அய்...ய் பார்த்துட்டேன்! பல நாள் ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் குதித்த சிவாங்கி... ஸ்பெஷலான நபர் தான்
சென்னை: விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான சிவாங்கி தான் பல வருடங்களாக ஆசைப்பட்ட ஒருவரை சந்தித்து விட்ட மகிழ்ச்சியை ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார்.
தற்போது சிவாங்கியே ஒரு பாடகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் அவர் பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் இன் தீவிர ரசியை என்பதை குறித்து உருக்கமாக பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

பாடகியாக மாற்றிய குரல்
விஜய் டிவியின் செல்ல பிள்ளையாக கலக்கி வரும் சிவாங்கி தற்போது தன்னுடைய பல நாள் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் துள்ளி குதித்து இருக்கிறார். ஒரு போட்டியாளராக அறிமுகமாகி தற்போது செலிபிரிட்டியாக வலம் வந்து கொண்டிருக்கும் சிவாங்கி தான் இன்னும் ரசிகை தான் என்பதை நிரூபித்து இருக்கிறார். பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர். அந்த வகையில் நானும் அந்த வரிசையில் இருக்கிறேன் என்று சிவாங்கி கூறி இருக்கிறார். என்னை பாடகியாக ஆக்கத் தூண்டிய வாய்ஸ் அது ஸ்ரேயா கோஷலின் வாய்ஸ்தான் என்று நெகிழ்ச்சியாக தெரிவித்திருக்கிறார்.

இன்னும் என்ன வேண்டும்
அது மட்டுமல்லாமல் பல வருடங்களாக ஸ்ரேயா கோஷலை நான் பார்ப்பதற்காக முயற்சி செய்தேன். அவருடன் தொடர்புடைய பலரிடம் அவருடைய பார்க்க முடியுமா? என கேட்டேன். அவருடைய இடத்திற்கு சென்று அவரை ஒரு முறை பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். அது எல்லாம் இல்லை இப்போது எனது சொந்த ஊரில் இந்த நேரத்தில் நான் பார்க்க பார்த்திருக்கிறேன். அது மட்டும் அல்லாமல் அவர் என்னைப் பற்றி பேசிய வார்த்தைகள் மற்றும் என்னால் மறக்கவே முடியாது. ஒருவர் வாழ்நாள் முழுவதும் ஏங்கி ஏங்கிக் கொண்டிருந்த ஒரு நபரின் அங்கீகாரம் கிடைத்ததற்கு நான் என்ன செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை. சிறுவயதிலிருந்தே நான் ரசித்த எனது பேட்டரி சார்ஜரிடம் இருந்து பேட்டரி சார்ஜர் என பாராட்டு கிடைத்தது. ஒரு பாடகருக்கு இன்னும் என்ன வேண்டும்.

எதிர்பாராமல் கிடைத்த பாராட்டு
ஒரு சந்தோஷமான மாலை நேரத்தில் எப்போதும் அவரது பாடல்களை இயர் போனில் கேட்பது உண்மையான ஹிட்ஸ் ஹார்ட் டிடியில் அதை சாட்சியாகவே கேட்பது அவ்வளவு தெய்வீகமானது. இந்த வருடத்தின் முடிவு நான் எதிர்பார்க்காத விதமாக அமைந்திருக்கிறது என்று பாடகி ஸ்ரேயா கோஷலை முதல் முறையாக சந்தித்த தருணத்திற்கு மற்றும் ஸ்ரேயா கோஷல் தன்னை பாராட்டியதை குறித்தும் நெகிழ்ச்சியாக சிவாங்கி பேசி இருக்கிறார். அந்த வீடியோவில் ஸ்ரேயா கோஷல் தன்னை பற்றி பேசும்போது குழந்தை போல துள்ளி குதித்து இவர் ஆர்ப்பாட்டம் செய்ததை குறித்து ரசிகர்களும் பிரபலங்களும் இவரை பாராட்டி வாழ்த்து கூறி வருகிறார்கள்.

ஆரம்பத்தில் தெரியாத திறமை
விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்கள் மூலமாக பல்வேறு போட்டியாளர்களின் வாழ்க்கையில் முன்னேற்றமும், எதிர்பாராத வளர்ச்சியும் ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில் சிவாங்கியும் ஒருவர். சிவாங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய பாட்டு திறமையை அனைவருக்கும் வெளிக்காட்டி இருந்தார். இவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இவருடைய திறமை பலருக்கும் தெரியாமல் போய் விட்டாலும், இவர் நாட்கள் செல்லச் செல்ல இந்த அளவிற்கு வளர்ச்சி அடைவார் என்று அப்போது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.












Click it and Unblock the Notifications