Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐந்து வருடம் கழித்து சீரியலிலும் நிஜத்திலும் கர்ப்பம்.. சன் டிவி கதாநாயகி வளைகாப்பு..உருக்கமான பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் அனு நிஜத்திலும் கர்ப்பமாக இருக்கும் நிலையில் தற்போது எளிமையாக அவருடைய கணவர் வளைகாப்பு செய்து வைத்திருக்கிறார்.

ஏழாவது மாத வளைகாப்பு முடிவடைந்ததை பற்றியும் தன்னுடைய ஆசைகளை பற்றியும் நெகிழ்ச்சியாக பதிவுகளை நடிகை அனு வெளியிட்டு இருக்கிறார்.

சீரியல் வில்லி

சீரியல் வில்லி

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் சீரியல் மூலமாக சின்னத்திரையில் அடி எடுத்து வைத்த அனு விஜய் டிவி மட்டுமல்லாமல் ஜீ தமிழ், சன் டிவி என பல முக்கிய சேனல்களில் சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் சீரியலில் ரோஷினி கேரக்டரில் அனு நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவருடைய வில்லத்தனமான நடிப்பு பார்த்து பலரும் வெறுப்படைந்து வந்தாலும் இவர் இதற்கு முன்பு நடித்த சீரியல்களில் இவரை பார்த்த ரசிகர்களுக்கு இது கொஞ்சம் குறைவு தான் என்று கூறி வருகிறார்கள்.

நிஜத்தில் வேறு மாதிரி

நிஜத்தில் வேறு மாதிரி

ஜீ தமிழில் ஒளிபரப்பான மெல்ல திறந்தது கதவு என்னும் சீரியலில் இவருடைய மிரட்டலான வில்லத்தனம் பலரையும் வெறுப்படையவும், மிரண்டு போகவும் செய்திருந்தது. இவருடைய சீரியலை பார்த்து பல ரசிகர்கள் இவரை திட்டி வந்தாலும் நிஜ வாழ்க்கையில் இவர் ஒரு குழந்தைத்தனமாக தான் இருந்து வருகிறாராம். அதனால் தான் இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் இவருடைய துறுதுப்பான கேரக்டரையும், ஜாலியான நடவடிக்கைகளையும் பார்த்த ரசிகர்கள் சீரியலில் வரும் அவரா இவர் என்று பலரும் கேள்விகளை எழுப்பி வந்தார்களாம்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

அனு நிஜ வாழ்க்கையிலும் விக்னேஷ் என்ற விக்கி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். திருமணத்திற்கு பிறகும் சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்தாலும் இவர்கள் இருவரும் ஜாலியாக எடுக்கும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி பதிவிட்டு வருவார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் ரீல்ஸ் வீடியோக்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருவார். இதனால் சீரியலை தாண்டியும் இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.

எளிமையான வளைகாப்பு

எளிமையான வளைகாப்பு

தற்போது ஐந்து வருடங்களுக்குப் பிறகு கர்ப்பமாக இருக்கும் அனுவிற்க்கு ஏழாவது மாத வளைகாப்பை குடும்பத்தினர் சிறப்பாக செய்து இருக்கின்றனர். அந்த நேரத்தில் எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து அதில் எங்களை சுற்றியுள்ள அன்புடன் ஆசீர்வாதத்துடன் எங்கள் ஏழாவது மாத வளைகாப்பு நிறைவு பெற்றிருக்கிறது. நானும் எனது கணவரும் இந்த முறை ஒரு எளிய மற்றும் அழகான வாழ்த்துக்களை பெற விரும்பினோம். எங்களின் விசேஷ நாட்களில் ஒன்று மிகவும் தனிப்பட்டதாகவும், எங்கள் குழந்தையுடான எங்கள் தொடர்பை மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்.

மணப்பெண் போல் வெட்கம்

மணப்பெண் போல் வெட்கம்

இது என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது ஏனென்றால் விக்கி எனக்கு நலங்கு சடங்குகளை செய்வது இதுவே முதல் முறை. ஊரில் புது மணப்பெண்ணை போல் முகம் சிவக்க வைத்தது என்று இந்த மகிழ்ச்சியான நேரத்தில் தனக்கு ஏற்படும் சந்தோஷத்தை குறித்து ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் விழாவின் போது எடுத்த சில படங்களை ரசிகர்களோடு பகிர விரும்பினோம் என்று ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதோடு எங்கள் சிறிய குடும்பத்திற்கு உங்கள் அனைத்து நல் வாழ்த்துக்களும் தேவை என்று வேண்டுகோளையும் வைத்திருக்கிறார். இவருடைய எளிமையான வளைகாப்பு பங்ஷனுக்கு குடும்பத்தினரும் நண்பர்களும் கலந்து கொண்டிருக்கின்றனர். இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+