முதல் முறையாக பேசிய அப்பத்தாவால் வெளிவந்த ரகசியங்கள்... இனி வரும் எதிர்நீச்சல் சீரியல் கதை இதுதானாம்
சென்னை: சன் டிவி எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தா இதுவரைக்கும் பேசாமல் இருந்த நிலையில் தற்போது முதல் முறையாக அனைவரிடம் முன்னிலையில் பல ரகசியங்களை கூறி இருக்கிறார்.
முதல் முறையாக நான் யார் என்பதையும் எனக்கு இந்த வீட்டில் என்ன உரிமை இருக்கிறது என்பதையும் அப்பத்தா பேசியதை கேட்டு அனைவரும் ஆடிப் போய் இருக்கின்றனர்.
இந்த பாட்டி அம்மா என்ன கேரக்டர் என்பதே புரிந்து கொள்ள முடியாமல் இருந்த ரசிகர்களுக்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது.

பேசத் துவங்கிய அப்பத்தா
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு பெற்றுவிட்டது. இந்த சீரியலில் ஆரம்பத்தில் திருச்செல்வன் இயக்கம் என்று சொன்னதுமே பலர் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டனர். தற்போது அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றம் அடையாமல் சீரியலின் விறுவிறுப்பும், திருப்புமுனைகளும் வருவதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் இதுவரைக்கும் இந்த குணசேகரன் வீட்டில் எதுவுமே பேசாமல் தனி அறையில் வாழ்ந்து வந்த அப்பத்தா முதல் முறையாக ஜனனியிடம் பேசி இருக்கிறார். அதுபோக தற்போது முதல் முறையாக குடும்பத்தினர் அனைவரின் முன்னால் பல ரகசியங்களையும் கூறி இருக்கிறார்.

திருமணத்தை நிறுத்திய ஜனனி
ஜனனியிடம் தான் யார் என்பதையும் தன்னுடைய கடந்த கால வாழ்க்கையை அப்பத்தாவாக இருக்கும் பட்டம்மாள் பாட்டி கூறியதால் இந்த வீட்டை விட்டும் இந்த ஊரை விட்டும் போய்விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த ஜனனி தனது முடிவை மாற்றிக் கொண்டு சக்தியின் திருமணத்தை தடுத்து நிறுத்திவிட்டார். ஜனனி கூறிய உண்மையால் குந்தவை சக்தியை மட்டுமல்லாமல் குணசேகரைனையும் திட்டி கழுத்தில் இருந்த மாலையை கழற்றி வீசிவிட்டு கிளம்பி விட்டார். இந்த ஏமாற்றத்தில் இருந்து குணசேகரன் மீண்டு வருவதற்கு முன்பு வீட்டில் அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது.

உண்மை முகம் வெளிவந்தது
ஜனனியை இந்த வீட்டை விட்டு வெளியே தள்ளி விட்டாச்சி. இனி ஜனனிக்கும் நம்ம குடும்பத்துக்கும் எந்த உறவும் இல்லை என்று நினைத்திருந்த குணசேகரனுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பட்டம்மாள் பாட்டி வீட்டிலேயே ஜனனியை தங்க வைத்திருக்கிறார். அது மட்டுமல்ல இந்த வீட்டில் 40% உரிமை இருக்கிறது. இந்த வீட்டில் மட்டுமல்லாமல் மொத்த சொத்திலும் இருக்கிறது என்ற உண்மையும் கூறி இருக்கிறார். குணசேகரன் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து வேலை செய்து கஷ்டப்பட்டு இந்த சொத்துகளை வாங்கியதாக நம்பிக் கொண்டிருந்த தம்பிமார்களுக்கு முதல்முறையாக குணசேகரனின் உண்மை முகத்தை வெளியே காட்டி இருக்கிறார் அப்பத்தா.

இனி மாறப்போகும் கதை
எம் ஏ வரை படித்திருக்கும் அப்பத்தா மகனின் குழந்தைகள் தான் இந்த குணசேகரன் மற்றும் அவருடைய தம்பிகள் இதுவரைக்கும் தன்னுடைய மருமகளை ஆட்டி வைத்து வந்த குணசேகரனின் அம்மா இன்று அவருடைய மாமியார் ஆன அப்பத்தாவின் முன்பு வாயை அடக்கி கொண்டு இருக்கிறார் சீர் செய்ய வேண்டும் கடமை செய்ய வேண்டும் என்று தன்னுடைய மருமகள்களை குத்தி குறை கூறிக் கொண்டிருந்த குணசேகரனின் அம்மா இந்த வீட்டிற்குள் வரும்போது என்ன கொண்டு வந்தாய் என்று அப்பத்தா கேட்கும் போது தலையை குனிந்த படி இருந்து வருகிறார் .இதை பார்க்கும் போது நிகழ்ச்சிக்கு விறுவிறுப்பு ஏற்பட்டிருக்கிறது. இன்னும் அப்பத்தா என்னென்ன ரகசியத்தை சொல்லப் போகிறாரோ? என்று பலரும் எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது.அது மட்டும் அல்லாமல் இவ்வளவு படித்த ஒரு பாட்டி அம்மாவின் பேரன்கள் எதனால் படிக்காமல் இப்படி முரட்டுத்தனமாக மாறினர் என்பதை குறித்து ஃப்ளாஷ் பேக் இனி வரப்போகிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications