வீட்டை விட்டு கிளம்ப முடிவெடுத்த ஜனனி.. புது பிரச்சனையை தொடங்கிய மாமியார்..சூடு பிடித்த எதிர்நீச்சல்
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி இந்த வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. தன்னுடைய வேலையை செய்ய முடியவில்லை என்று வருந்தி கொண்டிருக்கிறார்.
சக்தி ஒருவருக்காக தான் இந்த வீட்டில் இருப்பதாகவும், அவரும் என்னை புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்கிறார் என்று ஜனனி அவருடைய மாமா அத்தை இடம் கூறுகிறார்.
ஜனனி வீட்டை விட்டு வந்து விட வேண்டும் என்று ஜனனியின் அத்தை கூறி இருக்கிறார். இதனால் ஜனனி எடுக்க போகும் முடிவு ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே அமையப்போகிறது.

வீட்டுக்கு வந்தா மாமா அத்தை
எதிர்நீச்சல் சீரியலில் இன்றைய எபிசொட்டில், ஜனனியை பார்ப்பதற்காக அவருடைய மாமாவும், அத்தையும் சென்னையில் இருந்து வந்திருக்கின்றனர்ய ஜனனி வீட்டிற்கு வெளியே நிற்பதை பார்த்து அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வீட்டிற்குள்ளே சென்று குணசேகரன் அவருடைய அம்மா என அனைவரும் அமர்ந்திருக்கும் போது நாங்கள் மதுரைக்கு வந்தோம். அப்படியே ஜனனியையும், உங்களையும் பார்த்துவிட்டு போகலாம் என வந்திருக்கிறோம் என்று கூறி கூறுகிறார்கள். அப்போது ஜனனியின் அப்பா இன்னும் இரண்டு நாட்களில் ஜனனிக்கு தீபாவளி சீர் செய்வதற்காக வருவார் என்ற தகவலையும் ஜானியின் மாமா கூறுகிறார்.

வீட்டில் இருக்க பிடிக்கவில்லை
அதற்கு குணசேகரன், என்ன அவர் பெரிய அவ்வளவு பெரிய ஆளா? வருவதற்கு முன்பு ஒரு ஆள் அனுப்பி சொல்லிக் கொண்டுதான் வருவாரா? என்று நக்கலாக பேசுகிறார். பிறகு ஜனனியின் மாமாவும் அத்தையும் வெளியே வந்து ஜனனியிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது, எப்படிடா ?இந்த வீட்டில் இவ்வளவு பிரச்சனைக்கு இடையே நீ இருக்கிற என்று ஜனனியின் அத்தை ஜனனியை பார்த்து அழுதபடியே கேட்கிறார். அதுதான் எனக்கும் கஷ்டமா இருக்குது அத்தை. என்னால் இங்கே இருக்கவே முடியல. சக்தி ஒருவருக்காக தான் நான் இங்கே இருக்கிறேன். ஆனால் சத்தியும் இப்போ என்ன புரிஞ்சிக்காம என்னை எதிரியை பார்க்கிற மாதிரி பார்க்கிறார் என்று பீல் பண்ணி ஜனனி பேசுகிறார்.

தீபாவளி சீர்
எவ்வளவு கஷ்டம் வந்திருந்தாலும் நீ சென்னைக்கு மட்டும் வந்து விடாதே என ஜனனியின் மாமா கூறுகிறார். உனக்கு திருமணம் முடிந்த பிறகு உன்னுடைய அப்பாவான நாச்சியப்பன் ரொம்பவே மாறிவிட்டார். நீ எப்படி இருக்கியோ? என உன்னையே நினைத்து நினைத்து ரொம்ப உடல் நிலை சரியில்லாமல் ஆகிவிட்டார். இப்போது உனக்கு தீபாவளி சீர் செய்ய வேண்டும் என்று முடியாமல் இருந்தாலும் அங்கே எங்கே ஓடி சாமான்களை வாங்கிக் கொண்டு இருக்கிறார். இதை சிறப்பாக செய்தால் ஆவது நீ நன்றாக இருப்பாய் என்று அவர் நம்பிக் கொண்டிருக்கிறார் என்று கூறுகிறார். அதற்கு ஜனனி அப்பாவை இவ்வளவு தூரம் அலைய வைக்க வேண்டாம். மாமா நீங்கள் அம்மாவை மட்டும் வர சொல்லுங்க. முடிந்தால் நீங்களும் கூட வாங்க என்று கூறிக் கொண்டிருக்கிறார்.

பிரசாதத்துக்கு அக்கப்போர்
வீட்டிற்குள் இருக்கும் ஜனனியின் மாமியார் கோவில் பிரசாதத்தை கொண்டு வந்து டைனிங் டேபிளில் வைத்து அனைவரையும் எடுத்துக் கொள்ள கூறுகிறார். எல்லோரும் எடுத்துக் கொண்டதும் நந்தினியை கூப்பிட்டு உங்களுக்கும் எடுத்துக்கோ என்று கூறுகிறார் .நந்தினி ஜனனிக்கும் எடுத்து ஜனனி இன்னா, வா அப்படி என்று கூப்பிட்டவும். நான் உனக்கு மட்டும் தான் எடுக்க சொன்னேன். அவளுக்கு கொடுக்க சொல்லவில்லை என்று கராராக பேசுகிறார். அதோடு குணசேகரன் கோயில் குளம் எல்லாம் சுற்றி மன திருப்தி அடைந்து விட்டாயா அம்மா? என்று கேட்ட கேள்வி கேட்கிறார்.

மாமியார் கூட்டும் புது பிரச்சனை
எல்லாம் திருப்தியாக அமைந்தது. ஆனால் வரும்போது ஜோசியர் ஒருவர் மட்டும் சொன்ன வார்த்தைதான் எனக்கு மனசுக்கு உறுத்தலாக இருக்கிறது. வீட்டில் ஒரு கண்டம் இருப்பதாக கூறி இருக்கிறார் என்று சொன்னதும், குணசேகரன் நக்கலாக ஜனனியை பார்த்து அதுதான் தெரியுமே என்று கூறுகிறார். அதற்கு குணசேகரனின் அம்மா அந்த கண்டம் போவதற்கு சக்திக்கு குழந்தை பிறந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்கிறார். அப்போது அருகில் இருக்கும் கதிர் அது எப்படி நடக்கும் குழந்தை பெற்றுக்கொள்கிற மாதிரி ஒரு பெண்ணையா சக்தி கூட்டிக்கொண்டு வந்திருக்கிறான் என்று நக்கலாக கூறுகிறார். இனி சக்திதான் பெத்துக்கணும் என்று கதிர் கூறுகிறார். அதற்கு ஜனனி முடிஞ்சா பெத்துக்க சொல்லுங்க என சொன்னதும் குணசேகரன் ஏய்... இந்த பேசுற மாதிரி எல்லாம் கூடாது.. வேற நல்லா இருக்காது பாத்துக்க !!என்று அதட்டுகிறார். அதற்கு ஜனனி குழந்தை பெத்துக்கிறது என்னுடைய விருப்பம். எனக்கு விருப்பம் இருந்தால் மட்டும்தான் நான் பெத்துக்க முடியும். உங்க இஷ்டத்துக்கு என்னால் பெத்துக்க முடியாது என்று பேசிக் கொண்டிருக்கிறார். ஜனனியின் பேச்சை கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.

தொடங்கிய அடுத்த பிரச்சனை
அடுத்த நாளில் நந்தினி தன்னுடைய குழந்தையை ஸ்கூலில் கொண்டு விட வேண்டும் என்று கதிரிடம் கூறுகிறார். ஆனால் கதிர் ஃபோன் பேசிக் கொண்டிருப்பதால் நான் போக முடியாது ஏனென்றால் நீ கொண்டு போய் விடு என்று கூறுகிறார். அதற்கு தனக்கு இன்று நிறைய வேலை இருப்பதாக நந்தினி கூறுகிறார்.ஆனால் கதிர் முடியாது என்று திட்டி அனுப்பி விடுகிறார். கதிர் மீது இருக்கும் கோபத்தால் நந்தினி புலம்பி கொண்டு வருகிறார். அப்போது ரேணுகா அவரிடம் என்ன ஆச்சு எதற்காக என்று கேட்கிறார். எங்க அப்பா இன்று தீபாவளி சீர் கொண்டு வருகிறாராம். அதனால் நான் இங்கே இருக்க வேண்டும். நான் அவரிடம் கொண்டு வர வேண்டாம் என்று சொன்னாலும், கேட்க மாட்டேன் என்கிறார் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ஜனனி வந்து நான் பாப்பாவை ஸ்கூலில் விடுகிறேன் என்று கூட்டிக்கொண்டு போகிறார்.இதோடு இன்றைய எபிசோடு முடிந்து இருக்கிறது.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications