வேறு தொடர்பு..வயிற்றில் எட்டி உதைத்து அடித்தார்..டிவி நடிகை திவ்யா கண்ணீர்..அர்ணவ் மீது புகார்
சென்னை: வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு தன்னை அசிங்கமாக திட்டுவதாகவும் வயிற்றில் எட்டி உதைத்து அடித்து கொடுமைப்படுத்தியதாகவும் செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா தனது கணவர் அர்ணவ் மீது குற்றம் சாட்டியுள்ளார். அவருக்காக மதம் மாறி திருமணம் செய்த தன்னை தவிர்ப்பதாகவும் கூறியுள்ளார் திவ்யா.
பெங்களூருவைச் சேர்ந்தவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். 'பல்லக்கி' எனும் கன்னட படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். கன்னடத்தில் அவர் நடித்த அக்ஷதீபா சீரியலில், தீபா என்னும் கேரக்டர் அவருக்கு பெரும் புகழை சேர்த்தது.
இவர் தமிழில்'கேளடி கண்மணி' சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். புதுக்கோட்டையைச் சேர்ந்த நைனா முகமத் என்பவர் அர்ணவ் என்ற பெயரில் டிவி சீரியலில் நடித்து வருகிறார். 'கேளடி கண்மணி' தொடரில் நடித்ததன் மூலம் அர்ணவ் மற்றும் திவ்யா பிரபலமானார்கள். மகராசி, செவ்வந்தி சீரியலிலும் நடித்துள்ளார் திவ்யா. அர்ணவ் தற்போது செல்லம்மா சீரியலில் நடித்து வருகிறார்.

5 ஆண்டு காதல்
கேளடி கண்மணி சீரியலில் நடித்த போது, இருவரும் நட்பாக பழகிய நிலையில் காதலிக்க தொடங்கினர். ஒரே வீட்டிலும் வாழத் தொடங்கினர். 2017 ஆம் ஆண்டு முதல் காதலித்த இவர்கள் 5 ஆண்டுகளுக்கு பின்னர் திருமண வாழ்க்கையிலும் ஒன்று சேர்த்தனர் தற்போது காவல்நிலைய படியேறி தனது கணவர் அர்ணவ் தன்னை ஏமாற்றி விட்டதாக புகார் அளித்துள்ளார்.

காதல் திருமணம்
திவ்யா இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறி,இந்தாண்டு ஜூன் மாதம் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் சென்னை வடக்கு மாவட்டம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இருவரும் மூன்று மாதமாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இதன் காரணமாக நடிகை திவ்யா கர்ப்பமானார். பலரும் வாழ்த்துக்களையும் கூறி வந்தனர்.

கணவர் தாக்கியதாக புகார்
இந்தநிலையில் கணவர் அர்ணவ் தன்னை தாக்கியதாக கூறியுள்ளார் நடிகை திவ்யா. தன்னை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியதாகவும் வீடியோ வெளியிட்டார் திவ்யா. கொரோனா காலத்தில் வேலை இல்லாமல் இருந்த அர்ணவையும் வீட்டுச் செலவுகளையும் தானே பார்த்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இருந்தாலும், அர்ணவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாக அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். இது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அர்ணவ் மறுப்பு
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் திவ்யாவின் கணவரும் நடிகருமான அர்ணவ் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் தனது மனைவி திவ்யா, அவரது நண்பர் ஈஸ்வர் என்பவருடன் இணைந்து மூன்று மாத கருவை கலைக்க நாடகம் நடத்துவதாக கூறியுள்ளார். எனவே இது சம்பந்தமாக மனைவி திவ்யா,நண்பர் ஈஸ்வர்,இதற்கு துணை போன மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

சிசிடிவி ஆதாரம்
திவ்யாவை தான் தாக்கியதாகக் கூறியிருப்பது முற்றிலும் பொய். வீட்டில் தான் இல்லை என்பதற்கு ஆதாரமாக சிசிடிவி காட்சிகள் உள்ளது. திவ்யா கருவைக் கலைப்பதற்காக நாடகம் ஆடுகிறார். தவறான நண்பர்களின் வழிகாட்டுதலால் திவ்யா புகார் கூறியுள்ளதாக அர்ணவ் தெரிவித்துள்ளார்.

பாசமாக இல்லை
இதனிடையே செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க பேசிய திவ்யா.. அர்ணவ் என்னிடம் பாசமாகவே இல்லை. நான் அர்ணவ் உடன் வாழ ஆசைப்படுகிறேன். நான் என்னோட மதத்தை விட்டு விட்டு அவரோட மதத்திற்கு மாறினேன். ஆனால் என்னை பொருட்படுத்துவதே இல்லை. எனக்கு என்ன வேண்டும் என்று கூட கேட்பதில்லை. ஒரே வீட்டில் தனித்தனியாக இருக்கிறோம் அவராகவே ஆர்டர் செய்து சாப்பிடுவார் என்று கண்ணீருடன் கூறினார்.

இந்து முறைப்படி திருமணம்
அவருக்கான நான் மதம் மாறினாலும் இந்து முறைப்படியும், முஸ்லீம் முறைப்படியும் திருமணம் செய்து கொண்டோம். 5 ஆண்டுகாலம் நாம் பாசமாக இருந்தோம். நான் கர்ப்பமானேன். எந்த புகைப்படத்தையும் சோசியல் மீடியாவில் போஸ்ட் செய்ய விடவில்லை. படிப்படியாக என் மீதான பாசம் குறையத் தொடங்கியது. சீரியலில் நடிக்கும் வேறு பெண்ணுடன் நெருங்கத் தொடங்கினார். இதனையடுத்தே நான் திருமணம் நடந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்தேன்.

வேறு பெண்ணுடன் தொடர்பு
கர்ப்பமாக இருக்கும் காலத்திலும் நான் சீரியல் சூட்டிங் செல்கிறேன். என்னை அடித்து தள்ளி விட்டார். மருத்துவமனையில் பொய் சொல்ல சொன்னார். நானும் ஃபுட் பாய்சன் ஆகிவிட்டது என்று பொய் சொன்னேன். ஆனால் என்னை அடித்து உதைத்து துன்புறுத்துவதோடு வயிற்றில் அடித்து உதைத்தார். வேறு ஒரு பொண்ணுடன் தொடர்பு வைத்து கொண்டு என்னை அசிங்கப்படுத்துகிறார் என்று கண்ணீர் விட்டு கதறினார் திவ்யா.

சாபம் விடுகிறார்
என்னை சோசியல் மீடியாவில் இருந்து பிளாக் செய்து விட்டார். என் குழந்தை வயிற்றுக்குள் செத்து விடும் என்று அர்ணவ் கூறியுள்ளார். அந்த பெண் என் முன்னாடியே என் கணவருக்கு முத்தம் தருகிறார். ஐ லவ் யூ, ஐ மிஸ் யூ என்று வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்புகிறார். எனக்கு பயமாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார் திவ்யா. நான் சோசியல் மீடியாவில் போட்டோக்களை போட்டதில் இருந்தே எனக்கு கொடுமை ஆரம்பமாகிவிட்டது.

போலீஸ் விசாரணை
என்னை கேவலமாக திட்டி அடித்தது பற்றி அனைத்து ஆதாரங்களும் உள்ளன. வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறி கண்ணீர் விடுகிறார் திவ்யா. இதனிடையே திவ்யா அளித்த புகார் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. டிவி நடிகர் அர்ணவிடம் காவல் நிலையத்தில் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது.
-
Gold Rate Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,120 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு? -
வங்கிக் கணக்கில் மேலும் ரூபாய் 6,000.. BLO ஊதியம் டபுள் மடங்கு ஆனது.. ஊக்கத்தொகையும் உயர்வு! -
வெயில் மண்டையை பொளக்கப்போகுது.. வார்னிங் கொடுத்த வானிலை மையம்! இந்த மாவட்டங்கள் உஷார் -
DMK Alliance: 42/234! இதுவரை திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு? -
"ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை.." சென்னையில் மூடப்படும் பெட்ரோல் பங்குகள்.. உண்மையில் என்ன காரணம்! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி?












Click it and Unblock the Notifications