சிரித்த முகமாகவே இருக்கும் டிடிக்கு இத்தனை சோகங்களா? அதுவும் தொகுத்து வழங்கும் நேரத்தில் வந்த சோதனை!
சென்னை: விஜய் டிவி தொகுப்பாளராக இருக்கும் திவ்யதர்ஷினியின் வாழ்க்கை மற்றும் அவருடைய திருமண வாழ்க்கையில் பல எதிர்பாராத கஷ்டங்கள் நடந்திருக்கிறது.
டிடி யின் உடல்நிலையில் யாரும் எதிர் பார்க்காத பல சோகங்கள் பற்றி ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
பல நாட்களுக்கு பிறகு நடிகை நயன்தாராவை பேட்டி எடுத்த டிடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ரசிகர்களை கவர்ந்த தொகுப்பாளர்
பொதுவாக நடிகைகள் மட்டும்தான் அழகாக இருப்பார்கள் அவர்கள் தான் விதவிதமாக மேக்கபில் வலம் வருவார்கள் என்று நம்பிக்கொண்டிருந்தவர்களின் மனநிலையை மாற்றும் முயற்சியை முதல் முதலாக எடுத்தவர்களில் ஒருவராக டிடியும் இருந்து வருகிறார். இவர் திவ்யதர்ஷினி என்கிற பெயரை டிடி என சுருக்கி வைத்து க்கொண்டு தான் பேட்டி எடுக்கும் பிரபலங்களை விடவும் தானும் சளைத்தவர் அல்ல என்று தன்னுடைய மேக்கப் மற்றும் எப்போதும் முகத்தில் குடி கொண்டிருக்கும் சிரிப்பின் மூலமாக ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். பொதுவாக தொகுப்பாளர்கள் என்று சொன்னதும் ஒரு சிலருடைய முகம் மனதிற்க்கு வரும் அந்த வகையில் முதல் இடத்தை டிடியும் பிடித்து விடுகிறார்.

வாய்ப்புக்காக போராட்டம்
வெளியே சிரித்து கொண்டிருக்கும் ஒருவருடைய வாழ்க்கை மிகவும் அமைதியானதாகவும் கஷ்டங்கள் நிறைந்ததாகவும் இருக்கும் என்பது என்று பலரும் சொல்வார்கள். அந்த மாதிரி தான் டிடி யின் வாழ்க்கையும் இருந்திருக்கிறது. இவர் எட்டாம் வகுப்பு படிக்கும் போது தொகுப்பாளராக அறிமுகம் ஆகி இருக்கிறார். ஆனால் ஒரு பெயரை பெற்று விட வேண்டும் என்பதற்காக இவர் பல நாட்களாக போராடி கொண்டு தான் இருந்திருக்கிறார். ஆரம்பத்தில் இவருக்கு தனியாக ஒரு நிகழ்ச்சி கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று பல்வேறு போராட்டங்களை சந்தித்து இருக்கிறார். இவருக்கு ஒரே ஒரு வாய்ப்பு தான் முதலில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் சிறப்பாக இருந்தால் மட்டும்தான் மீண்டும் வாய்ப்பு என்று விஜய் டிவியின் முதலில் கூறியிருந்தார்களாம்.

பிரபலமான எபிசோடு
ஆரம்பத்தில் நான் ஒரே ஒரு எபிசோடு பண்ணிக்கிறேன் அது நல்லா இல்லை என்றால் வேற ஒருவரை வைத்து முடித்து விடுங்கள் என்று டிடி கூறி இருந்தாராம். அதன்படி இவருக்கு கொடுத்த வாய்ப்பு விநாயகர் சதுர்த்தியில் தான் கிடைத்திருக்கிறது. இவருடைய எபிசோடு அதிகமான வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தான் இவருக்கு காபி வித் டிடி என்கிற டைட்டில் கொடுத்து ஒரு நிகழ்ச்சியை கொடுத்திருக்கின்றனர். இவர் 2013 வரைக்கும் தனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று கேட்டு வாங்கி தான் இவர் ஒவ்வொரு முறையும் இருந்திருக்கிறார் .ஆனால் அதற்குப் பிறகு இவருக்கு பல நிகழ்ச்சிகள் கிடைக்க தொடங்கி இருக்கிறது நல்ல ஒரு இடத்தையும் அடைந்திருக்கிறார்.

கஷ்டமான தருணங்கள்
அந்த நேரத்தில்தான் டிடி யின் வாழ்க்கையில் பெரிய எதிர்பாராத மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இவருடைய திருமணம் நடைபெற்றது. இவருடைய திருமணத்திற்கு அதிகமான பிரபலங்கள் கலந்து கொண்டு இவரை வாழ்த்தி இருந்தனர். இவர் எதிர்பார்க்காத பல சர்ப்ரைஸ் அவருடைய திருமண மேடையிலே கிடைத்தது. மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவருடைய வாழ்க்கையில் அதற்கு பிறகு தான் பல பிரச்சனைகளும் தோன்ற தொடங்கியது. கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்து விட்டதாக தகவல்கள் ஒரு சில மாதங்களில் வெளியே வந்தது.அந்த நிலையில் இவர் ரம்யா கிருஷ்ணனை பேட்டி எடுப்பதற்காக சென்றிருக்கிறார். அப்போது வாசலில் இருக்கும் போது தான் இவருக்கு விவாகரத்து தான் இனி முடிவு என்ற செய்தி கிடைத்திருக்கிறது.

பிரச்சனைகளை கண்டு கொள்வதில்லை
வாழ்க்கையில் பெரிய ஏமாற்றம் தனக்கு கிடைத்தாலும் அந்த இடத்தில் இனி அடுத்ததாக தான் இனி எடுக்கப் போகும் முடிவு என்ன என்பதை இவர் உறுதியாக எடுத்து இருக்கிறார். நமக்கு அடுத்ததாக நம்மை கொண்டு சென்று கொண்டிருக்கும் பாதையை நோக்கி நாம் பயணிக்க வேண்டும் என்று அப்போதுதான் அவர் முடிவெடுத்து அந்த நிகழ்ச்சியை முடித்து இருந்தாராம். அப்போது இவருக்கு மனதுக்குள் பல சோகங்கள் இருந்தாலும் வெளியே சிரித்த படியே அந்த நிகழ்ச்சியை நடத்தி முடித்திருக்கிறார். விவாகரத்துக்கு பிறகு பல்வேறு மோட்டிவேஷனல்களை கொடுத்து வந்தாலும் டிடியின் உடல் நிலையிலும் பல்வேறு பிரச்சனைகள் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கிறது. தற்போது டிடியால் அதிக நேரமாக நின்று கொண்டு இருக்க முடியாதாம். அதனால் தான் அவர் பல நிகழ்ச்சிகளுக்கு வீல்சேரில் வந்த வண்ணமாகவே இருக்கிறார்.












Click it and Unblock the Notifications