வீட்டை விட்டு வெளியேறிய டிக் டாக் பிரபலம்..கண்ணீரோடு தாய் வெளியிட்ட வீடியோ..காரணம் ஆரியாவின் படமா.?
சென்னை: 'ஹாய் நண்பர்களே' என்று டிக் டாக் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை பெருக்கி வைத்திருக்கும் ஜெஸ்ருதி என்று தன்னை பிரபலப்படுத்திக் கொண்ட பிரிகியாவின் அம்மா வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தூத்துக்குடியை சேர்ந்த இந்த குடும்பம் டிக்டாக் மூலம் பலருக்கும் பரிச்சயமாக இருந்தது. குடும்பம் என்றால் இப்படித்தான் ஜாலியாக இருக்க வேண்டும் என்று இவர்கள் செய்யும் ஜாலியான வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் கூறி வந்தனர்.
இந்த நிலையில் தங்களுடைய மகள் வீட்டை விட்டு ஓடிப் போய்விட்டால் என்று பிரிகியாவின் அம்மா வெளியிட்ட வீடியோ பலருக்கும் வியப்பை கொடுத்து இருக்கிறது.

டிக் டாக் செயலி
டிக் டாக் என்பது பலருடைய வாழ்க்கையை மாற்றிவிட்டது. நடிக்க வேண்டும் என்று மனதிற்குள் ஆசை மட்டுமே இருந்தவர்களை உங்களால் எதுவும் செய்ய முடியும் என்று இந்த ஒரு ஆப் பலருடைய வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிட்டது. இந்த ஆப் மூலமாக பலர் வாழ்க்கையில் பிரபலமாகி இருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் வாழ்க்கையை தொலைத்தும் இருக்கின்றனர். எத்தனையோ பேர் இந்த ஆப் மூலமாக தற்கொலை செய்து கொண்டனர் என்பது பலருக்கும் தெரிந்ததுதான். இந்த நிலையில் தற்போது இந்த ஆப்பை தடை செய்யப்பட்டபோது இதில் இருந்த அனைவரும் அப்படியே இன்ஸ்டாகிராம், யூடியூப் என்று திசையை திருப்பிக் கொண்டனர்.

பிரபலமான அண்ணன் தங்கச்சி
தூத்துக்குடியை சார்ந்த பிரிகியா, ஜெஸ்ருதி என்ற பெயரில் பலருக்கும் பரிட்சயமானவர். இவர் மட்டுமல்லாமல் இவருடைய அண்ணனான பிரகன், அம்மா என அனைவருமே டிக் டாக் மூலம் பலருக்கும் பேமஸ் ஆனவர்கள். அண்ணன் தங்கச்சி இவர்கள் இருவரும் செய்யும் சேட்டைகள் பலரையும் ஏங்க வைத்திருக்கிறது. நமக்கு இப்படி ஒரு தங்கை இல்லையே என்று இவர்களுடைய வீடியோவுக்கு பலரும் கமெண்ட் செய்து வந்தனர். தற்போது பிரகன் ஒரு சில ஷார்ட் பிலிம் களில் நடித்துக் கொண்டிருக்கிறார். பிரிகியாவும் நடிகர் ஆர்யாவுடன் திரைப்படம் ஒன்றில் நடிக்கப் போவதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம், பேஸ்புக் பக்கங்களில் ரசிகர்களுக்கு தெரிவித்து இருந்தார்.

புது பிரச்சனை
இந்த நிலையில் கல்லூரி படிப்பை படித்துக் கொண்டிருக்கும் பிரிகியாவிற்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. பிரிகியாவுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நபர் ஏற்கனவே பல வருடங்களாக பிரிகியாகவை காதலித்து வந்ததாகவும் தற்போது பிரிகியாவும் அவரை காதலித்து வந்ததால் இருவீட்டாரின் சம்மதத்தோடு மகிழ்ச்சியாக இவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது. அந்த வீடியோக்களை பிரிகியாவும் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் இவர் தனது தந்தையோடு வீட்டை விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரிகியாவின் தாய் கதறி அழுத பல வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அது மட்டும் அல்லாமல் பிரிகியாவின் ஐடி கார்டு முதலியவற்றை கூட எரித்த மாதிரியான வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் பிரிகியா அம்மா அண்ணன் யாரும் வேண்டாம் என்று வீட்டை விட்டு சென்றது ஆர்யாவால் தானா?? என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

ரசிகர்களின் கருத்துக்கள்
பிரிகியா மற்றும் அவருடைய அண்ணன் அம்மா அனைவரும் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் டான்ஸ் ஆடி வீடியோக்களை பதிவிட்டு வருவார்கள். ஒரு அம்மா தன்னுடைய மகள் தன்னை விட்டு சென்று விட்டார் என்று கதறி அழுவது பார்க்கும்போது பாவமாக இருக்கிறது என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அது மட்டும் அல்லாமல் இவ்வளவு நாட்களாக மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களுடைய வாழ்க்கையில் ஆர்யாவின் திரைப்படம் வேதனையை கொடுத்து விட்டதே என்று சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் . பிரிகியாவின் அம்மாவும் தன்னுடைய வீடியோவிற்கு மீடியாவில் இருப்பவர்கள் எப்போதும் உனக்கு உதவி செய்ய மாட்டார்கள் நாங்கள் தான் உன்னை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறி வருகிறார். ரசிகர்களும் இதைத்தான் அறிவுரைகளாக கூறி வருகிறார்கள். தங்களுடைய வீட்டு பிரச்சனைகளை சமூக வலைதளத்தில் தெரிவிப்பதால் பலரும் பலவிதமாக வதந்திகளை ஏற்படுத்தி வருவார்கள் என்று புரிந்து கொண்டால் சரி என புத்திமதிகளை கமாண்டுகளாக போஸ்ட் செய்து வருகிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications