நான் நேரடியாக பேசியதால் தான் வெளியே வந்தேன்..சின்ன பொண்ணு கிட்ட இப்படி பேசலாமா??புலம்பும் இசைவாணி
சென்னை: முதுகுக்கு பின்னாடி பேசுறது எனக்கு சுத்தமா பிடிக்காது என்று இசைவாணி கூறியிருக்கிறார்.
நான் எதைப் பேசினாலும் யாரிடமும் நேரடியாக தான் பேசுவேன் என்று கெத்தாக கூறியிருக்கிறார்.
தான் வெளியேறியதுக்கு காரணம் இதுதான் என்று இசைவாணி கூறிய பதிலைக் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.

அதிர்ச்சி கொடுத்த வெளியேற்றம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் ஒரு சில செயல்கள் ரசிகர்களை அதிகமாக பாதித்து விடுகிறது. அந்த மாதிரிதான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இசைவாணியின் வெளியேற்றம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இவர் ஒரு அடித்தட்டு மக்களின் பிரதிநிதியாகவும், கானா இசையை வெளி உலகத்திற்கு கொண்டு வருவார் என்று அதிகம் எதிர்பார்ப்போடு இருந்த நபர் திடீரென்று வெளியேறியது அனைவருக்கும் வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. ஆனாலும் இந்த வீட்டிற்குள் இருந்த வரைக்கும் அவர் தன்னுடைய கேரக்டரில் தான் இருந்தேன் என்று கூறியிருக்கிறார்.

முதுகுக்குப் பின்னாடி பேசுறாங்க
ஒருசில போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் முதுகுக்குப் பின்னாடி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். முகத்துக்கு நேராக ஒன்று பேசிக்கொண்டு, தள்ளிப் போய் வேறு விதமாக பேசுவதை நான் வெளியே வந்துதான் பார்த்து இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். தன்னோடு நன்றாக பழகுபவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்ற ஒரு கண்ணோட்டத்தில் தான் நான் அனைவரிடமும் பழகி இருக்கிறேன் என்று இசைவாணி தன்னுடைய பிக்பாஸ் அனுபவங்களை வெளியிட்டிருக்கிறார். இவருடைய வெளியேற்றத்திற்கு பிறகு ரசிகர்கள் பலர் இவர் நிகழ்ச்சியில் இல்லாததால் ஃபீல் பண்ணி வருகிறார்களாம்.

அதைப்பற்றி கவலைப்படவில்லை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் நான் உள்ளே இருந்து பார்க்கும் போது இருந்தது ஒருமுகமாக இருந்தது. ஆனால் வெளியே வந்த பிறகு பார்க்கும் போது வேறுவிதமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். என்னிடம் உண்மையாக இருப்பவர்களை மட்டும் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் சில நேரங்களில் சிலரை பற்றி தெரிந்து கொள்ளும் போது தான் குழப்பமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். நான் எதையும் ஸ்ட்ரைட்டாக பேசி விடுவேன். அதனால் என்னை பார்க்கும் போது சிலருக்கு கடுப்பாக இருக்கலாம். ஆனால் அதைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

இசை வாணியின் எதிர்கேள்வி
தாமரை மற்றும் இசைவாணி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவருக்கும் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் போது பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் ஒரு சில நாட்களுக்கு முன்பு இசைவாணி தாமரை செல்வியிடம் நான் ரொம்ப கண்ட்ரோல் ஆக இருக்கிறேன். இல்லை என்றால் செவுளுளே போட்டுருவேன் என்று கூறியிருந்தார். இதை பார்த்து பல ரசிகர்கள் வயதில் பெரியவரை இப்படி எல்லாம் கேட்கலாமா என்று கேள்வி கேட்டிருந்தனர். அதற்கு இசைவாணி நான் வயதில் சின்ன பொண்ணுவிடம் இப்படி எல்லாம் அவர்கள் நடந்து கொள்ளலாமா என்று எதிர் கேள்வி கேட்டிருக்கிறார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications