சீரியலில் இருந்து திடீரென விலகிய வெங்கட் "நான் வெளியேறுவது ஒரு சிலருக்கு சந்தோசம் தான்” என உருக்கம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் இருந்து வெங்கட் விலகி இருப்பது ரசிகர்களின் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரபலமாக இருக்கும் ஒரு சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் இருந்து இவர் விலகியதும் அதற்கான காரணம் என்ன என்று தான் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
தான் இந்த சீரியலில் இல்லை என்பது பலருக்குதான் வருத்தமாகவும் சிலருக்கு சந்தோஷத்தையும் கொடுக்கும் என்று வருத்தத்தோடு கூறியிருக்கிறார்.

திடீரென என்ன ஆச்சு
சன் டிவியில் பரப்பரப்பாக ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் நடித்துக் கொண்டிருந்த வெங்கட் இந்த சீரியலில் இருந்து திடீரென்று விலகியதும் அவருடைய ரசிகர்களின் மத்தியில் பெரும் வருத்தமாகத்தான் இருந்து வருகிறதாம். ஒரே நேரத்தில் விஜய் டிவியிலும் சன் டிவியிலும் இவருடைய சீரியல் ஒளிபரப்பாகி வருவதால் இவருடைய ரசிகர்களுக்கு நன்றாகத்தான் இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் இவர் தற்போது எடுத்த முடிவுதான் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான்
ஆனால் திடீரென்று இவர் சீரியலை விட்டு விலகுகிறார் என்று சொன்னதும் ரசிகர்களுக்கு ஷாக் ஆக தான் இருக்கிறது. இந்த சீரியலில் இருந்து இவர் எதற்காக வெளியேறுகிறார் என்று தெரியாமல் இருந்தவர்களுக்கு தற்போது, இவர் ரோஜா சீரியலில் இருந்து தான் விலகுவதாகவும் அது ஒரு சிலருக்கு வருத்தமாகவும் ஒரு சிலருக்கு சந்தோஷமாகவும் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய ரசிகர்களுக்கும் என்னால் தொடர்ந்து இந்த சீரியலில் நடிக்க முடியவில்லை அதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள் என்று மன்னிப்பு கேட்டிருக்கிறார். இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட செய்தி தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.

பாண்டியன் ஸ்டோரில் பிரபலம்
புகுந்த வீடு, ஆண்பாவம், மாயா, தெய்வம் தந்த வீடு, அக்னி பறவை, மெல்லதிறந்ததுகதவு, நினைக்கத் தெரிந்த மனமே போன்ற பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். ஆனால் இவருக்கு மிகவும் பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான். இந்த சீரியல் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமடைந்து வருகிறது. அண்ணன் தம்பிகளின் பாசக் கதையை மையமாக வைத்து இந்த சீரியல் எடுத்திருந்தாலும்
சீரியலுக்கு ரசிகர்கள் பலர் இருக்கின்றனர். அதுவும் இந்த சீரியலில் முதல் தம்பியாக ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் சொந்த ஊர் பழனி தான். தொலைக்காட்சிகளில் முதல் முறையாக தொகுப்பாளராக அறிமுகமாகி அதற்குப் பின்னர் கனா காணும் காலங்கள் என்னும் சீரியல் மூலமாக நடிக்கத் தொடங்கியவர்.

ஜீவாவாக வருகிறேன்
தற்போது இவர் சீரியல்களில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக தான் இருந்துவருகிறார். இவருடைய இன்ஸ்டாகிராமில் அடிக்கடி இவர் சூட்டிங் ஸ்பாட் வீடியோக்களையும், ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு வருவார். அந்த மாதிரி தான் தற்போது கூட இவர் வெளியிட்ட ஒரு போஸ்ட் செம வைரலாக பரவி வருகிறது. இது வரைக்கும் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில் அஸ்வின் கேரக்டரில் நடித்து வந்த இவர் இனி இந்த கேரக்டரில் என்னால் தொடர முடியவில்லை உங்கள் அனைவருக்கும் "ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி. உங்களை ஏமாற்றியதற்கு மன்னித்துவிடுங்கள் ஆனால், நீங்கள் என்னை ஜீவாவாக தொடர்ந்து பார்க்கலாம் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி என்று பதிவிட்டிருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்!












Click it and Unblock the Notifications