Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாடிப்படியில் மாடர்ன் தேவதை கேபி.. கேப் விடாமல் ரசிக்கும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடடா அழகே பொறாமைப்படும் பேரழகியாக மாடிப்படியில் அமர்ந்திருக்கும் கேப்ரில்லாவை பார்த்ததும் பலபேர் பரவசமடைந்து விட்டார்களாம்

என்னதான் இவர் மாடர்ன் உடையில் அடிக்கடி வலம் வந்து கொண்டிருந்தாலும் இந்த மாதிரி ஒரு ஹோம்லி முகம் தான் பலருக்கும் பிடித்திருக்கிறதாம்.

இதுவரைக்கும் கலாய்த்துக் கொண்டிருந்த நெட்டிசன்கள் கூட தற்போது கவிதைகளை பொழிந்து வருகிறார்கள்.

பாராட்டு குவியுது

பாராட்டு குவியுது

கேபியின்....கியூட் பேபி போன்று இருக்கும்...போட்டோவை பார்த்து, 'சிம்ப்ளி பெஸ்ட்'.. என்று கேப்ரில்லா வின் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். எந்தவித அலப்பறை யும் இல்லாமல், சிக்..கென்று இருக்கும் உடையில், சாதாரணமாக கூந்தலை விரித்துப் போட்டபடி, படிக்கட்டுகளில் உட்கார்ந்துகொண்டு.. இவர் கொடுத்துள்ள போஸ்களை பார்த்து.. இது தற்பொழுது எடுத்த போட்டோ தானா!? இல்லை பழைய போட்டோவா? என்று ரசிகர்கள் சற்று குழப்பம் அடைந்தாலும், பார்ப்பதற்கு அம்சமாக இருப்பதாகவும், இத இப்படியே.. மெயின்டன் பண்ணுங்கன்னு.. ரசிகர்கள் ஒரே மாதிரியாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஜோடி ஜூனியரில் அறிமுகம்

ஜோடி ஜூனியரில் அறிமுகம்

தனது ஒன்பதாவது வயதிலேயே கேமராவுக்கு முன்பு வந்துவிட்ட கேபி, அந்த நேரத்தில் விஜய் டிவியில் அப்பொழுது ஒளிபரப்பான 'ஜோடி ஜூனியர்' என்ற டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் தன் டான்ஸ் திறமையைக் காட்டினார், இதற்கிடையில் சின்னச்சின்ன சீரியல்கள் நடித்தாலும் 'ஜோடி நம்பர் ஒன்' ஆறாவது சீசனில் வெற்றியாளராக தன்னை நிரூபித்து மிகவும் பிரபலமானார்.இதன் மூலம் '3, சென்னையில் ஒரு நாள், அப்பா,' போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இந்தப் படங்களில் நடித்ததால் கொஞ்சம் முகம் தெரியும் அளவிற்கு பிரபலம் அடைந்திருந்த கேபிக்கு நல் வாய்ப்பாய் அமைந்தது தான் பிக் பாஸ்.

பிக்பாஸில் கேபிக்கு ஆர்மி தான்

பிக்பாஸில் கேபிக்கு ஆர்மி தான்

பிக்பாஸ் நிகழ்ச்சியின்பது இவரது க்யூட்டான சப்பி(chubby) லுக் காகவே இவருக்கென்ற ரசிகர்கள் கூட்டம் உருவானது.கேபி 'ஆர்மி' அமைக்கும் அளவிற்கு சமூக வலைதளங்களில் பாலோயர்கள் உருவாகினர். எவிக்ஷன் போது ஓட்டு போட்ட இவரை சேவ் செய்யும் வண்ணம் இளைஞர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றிருந்தார். தற்பொழுது பிக்பாஸ் போட்டியாளர்களை வைத்து நடத்தப்பெற்ற 'பிபி ஜோடிகள்' டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் சக போட்டியாளர் ஆஜித்துடன் இணைந்து இவர் கொடுத்திருந்த பெர்பாமன்ஸ்கள் அனைத்தும் பெரிய அளவில் நடுவர்கள் இடமும், ரசிகர்களிடமும், பாராட்டுகளையும், வரவேற்பையும் பெற்றது.

அந்த ஆசை சீக்கிரத்தில் நிறைவேறும்

அந்த ஆசை சீக்கிரத்தில் நிறைவேறும்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் கேப்ரில்லா, அவ்வப்போது தன் போட்டோக்களை அப்லோட் செய்து தன்னுடைய ரசிகர்களை ஆக்டிவாக வைத்திருக்கிறார். நடிகர் தனுஷின்' 3' திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக, தனுசுக்கு மச்சினிச்சி யாக நடித்த..கேபிக்கு, தனுசுடன் கதாநாயகியாக ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பது கனவாம்!!படங்களில் கதாநாயகிகளின் ஆசையை நிறைவேற்றும் தனுஷ்.. கேபியின் ஆசையை கேள்விப்பட்டு நிறைவேற்றுவாரா!? என்று பார்ப்போம்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+