இது என் ஊர்..நீ கர்நாடகாவில இருந்து வந்திருக்கே..மிரட்டும் அர்ணவ்..மகளிர் ஆணைய படியேறிய திவ்யா
சென்னை: இது தமிழ்நாடு என்னோட ஊர் என்றும் கர்நாடகாவில் இருந்து வந்து நீ இப்படி செய்தால் நான் என்னென்ன செய்வேன் என்று நீ பார்க்கப்போகிறாய் என்றும் செவ்வந்தி டிவி சீரியல் நடிகை திவ்யாவை நடிகர் அர்ணவ் மிரட்டும் புதிய ஆடியோ வெளியாகியுள்ளது.
செவ்வந்தி டிவி சீரியல் நடிகை திவ்யா இவர் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். பல்லக்கு என்னும் கன்னட சினிமாவில் தனது மீடியா பயணத்தை தொடங்கி இருந்தாலும், இவருக்கு கன்னட சீரியல் மூலம் தான் மக்கள் மத்தியில் பெயர் கிடைத்தது.
சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி என்ற சீரியல் மூலம் தான் இவர் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனார். அதே சீரியலில் அர்ணவ் உடன் இணைந்து நடித்தார் திவ்யா. இருவரும் காதலிக்கவே ஒரே வீட்டில் வசித்து வந்தனர். சமீபத்தில் அர்ணவ் உடன் திருமணம் நடைபெற்றதாக புகைப்படங்களை பதிவிட்டார் திவ்யா. இதன் பின்னர்தான் இவருடைய வாழ்க்கையில் பூகம்பம் உருவானது.

முதல் திருமணம்
திவ்யாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி 5 வயதில் மகள் இருக்கிறார். அவருடைய மகள் பெயர் ஜெய்சனா. ஏற்கனவே திவ்யா தன் மகளின் புகைப்படத்தை பதிவிட்டு எனது தன் அக்கா மகள் என்று கூறி இருந்தார். ஆனால், இவருடைய முதல் திருமணத்தில் என்ன பிரச்சனை? எப்படி விவாகரத்தானது என்பது பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.

அர்ணவ் கொடுமை
இந்த நிலையில் அர்ணவ் திவ்யா காதல் ஜோடி திடீரென திருமண பந்தத்தில் இணைந்தனர். இவர்களுடைய திருமணத்தை சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ரெஜிஸ்டர் ஆபிஸில் பதிவு செய்துள்ளனர். திடீரென திவ்யா ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அர்ணவ் தன்னை அடித்து கொடுமை படுத்தியதாகவும் அதில் தனது வயிற்றில் வளரும் கருவுக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

அர்ணவ் மறுப்பு
உடனே இதனை மறுத்தார் அர்ணவ். திவ்யாவிற்கு மன நலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மன அழுத்தத்தில் இருக்கும் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறினார். அனைத்து பிரச்சினைக்கும் நடிகர் ஈஸ்வர்தான் காரணம் என்றும் தன்னை ஈஸ்வர் மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டினார் அர்ணவ்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த திவ்யா, முஸ்லீமான அர்ணவ் தன்னை இந்து மதத்திலிருந்து அவருடைய மதத்திற்கு மாறினால்தான் திருமணம் செய்து கொள்ள முடியும் என கட்டாயப்படுத்தி என்னை மதம் மாற்றிவிட்டு தற்போது கர்ப்பிணியாக இருக்கும் போது என்னை ஏமாற்றிவிட்டு செல்லம்மா டிவி சீரியலில் நடிக்கும் இன்னொரு நடிகையுடன் நெருக்கமாக இருந்து வருகிறார் என்றும் திவ்யா குற்றம் சாட்டியுள்ளார். காவல் நிலையத்திலும் அர்ணவ் மீது திவ்யா புகார் அளித்துள்ளார்.

ஆஜராக சம்மன்
டிவி சீரியல் நடிகை திவ்யா அளித்த புகாரின் பேரில் நடிகர் அர்ணவ் மீது போரூர் அனைத்து மகளிர் காவல்துறை 3 வழக்குகள் பதிவு செய்துள்ளது. இதனையடுத்து நடிகர் அர்ணவ் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என போரூர் அனைத்து மகளிர் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

லவ் ஜிகாத்
இதனிடையே லவ் ஜிகாத்தால் தான் ஏமாற்றப்பட்டுள்ளதாக நடிகை திவ்யா மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். நடிகர் அர்ணவ் தன்னை மிரட்டுவதாக ஆடியோ ஒன்றை நடிகை திவ்யா வெளியிட்டுள்ளார். அதில் தான் தமிழன் என்றும், தமிழ் நாட்டிலேயே வந்து உனது வேலையை காண்பிக்கிறாயா என அர்ணவ் பேசியுள்ளார். இது என் ஊர் கர்நாடகாவில் இருந்து இங்கே நீ இப்படி செய்தால் நான் என்ன செய்கிறேன் பார் என்று பேசிய ஆடியோக்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

மகளிர் ஆணையத்தில் புகார்
இந்நிலையில் நடிகர் அர்ணவ் தன்னை வேண்டுமென்றே திட்டமிட்டு இஸ்லாமியராக மதம் மாற்றி கர்ப்பம் அடைய செய்து, வேறோரு முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக திவ்யா மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அர்ணவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ள திவ்யா, தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் எந்த ஒரு ஆதரவுமின்றி நிற்பதாகவும் மாநில மகளிர் ஆணையத்திற்கு அளித்துள்ள புகாரில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே காவல் நிலைய படியேறிய அர்ணவ் இப்போது மகளிர் ஆணையத்தின் படியேறியுள்ளார்.
-
Gold Rate Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,120 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு? -
வங்கிக் கணக்கில் மேலும் ரூபாய் 6,000.. BLO ஊதியம் டபுள் மடங்கு ஆனது.. ஊக்கத்தொகையும் உயர்வு! -
வெயில் மண்டையை பொளக்கப்போகுது.. வார்னிங் கொடுத்த வானிலை மையம்! இந்த மாவட்டங்கள் உஷார் -
DMK Alliance: 42/234! இதுவரை திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு? -
"ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை.." சென்னையில் மூடப்படும் பெட்ரோல் பங்குகள்.. உண்மையில் என்ன காரணம்! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி?












Click it and Unblock the Notifications