Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அன்று ரெட் கார்டு..இன்று ரெக்கார்டு.. சிம்புவை வாழ்த்தும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று கவுரவ டாக்டர் பட்டம் பெற்றிருக்கும் சிம்புவின் வளர்ச்சியை பார்த்து அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சிம்புவுக்கு வாழ்த்து கூறி அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகிறார்கள்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்

குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரையில் அறிமுகமாகி தன்னுடைய துடுக்குத்தனமான பேச்சால் குழந்தைகளை மட்டுமல்லாமல் பெரியவர்களையும், இளைஞர்களையும் கவர்ந்த ஒரு நடிகராக தான் ஆரம்பத்தில் சிம்பு அறிமுகமாகி இருந்தார். நாட்கள் செல்ல செல்ல தன்னுடைய நடனத்தின் மூலமாக அனைத்து தரப்பினரையும் வசீகரிக்க தொடங்கிவிட்டார். இவருடைய துடிப்பான பேச்சு அவருடைய தந்தையின் சாயல் ஆக இருந்தாலும் அது க்யூட்டாக இருக்கிறது என்று இவருக்கு குழந்தையாக இருக்கும்போதே பலர் மன்றங்களை துவங்கியிருக்கின்றனர்.

நடன நிகழ்ச்சியில் நடுவர்

நடன நிகழ்ச்சியில் நடுவர்

வெள்ளித்திரையில் பிசியாக கலக்கிக் கொண்டிருக்கும் இவர் சின்னத்திரையும் விட்டுவைக்காமல் நடன நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்து கொண்டுள்ளார். தான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி இருந்தாலும் இவருடைய ரசிகர்களுக்கு இந்த செயல் வருக்கத்தை கொடுத்திருந்தது.

தடையான ரெட் கார்ட்

தடையான ரெட் கார்ட்

நடிப்பு இயக்கம் நடனம் என பன்முகத் திறமை கொண்ட இவருடைய திறமைக்கு அங்கீகாரமாக தான் தற்போது இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. சர்ச்சைகளின் நாயகன் ஆக இவர் பல நேரம் வலம் வந்து கொண்டிருந்தாலும் இவருடைய ரசிகர்கள் இவருக்கு அதிகமான சப்போர்ட் கொடுத்துக் கொண்டிருந்தனர். தற்போது இவர் நடித்து வெளியான மாநாடு திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஆனால் அதற்கு முன்பு வரைக்கும் இவருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டு இருந்தது.

மீம்ஸ்களில் புகழ்ச்சி

மீம்ஸ்களில் புகழ்ச்சி

இவருக்கு வழங்கப்பட்ட ரெட்கார்ட் தவறானது என்று அவருடைய குடும்பத்தினரும் நியூஸ் சேனல் முதல் சமூகவலைத்தளங்கள் வரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தனர். பின்பு இவருக்கான அந்த ரெக்கார்ட் கேன்சல் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது இவருக்கு வேல்ஸ் கல்வி நிறுவனத்தின் சார்பாக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இது இவருடைய ரசிகர்களுக்கு கிடைத்த வெற்றியாக கொண்டாடி வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் இவருக்கு எவ்வளவோ மீம்ஸ்கள் போட்டு புகழ்ந்து வருகின்றனர்.

தொடரும் வசனங்கள்

தொடரும் வசனங்கள்

மாநாடு திரைப்படத்தில் வரும் வசனத்தை போலவே இவருடைய வாழ்க்கையும் அமைந்து இருக்கிறது என்று ரசிகர்கள் பலர் வந்தான்..வென்றான்..ரிப்பீட்டு..என்றெல்லாம் கூறிவருகின்றனர். அதுமட்டுமல்லாமல் 'தொட்டா பவருடா மவனே சொன்னா கேளுடா' என்று பலர் பாட்டு போட்டு ஆட்டம் போட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அன்று ரெட் கார்டு...இன்று ரெக்கார்ட் என இவருக்கு தீவிரமான விசிறிகள் விசிறி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+