நீதிமன்ற சீனில் சொதப்பி தள்ளிய பிரபல சீரியல்... அறிவுரை கூறி கலாய்க்கும் ரசிகர்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
சீரியலின் டிஆர்பி கூட்டுவதற்காக கொஞ்சம் கூட லாஜிக் இல்லாத சீன்களை இப்படியா ஒளிபரப்ப வேண்டும் என்பது பல ரசிகர்களின் கேள்விகளாக இருந்து வருகிறது.
திரைப்படங்களிலே கொஞ்சம் கூட லாஜிக் இல்லாத விஷயங்களை எடுக்கும் போது சீரியலும் அப்படித்தான் இருக்கும் என்று சிலர் அலட்டிக் கொள்கிறார்கள்.

லாஜிக் இல்லாத சீரியல்கள்
பொதுவாக சீரியல்கள் என்றாலே வீட்டில் இருக்கும் பெண்கள் மட்டும் தான் ஆரம்ப காலகட்டத்தில் பார்த்து வந்தனர். ஆனால் தற்போது அனைவருடைய செல்போனிலும் சீரியல்களை பார்க்க முடிவதால் சீரியல்களில் இருக்கும் சின்ன சின்ன தவறுகளை கூட பெரியதாக சுட்டிக்காட்டி வருகிறார்கள். ஆரம்ப காலகட்டத்தில் சீரியல்கள் வேற லெவலில் இருந்ததாகவும் தற்போது உள்ள சீரியல்கள் அதிகமாக டிஆர்பிக்காக லாஜிக் இல்லாமல் ஒளிபரப்பாக ஆகி வருகிறது என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இந்த நிலையில் ஒரு சில சீரியல்களில் அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது என்று சிலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றனர்.

வீட்டுக்குள்ளேயே எதிரி
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் பூமிகா மற்றும் வருண் இருவருடைய காதல் கதையோடு பயணித்து வருகிறது. இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் வெவ்வேறு துருவங்களாக இருந்தாலும் தற்போது காதலித்து திருமணம் செய்து கொண்டு தங்களுடைய குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இவர்களுக்கு எதிராக வருணனின் சகோதரியாக வாசுகி இருந்து வருகிறார். வாசுகி கேரக்டரில் மகாலட்சுமி நடித்திருக்கிறார். வாசுகி எப்போதும் பூமிகா மற்றும் வருணை பழிவாங்க வேண்டும் என்பதற்காக பல வில்லங்கமான வேலைகளை செய்து வருகிறார்.

இது எப்படி சாத்தியம்
கடந்த வாரம் வாசுகி தன்னுடைய தந்தையின் சொத்துக்களை தன் பெயரில் ஏமாற்றி வாங்கி விடுகிறார். அதற்கு நீதிமன்றத்தில் கேஸ் நடக்கிறது அதில் வாசுகிக்கு எதிராக பூமிகா வக்கீலாக மாறி வாதாடி இருக்கிறார். கடைசியில் பூமிகாவின் வாதம் சிறப்பாக இருந்தது என்று நீதிபதியும் வாசுகிக்கு தண்டனை கொடுத்து விடுகிறார். இந்த சீனை பார்த்த ரசிகர்கள் ஆகா ஓகோ என்று புகழ்ந்து வந்தனர். ஆனால் நெட்டிசன்கள இதில் இருக்கும் குறைகளை சுட்டி காட்டி இருக்கின்றனர். அதில் ஒரு ரசிகர் சுப்ரீம் கோர்ட் சீனியர் கவுன்சில் ஆக இருந்தாலும் வெறுமனே ஒயிட் ஷர்ட், ஒயிட் பேண்ட், பிளாக் அண்ட் போட்டு வழக்கு நடத்த முடியாது. இது அனைவருக்கும் தெரிந்தது தான் ஆனால் இங்கே பூமிகா சாதாரண சுடிதார் அணிந்து வழக்கினை நடத்தி இருக்கிறார் . இது எப்படி சாத்தியம் என்று கேட்டிருக்கிறார்.

ரசிகர்களின் அறிவுரை
சமீபத்துல ஒரு உயர் நீதிமன்ற நீதி அரசர், தன்னோட நீதிமன்றத்துக்கு வந்த கலெக்டர் ஒருத்தர் சரியாக உடை அணியவில்லை என திட்டி இருக்கிறார். இத்தனைக்கும் அந்த கலெக்டர் ஃபுல் ஸ்லீவர்ஸ் ஷாட் போட்டு, இன் பண்ணி, சூவும் போட்டு இருந்தாராம் ஆனாலும் அவரை அந்த நீதிபதி திட்டி இருந்தார். அதற்கு காரணம் அந்த கலெக்டர் காலர் பட்டனை மறைக்கிற மாதிரி டை கட்டி கோட் போடாம வந்ததுக்கு தானாம். ஆனால் அன்பே வா சீரியல்ல பூமிகா வெறும் கலர் டிரஸ் போட்டு வந்து வழக்கு நடத்துறாங்க. அவர் எப்போது சட்டம் படித்தார். எப்போ தமிழ்நாடு பார் கவுன்சில வழக்கறிஞராக பதிவு செய்தார். முதல்ல ஒரு வழக்கறிஞர் இல்லாதவர் குற்றவியல் வழக்கை நடத்த முடியுமா?? திரைப்படங்களிலும் சரி தொலைக்காட்சி தொடர்களிலும் சரி கொஞ்சம் கூட ஃபீல்ட் ஒர்க் பண்ணாம இப்படித்தான் இருக்கும்னு இவங்களா முடிவு பண்ணி காட்டுற இடங்கள், போலீஸ் ஸ்டேஷனும், கோர்ட்டு காலும். திரைப்படங்கள் ஆவது சமீப காலங்கள்ல போலீஸ் ஸ்டேஷன் கோர்ட் ஹால்னா இப்படித்தான் இருக்கும் என்று எதார்த்தமா காட்டுறாங்க. ஆனா சீரியல்களில் இந்த மாதிரி இல்லை. இந்த சீரியலை பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களும் இதுதான் உண்மை என்று தவறானதை புரிந்து கொள்ளக் கூடாது என்று பலர் அறிவுரைகளை வழங்கி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications