காலங்கள் மாறினாலும் மறையாத காமெடி..ரசிகர்கள் தேடும் வெண்ணிற ஆடை மூர்த்தியின் தீர்க்கமான முடிவு
சென்னை: திறமை என்றுமே தோற்றுப் போனது இல்லை என்பதற்கு அடையாளமாகத் தான் தற்போது வெண்ணிற ஆடை மூர்த்தி இருந்து வருகிறார்.
சினிமாக்களிலும் சீரியலிலும் இருந்து ஒதுங்கி இருக்கும் வெண்ணிற ஆடை மூர்த்தி அவருடைய ரசிகர்கள் அதிகமாக மிஸ் பண்ணி வருகின்றனர்.
தனக்கு தொடர்ந்து வரும் வாய்ப்புகளை ஒரே காரணம் கூறி வெண்ணிற ஆடை மூர்த்தி நிராகரித்துள்ளார்.

மறையாத காமெடி திறமைகள்
பொதுவாக ஒரு சிலருக்குள் தான் பல திறமைகள் ஒளிந்துக்கொண்டிருக்கும் அந்தவகையில் வெண்ணிற ஆடை மூர்த்தியும் ஒருவர், காமெடியன், நடிகர் இயக்குனர், ஜோதிட வல்லுனர், வெளிநாடுகளில் நட்சத்திர இரவு கலை நிகழ்ச்சிகளுக்கு பிள்ளையார்சுழி போட்டவரும் இவரே. இத்தனை திறமைகள் இருந்தாலும் இவர் எம்ஜிஆர் காலத்தில் தொடங்கி தற்போதைய முன்னணி இளம் நடிகர்களுடன் வரைக்கும் நடித்துள்ளார். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் இவருடைய கால்தடம் சிறப்பாக பதிந்துள்ளது.

வெளிநாடுகளிலும் ஜோதிட நிலையம்
சினிமாக்களில் காமெடி நடிகராக மட்டும் தான் பலருக்கும் வெண்ணிற ஆடை மூர்த்தியை தெரியும். ஆனால் அவர் வெளிநாடுகளில் உள்ளவர்களையும் தன்னுடைய ஜோதிட திறமையால் திகைப்படைய வைத்துள்ளாராம். இவருடைய மகன் அமெரிக்காவில் வசித்து வந்துள்ளார். அப்போது அங்கே நம்நாட்டில் தாயத்தில் தொடங்கி நவரத்தின கற்கள் வரை ஜோதிட நம்பிக்கைக்கு ஆதாரங்களாக இருப்பதுபோல அமெரிக்காவிலும் இருந்திருக்கிறது. அங்கும் ஜோதிட நிலையங்கள் இவருடைய மகன் வேலை செய்யும் ஆபீஸ் அருகிலே இருந்திருக்கிறது. அந்த நிறுவனத்தின் பெயர்'சைக்கிக் ஐ'என்பதாம். அப்போ இவருடைய பையன் நீங்கள்தான் பெரிய ஜோதிட நிபுணர் ஆச்சே இங்குள்ள ஒரு ஜோதிடரை சந்தித்தால் என்ன என்று கேட்டிருக்கிறார். அதற்கு வெண்ணிற ஆடை மூர்த்தி சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

வியக்க வைத்த தருணம்
அந்த ஜோதிட நிலையத்திற்குள் அதன் தலைவரை சந்திக்கப் போனபோது அங்கே இருந்த ஜோதிடர் ஒரு பெண்ணாக இருந்திருக்கிறார். அவரை பார்த்ததும் முதல் முறையாக மேடம் நீங்கள் சிம்ம ராசி தானே என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த பெண் ஜோதிடர் அதிசய பட்டிருக்கிறார். ஒருவரை நாம் சந்திக்கும் நேரத்தை வைத்து அவரது ராசியை கணக்கிட்டு விடலாம் என்று அடிப்படையில் தான் உங்கள் ராசியை கண்டேன் என்று இவர் கூறியிருக்கிறாராம். இது அந்தப் பெண்மணிக்கு வியப்பை கொடுத்து இருந்ததாம். அதுமட்டுமல்லாமல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வந்தபோது கூட இவர் இவருடைய பையனிடம் கூறியது போல புஸ் தான் அந்த முறை ஜெயித்தாராம். அப்போது கூட அவருடைய பையன் நீங்கள் கூறியதை கேட்டு நெட் மூலமாக வெளியிட்டிருந்தால் ஒரே நாளில் உலகப்புகழ் பெற்று இருப்பீர்கள் என்று கூறியிருக்கிறார்.

தேடும் ரசிகர்கள்
வெண்ணிற ஆடை மூர்த்தியின் மகன் வார்த்தையை கேட்டதும் அதற்கு அவர் இருக்கலாம். அதன் பிறகு தேர்தலில் நிற்கும் உலகத் தலைவர்கள் என்னை வேலை பார்க்க விட மாட்டார்களே என்று தனக்கே உரிய நக்கல் தனத்தோடு கூறியிருக்கிறார். ஏற்கனவே கலைத்துறை மூலம் உலகம் முழுக்க உள்ள கலை ரசிகர்களுக்கு தெரிந்தவராகவும், அளவற்ற அன்பு கொண்டவராக இருக்கிறேன். அந்த சந்தோஷமும், அந்த புகழ் மட்டும் போதும் என்று இவர் கூறுகிறார். அந்த அளவிருக்கு கலைத்துறையை நேசித்த வெண்ணிற ஆடை மூர்த்தி தற்போது திரை உலகத்தை விட்டு விலகி இருக்கிறார். வெண்ணிற ஆடை மூர்த்திக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள், சீரியல் வாய்ப்புகளும் வந்து கொண்டிருந்தாலும் அவர் நடிப்பதற்கு மறுத்துவிட்டாராம். தற்போது தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளோடு அவருடைய சொந்த வீட்டில் வாழ்ந்து வருவதால் இனி நடிப்பு வேண்டாம் என்று இவர் ஒதுங்கி இருக்கிறாராம். அதுமட்டுமல்லாமல் வெண்ணிற ஆடை மூர்த்தி இந்த உறுதியான முடிவு ரசிகர்கள் பலருக்கு ஏக்கமாக இருந்து வருகிறதாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications