பிக்பாஸில் இன்று முழுக்க சோக கீதங்கள் தானா!.. இப்பவே தொடங்கி விட்டீர்களா??..கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதும் நெட்டிசன்கள் ஆட்டம் வெறித்தனமாக இருந்து வருகிறது.
Recommended Video
பணத்தை கோடி கோடியாய் கொட்டி நிகழ்ச்சியை தொடங்கியிருக்கும் விஜய் டிவியை பங்கமாய் கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.
இன்றைய ப்ரோமோவை பார்த்ததும் ரசிகர்கள் மட்டுமல்லாமல் நெட்டிசன்களும் ட்ரோல்களை செய்து கலாய்த்து வருகின்றனர்.

ரசிகர்கள் புலம்பல்
பொதுவாகவே விஜய்டிவி ரியாலிட்டி ஷோ என்றாலே அதில் ஒரு அழுகாச்சி எபிசோடுகளை வைத்து பார்ப்பவர்களை பாடாய்ப்படுத்தி விடுவார்கள், இப்போ பிக்பாஸிலும் இதனைக் கொண்டு வந்து விட்டார்களே என்று ஆசையாய் பிக்பாஸ் பார்ப்பதற்கு காத்திருக்கும் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். சீரியல்களை பார்க்காத ரசிகர்கள் கூட இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகின்றனர் காரணம் பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்வதில் பலருக்கும் ஆர்வம் அதிகம் தான் அதை தூண்டும் விதமாக பிக் பாஸ் இருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.

ஆதரவு கொடுக்கும் ரசிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியும் முதல்முதலில் தொடங்குவதற்கு முன்பு இந்த நிகழ்ச்சி எப்படி இருக்கும் என்று ரசிகர்களின் மத்தியில் பெரும் பரபரப்பும், சலசலப்பும் இருந்து வந்தது. ஆனால் நிகழ்ச்சி முதல் சீசன் தொடங்கியதுமே ரசிகர்கள் பலருக்கு அடிமைகளாக மாறிவிட்டனர். தொடர்ந்து பார்க்காமல் இருக்க முடியவில்லை என்று பலர் கூறிவந்தனர். நிகழ்ச்சி முடிவடைந்த பின்பும் அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியை தேட தோன்றுகிறது என்று ரசிகர்கள் கூறிவந்தனர். ரசிகர்களின் ஆதரவை பார்த்துதான் இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து ஐந்தாவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது. ஒவ்வொரு சீசனிலும் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது.

ஓட்டு எண்ணிக்கையும் அதிகரிப்பு
ஒவ்வொரு போட்டியாளரும் ரசிகர்கள் ஓட்டு போடும் ஓட்டு எண்ணிக்கைகளும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக போட்டியாளர்கள் பலர் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி தொடங்கியதுமே பலருக்கும் இந்த நிகழ்ச்சியைப் பற்றி புரணி பேசுவதற்கு கதை கிடைத்துவிடுகிறது. ரசிகர்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் முந்தின நாள் நடந்த நிகழ்வுகளை அசை போடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

கதறி அழும் போட்டியாளர்கள்
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்ப்பதற்காகவே பலர் ஹாட்ஸ் ஸ்டார் டவுன்லோட் செய்து வைத்திருக்கின்றனர். இப்படி ரசிகர்கள் இதற்கு பெரும் ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், நிகழ்ச்சியில் வழக்கம் போல தங்களுடைய கடந்து வந்த கஷ்டங்களை கூறச் சொல்லி டாஸ்க் கொடுத்துவிட்டது பிக்பாஸ். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று போட்டியாளர்களும் தங்களுடைய கவலைகளையும் கொட்டிக் கொண்டிருந்ததை பார்த்து பலர் கதறி அழுது கொண்டிருக்கின்றனர்.

கலாய்க்கும் நெட்டிசன்கள்
ரசிகர்கள் ஒரு பக்கம் ப்ரோமோவை பார்த்ததும் நிகழ்ச்சிக்காக காத்திருக்கும் நிலையில் நெட்டிசன்கள் வழக்கம் போல ப்ரோமோவை பார்த்ததும் கலாய்த்து தள்ளி வருகின்றனர். இன்றைய மூன்று எபிசோடுகளிலும் தங்களுடைய கஷ்டங்களை கூறிக்கொண்டிருக்கும் போட்டியாளர்களை பார்த்ததும் நெட்டிசன்கள் ஆரம்பிச்சுட்டாங்கய்யா...ஆரம்பிச்சுட்டாங்க...வழக்கம்போல பிக் பாஸ் இன்னைக்கு ஃபுல்லா அழவைக்க போகுது!!என்று கலாய்த்து வருகின்றனர். என்னதான் நெட்டிசன்கள் கலாய்த்தாலும் எப்படியும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்காக டிவி முன்பு ஆஜராகி விடுவார்கள் என்று பிக்பாஸ் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications