சஞ்சீவ் மாஸ்டராக மாறியதைப் பார்த்து...ஒரு நிமிடம் பிக் பாஸ் அணியே மிரண்டு போய்விட்டதே

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளாளுக்கு போட்டியில் கத்தி கொண்டிருப்பதைப் பார்த்ததும் காண்டான சஞ்சீவ் கர்ஜித்துக் கொண்டிருக்கிறார்.

இங்கே டாஸ்க்கு நடக்கிறதா??அல்லது சந்தைக் கடை நடக்கிறதா??என்று போட்டியாளர்களும் ஒரு நிமிடம் குழம்பி தான் போயிருக்கிறார்கள்.

லிஸ்டில் இல்லாததை நான் கேள்வி கேட்க மாட்டேன் என்று சிபி காரசாரமாக வாக்குவாதம் பண்ணி இருக்கிறார்.

அங்கே என்ன நடக்கிறது

அங்கே என்ன நடக்கிறது

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டை சச்சரவுகளுக்கு மொத்த குத்தகைக்கு எடுத்த இடம் தான் என்பது பலருக்கும் தெரியும். இதில் சுவாரஸ்யமும் இருக்கும், பல நேரங்களில் சம்பந்தம் இல்லாத வகையில் சண்டைகளும் இருந்து வரும். அது போல தான் எதற்கு சண்டை போடுகிறார்கள் என்று யூகிக்க முடியாத வகையில் சண்டை முட்டி கொண்டு வருகிறது. போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து டாஸ்க் விளையாடுவார்கள் என்று பார்த்தால் இரண்டு அணியாக இருந்தாலும் அவர் அவர்களுக்கு தனியாக பிடித்த மாதிரி தான் விளையாடி வருகிறார்கள்.

போட்டியாளர்களுக்கே புரியவில்லையே

போட்டியாளர்களுக்கே புரியவில்லையே

தற்போது நடக்கும் நியூஸ் சேனலாக 2 அணியும் ஒன்றாக சேர்ந்து அனைத்து ஹவுஸ் மேட் உடன் கலந்து ஆலோசிக்காமல் மெஜாரிட்டியாக இருக்கும் போட்டியாளர்கள் அவர்களுக்கு பிடித்த மாதிரியே விளையாட்டை விளையாடி வருகிறார்கள். இதில் அந்த அணியில் இருந்தாலும் ஒருசில போட்டியாளர்கள் என்ன நடக்கிறது என்றே புரிந்துகொள்ள முடியாமலும், தெரியாமல் திணறி வருகின்றனர். என்றால் சொல்லவா வேண்டும் என்று பலர் கூறி வருகின்றனர். இங்கே என்ன நடக்கிறது என்று ஒன்றுமே புரியவில்லை என ஒரு சில ரசிகர்கள் கமெண்ட்டுகளை அனுப்பி வருகின்றனர்.

கோபத்தின் உச்சியில் சிபி

கோபத்தின் உச்சியில் சிபி

இன்றைய எபிசோட்டில் சிபி மற்றும் அபிஷேக் இருவரும் நியூஸ் ரீடர் ஆக இருந்து தாமரை மற்றும் வருணை பேட்டி எடுத்துக் கொண்டிருக்கின்றனர். அதில் தாமரை மற்றும் அண்ணாச்சியின் உறவு பற்றி கேள்விகள் எழுப்பப்படும் போது சிபி சொல்ல விருப்பமில்லை என்றால் இதோடு விட்டுவிடலாம் என்று சலுகை காட்டி இருக்கிறார். இதை பார்த்ததும் கேள்விகள் எழுதி வைத்திருப்பது படி கேளுங்கள் என்று சக அணியினர் சிபிக்கு அறிவுரை கூறி வருகிறார்கள். ஆனால் சிபி அப்படி எதுவுமே எழுதவே இல்லை என்று கூறி இருக்கிறார். இவர் இப்படி சொன்னதும் அபிஷேக் இதை முடித்து விட வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ மன்னிக்க வேண்டும் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்குவோம் என்று பிரேக் போட்டு விடுகிறார். இதனால் கான்டான சிபி கையில் இருக்கும் நோட்ஸ்களை கிழித்து எறிந்து தூக்கி வீசுகிறார்.

காண்டான சஞ்சீவ்

காண்டான சஞ்சீவ்

எழுதிக்கொடுத்த கேள்விய கேளுடா என்று ப்ரியங்கா ஒரு பக்கம் கத்திக் கொண்டிருக்க, வருண் அதுதான் அவன் கேட்க மாட்டேன் என்று சொல்கிறானே என்று ஒரு பக்கமாக கத்திக் கொண்டிருக்க, அபிஷேக் ஒருபுறம் சம்பந்தமே இல்லாமல் எதையோ பேசிக் கொண்டிருக்கிறார். இவர்களின் சண்டையை பார்க்கும்போது சந்தைக் கடை கூட தோற்றுவிடும் போல இருக்கிறது என்று ரசிகர்கள் எண்ணிக் கொண்டிருந்தது, அந்த வீட்டிற்குள் நடுவராக இருக்கும் சஞ்சீவ்க்கு கேட்டு விட்டது போல. அதனால்தான் அவர் சைலன்ட்....என்று கத்தி அனைவரையும் தன்னுடைய கணீரென்ற குரலால் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். இதை பார்த்ததும் ரசிகர்கள் சஞ்சீவ் மாஸ்டராக மாறிவிட்டாரா??என்று கலாய்த்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+