இதனால்தான் நான் ரஞ்சித் அண்ணாவை இன்னும் பார்க்கவில்லை...ஃபீல் பண்ணும் இசைவாணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு ரஞ்சித்தை சந்திக்கும் காரணம் குறித்து இசைவாணி வெளியிட்டுள்ளார்.

ரஞ்சித்தின் அன்பு தங்கையாக வலம் வந்து கொண்டிருக்கும் இசைவாணி எதற்காக ரஞ்சித்தை சென்று பார்க்கவில்லை என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

தற்போது இசைவாணி, ரஞ்சித்தை சந்திக்கவில்லை என்பதால் பல்வேறு வதந்திகள் வெளியாகியுள்ளன.

பதிலைக் கூறிய இசைவாணி

பதிலைக் கூறிய இசைவாணி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கானா பாடகியான இசைவாணி இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகும் பல்வேறு வதந்திகள் அவரைப்பற்றி பரவி வருகிறது. அதற்கு அவரே பதில் கூறியிருக்கிறார். இதைக்கேட்டதும் இவ்வளவுதானா?? இது தெரியாமல் நாங்கள் வேற வெளியாகும் செய்திகளை நம்பி விட்டோமே!!என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அடிமட்டத்தில் பிறந்து கஷ்டப்பட்டு தற்போது தான் மேல் வந்து இருக்கும் நிலைக்கு தன்னுடைய முயற்சி ஒன்றே காரணம் என்று வளர்ந்து கொண்டிருக்கும் இசைவாணி தற்போது அவருடைய ரசிகர்களுக்கு ரோல் மாடலாக இருந்து வருகிறார்.

வளர்ச்சிக்கு காரணமான அண்ணன்

வளர்ச்சிக்கு காரணமான அண்ணன்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு இவர் பல யூடியூப் சேனல்களில் பாடல்களில் பாட்டு பாடி பிரபலமாக இருந்தாலும் அந்த அளவிற்கு பிரபலம் ஆகாமல் தான் இருந்துள்ளார். தற்போது இவர் பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் அடைந்து விட்டார். அவர் பாடிய கானா பாடல்கள் சினிமாக்களில் ஒலிக்கும் அளவிற்கு இவருடைய வளர்ச்சி இருந்து வருவதற்கு பலர் உறுதுணையாக இருந்துள்ளனர். அதில் ஒருவர்தான் ரஞ்சித் இவர் பல பாடகர்களை ஒன்றிணைத்து ஒரு அணியை உருவாக்கி இருக்கிறார்.

ஏதும் கோபமாக இருக்குமோ

ஏதும் கோபமாக இருக்குமோ

ரஞ்சித்தின் அணியில் ஒரு உறுப்பினராகவும், அவரின் சகோதரியாகவும் இருந்துவரும் இசைவாணி ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பும் ரஞ்சித்திடம் ஆசி வாங்கிவிட்டு தான் செல்வாராம். அதுபோல நிகழ்ச்சி முடிந்து வந்த பிறகும் ரஞ்சித்தை பார்த்து அவரிடம் பேசி விடுவது தான் அவருடைய வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு இசைவாணி இன்னும் ரஞ்சித்தை சந்திக்கவில்லை என்ற செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதைக் கேட்டதும் அவருடைய ரசிகர்கள் என்ன ஆச்சு!!??ஏதும் அண்ணனுக்கு கோபமா??என்றவாறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இதுதான் காரணமா

இதுதான் காரணமா

ரசிகர்களின் கேள்விக்கு இசை வாணியும் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. நான் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு அண்ணனை சென்று சந்திக்க நினைத்தேன். ஆனால் அவர் தற்போது ஊரில் இல்லை. அதனால் தான் அவரை பார்க்க முடியாமல் இருக்கிறது. அவர் ஊருக்கு வந்ததும் நான் சென்று பார்த்து விடுவேன் வேறு ஒரு காரணமும் இல்லை என்று தெளிவாக விளக்கியுள்ளார். இதைக் கேட்ட பிறகுதான் ரசிகர்கள் தெளிவாக இருக்கிறார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+