பிரச்சினைகள் காட்டப்படுவதால் மக்கள் அந்த சீரியலுடன் ஐக்கியமாகிவிடுவார்கள்.

கூட்டு குடும்பம்
அந்த காலத்தில் எல்லாம் ஒரு வீட்டில் 3, 4 மகன்கள் இருந்தால் அவர்களது மனைவிகள், குழந்தைகள், பெரியவர்கள் என ஒரே வீட்டில் வசித்து வருவார்கள். அவர்களுக்குள் நடக்கும் பாச போராட்டம், சண்டை சச்சரவுகள் என பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் காட்டப்படுவதால் டிஆர்பியில் எதார்த்த கதை என்பதால் முன்னணியில் உள்ளது.

தனம் கேரக்டர்
இதில் பெரிதும் பேசப்படும் கேரகடர்கள் என தனித்து சொல்ல முடியாது. ஒவ்வொரு கேரக்டரும் முக்கியமானது, நன்றாக நடித்திருப்பார்கள். அந்த வகையில் மக்கள் மனதில் இடம்பிடித்த கேரக்டர்களுள் தனம் கேரக்டர்தான் பிரதானம். மைத்துனர்களை ஆளாக்க தனது கணவனின் அன்புக்கு கட்டுப்பட்டு தங்களுக்கென குழந்தை பெற்றுக் கொள்ளாமல் மைத்துனர்களை வளர்த்து ஆளாகும் கேரக்டர்தான் தனம்.

சுஜிதாவுக்கு விருது
தனம் கேரக்டரில் சுஜிதா நடித்து வருகிறார். அவர் கேரளாவை சேர்ந்தவர். இவருக்கு அண்மையில் ஒரு விருது கிடைத்துள்ளது. அதாவது மாண்புமிகு மகளிருக்காக என்ற விருது நிகழ்ச்சியில் சிறந்த ரோல் மாடல் நடிகை என்ற பிரிவில் சுஜிதாவுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் சுஜிதாவுக்கு வழங்கியிருந்தார். இந்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலானது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications