டாப் 10 இடத்தைப் பிடித்த சீரியல்கள்.. இந்த வாரம் இனியா, எதிர்நீச்சல் சீரியலில் இப்படி ஒரு மாற்றமா?
சென்னை: தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ரசிகர்களை கவர்ந்த முதல் 10 சீரியல்களின் விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
இதுவரைக்கும் முன்னணியில் இருந்த எதிர்நீச்சல் சீரியலை இனியா சீரியல் முந்தி இருக்கிறது.
கிராமம் மற்றும் நகர புறங்களில் ஒளிபரப்பான டிஆர்பி யின் அடிப்படையில் முதல் 10 இடங்களில் இருக்கும் சீரியல்களின் பெயர்கள் வெளியாகி இருக்கிறது.

கயல் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கயலுக்கு அடுத்தடுத்ததாக கடந்த வாரத்தில் அதிகமான பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்த்து நின்று கயல் ஜெயித்த எபிசோடுகள் ஒளிபரப்பான நிலையில் இந்த சீரியல் யாரும் எதிர்பார்க்காத வகையில் 11.48 அளவைப் பெற்று முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

வானத்தைப்போல சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலில் துளசியின் மனமாற்றம் சின்ராசுவின் அடுத்தடுத்த செயல்பாடுகள் என பரபரப்பான எபிசோடுகளின் காரணமாக இந்த சீரியல் 10.61 அளவைப் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

சுந்தரி சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் அணுவை கடத்திய எபிசோடுகள் ஒளிபரப்பான நிலையில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து இந்த சீரியல் 10.46 அளவைப் பற்றி மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.

கண்ணான கண்ணே சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அப்பா மகள் பாச போராட்டத்தை பற்றிய இந்த கண்ணான கண்ணே சீரியல் அதிகமான நெகட்டிவ் கருத்துக்களை பெற்றிருந்தாலும் டிஆர்பி அளவில் 10.3அளவைப் பெற்று நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது.

இனியா சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் தொடங்கிய இரண்டு வாரங்களிலேயே ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியல் கிராமபுறம் மற்றும் நகரப்புறங்களில் டிஆர்பி அளவில் 9.18 அளவை ஐந்தாவது இடத்தைபெற்றிருக்கிறது.

எதிர்நீச்சல் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பட்டம்மாள் அப்பத்தாவை காணவில்லை என பரபரப்பான எபிசோடுகள் ஒளிபரப்பான நிலையில், இது கிராமப்புறங்களில் மற்றும் நகரப்புறங்களில் 9.09 அளவைப் பெற்றிருக்கிறது.

ஆனந்த ராகம் சீரியல்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியல் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஏழாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியலில் கதாநாயகனின் மனைவி யார் என்ற விறுவிறுப்பான எபிசோடுகள் இந்த வாரத்தில் ஒளிபரப்பானதால் இந்த சீரியல் டிஆர்பி யில் 7.96 அளவை பெற்றிருக்கிறது.

பாரதிகண்ணம்மா சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் ரசிகர்கள் பல வருடங்களாக எதிர்பார்த்து இருந்த டி என் ஏ டெஸ்ட் முடிவு வெளியான எபிசோடுகள் ஒளிபரப்பான நிலையில் இந்த சீரியல் அதிகமான ரசிகர்களை கவர்ந்து 7.71 அளவைப் பெற்று எட்டாவது இடத்தில் இருந்து வருகிறது.

பாக்கியலட்சுமி சீரியல் சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இந்த முறை ஒன்பதாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த வாரத்தில் ஏரியா தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்த நிலையில் அதைக் குறித்து பல திருப்பங்கள் வந்தபோதிலும் இந்த சீரியல் கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் டிஆர்பி அளவில் 7.50 பெற்றிருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர் சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தின் சூப்பர் மார்க்கெட்டை கார்ப்பரேஷன் அதிகாரிகள் மூடிவிட்ட பிறகு அவர்கள் மீண்டும் தங்களுடைய பழைய கடையில் வியாபாரத்தை தொடங்கி இருக்கும் நிலையில் இந்த சீரியல் இந்த வாரத்தில் பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியல் டிஆர்பி அளவில் 6.99 பெற்றிருக்கிறது.
-
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
கருப்பு படத்தில் ஆர்ஜே பாலாஜி ஸ்கேம் பண்ணிட்டாரா? "இந்த” சீரியலின் 30 நிமிட கதை தான் முழு படமா? ரசிகர்கள் ட்ரோல் -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications