எப்படி எல்லாம் பேசிய கோபிக்கு கடைசியில் இப்படி ஆகிவிட்டதே!! கோபி அம்மா சொன்னது நடந்துருமோ!!
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் பல எதிர்பாராத மாற்றங்கள் நடைபெற்று இருக்கிறது.
கோபி ராதிகாவின் திருமணத்திற்கு பிறகு கோபியின் வாழ்க்கை இப்படி மாறும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்கவே மாட்டார்கள்.
பல நாள் ஆசைப்பட்டு பெரும் பிரச்சனைக்கு பிறகு திருமணம் செய்த கோபி தற்போது புலம்பி கொண்டிருக்கிறார்.

புலம்பும் கோபி
பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட் ஆரம்பமாகும் போதே கோபி தனியாக உட்கார்ந்து இருக்க என்ன எல்லோரும் தூங்கிட்டாங்களா? என்று அவருக்கு அவரே கேள்வியை எழுப்பி இருக்கிறார். நான் என்ன புது மாப்பிள்ளையா? பழைய மாப்பிள்ளை தானே? என்று புலம்பி கொண்டு இருக்கிறார். அப்போது ராதிகாவின் அம்மாவும், அண்ணனும் வந்து கோபியிடம் பேச்சு கொடுக்கிறார்கள். உங்க வீட்டில் இருக்கிறவங்க வந்து மண்டபத்துல அப்படி பிரச்சனை பண்ணுனது கொஞ்சம் கூட சரியில்லை என்று குறை கூறிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு கோபி மன்னிப்பு கேட்கிறார். எங்க வீட்டு சைடுல உங்கள பத்தி ஒரு வார்த்தை பேசணுமா? ஆனா உங்க வீட்ல இருக்கவங்க எல்லோரும் எப்படி பேசினாங்க? இனிமே இப்படி நடக்கக் கூடாது என்று கராராக மாமியார் கண்டிஷன் போட்டுக் கொண்டிருக்கிறார்.

எல்லாத்துக்கும் சரி மட்டும்தான் பதில்
எல்லாத்துக்கும் சரி சரி என்று பூம்பும் மாடு மாதிரி கோபி தலையை ஆட்டி கொண்டு இருக்கிறார். அதோடு மயூவை உங்கள் பொண்ணு மாதிரி பார்த்துக்கணும். இனிமே நீங்க ராதிகா மயூரா மட்டும்தான் குடும்பம் .வேற யாரும் கிடையாது. உங்களுக்கு இரண்டு குடும்பம் எல்லாம் இல்லை. ஒரே ஒரு குடும்பம் தான். ஒரே ஒரு குழந்தை மட்டும் தான். அது மயூ மட்டும்தான். வேறு யாரை பற்றியும் நினைக்க கூடாது என சொல்ல கோபி அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். இப்போது எதுவும் பேசினால் சரியாக வராது என்று சொல்வதற்கெல்லாம் தலையாட்டி கொண்டிருக்கிறார். இனியாவின் பேச்சை இந்த வீட்டில் இனி எடுக்கக் கூடாது என்பதை மறைமுகமாக குத்திக்காட்டிக் கொண்டிருக்கிறார்.

எதிர்பார்ப்போடு கோபி
அடுத்ததாக கோபி முதலிரவு அறையில் உற்சாகமாக பாட்டு பாடி கொண்டு தயாராக இருக்கிறார். அதே நேரத்தில் ராதிகாவின் அண்ணி, ராதிகாவை ரெடி செய்து கொண்டிருக்கிறார். பிறகு ராதிகாவின் அம்மா வந்து நடந்ததெல்லாம் நடந்து போச்சு, இனிமேல் நீ வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கணும். அது மட்டும் ஞாபகத்துல வச்சிக்க என சொல்லி அனுப்பி இருக்கிறார். அப்போது மயூ நான் அம்மாவோட தான் தூங்குவேன் என்ன கூறிக் கொண்டிருக்கிறார். மயூவை ராதிகாவின் அம்மா சமாதானப்படுத்தி அழைத்து செல்கிறார்.

கதறி அழுத ராதிகா
ராதிகா ரூமுக்கு போனதும் கோபி உற்சாகமாக அவரை வர்ணித்துக் கொண்டிருக்கிறார். இன்று கல்யாணம் ரிசெப்ஷன் என எல்லா இடத்திலும் நீ ரொம்ப அழகா இருந்த, ஆனா அதை சொல்ல கூச்சமா இருந்துச்சி. எல்லோரும் அங்கே இருந்ததால என்னால உன்கிட்ட மனச விட்டு ஃப்ரீயா பேச முடியல என்று கோபி பேசுகிறார். உடனே ராதிகா ஓவென அழுகிறார். அதிர்ச்சியான கோபி என்ன ஆச்சு என கேட்க ராதிகா கல்யாணத்தில் நடந்தது எல்லாம் ஞாபகம் வந்திருச்சு என சொல்கிறார். இந்தப் பக்கம் பாக்கியா எழிலிடம் கொடைக்கானலில் பள்ளி படிப்பை படித்து விஷயத்தை கூறி தன்னுடைய அப்பா இறந்ததும் எல்லாமே தலைகீழாக மாறிய கதையை சொல்லிக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக தூங்குவதற்காக இனியாவின் ரூம்புக்கு சென்ற பாக்யாவிடம் இனியா தான் என் பிரண்டுக்கு போன் பண்ண வேண்டும் என்று கூறி வெளியே சென்று கோபிக்கு போன் பண்ணுகிறார்.

இப்படியா பண்ணுவீங்க
இந்தப் பக்கம் முதலிரவு அறையில், அழுது கொண்டிருந்த ராதிகாவை ஒரு வழியாக சமாதானப்படுத்தி கோபி முதலிரவுக்காக நெருங்கி செல்ல அதே நேரத்தில் இனியா கோபிக்கு போன் செய்து விடுகிறார் .போனில் இனியாவின் நம்பரை பார்த்ததும் கோபி உடனே போனை எடுத்துக் கொண்டு வெளியே வந்து விடுகிறார். அப்போது இனியா, ஐ ஹேட் யூ, நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நான் எதிர்பார்க்கல என தன்னுடைய கோபத்தை தந்தையிடம் காட்டிக் கொண்டிருக்கிறார். இதனால் கோபி அப்செட் ஆகி விடுகிறார். உள்ளே வந்து ராதிகாவிடம் இனியா தான் போன் பண்ணாள் மனசு சரியில்ல போய் முகத்தை கழுவிட்டு வருகிறேன் என்று பாத்ரூம் செல்கிறார். அதற்குள் மயூ வந்து எனக்கு தூக்கம் வரவில்லை என்று ராதிகாவின் பக்கத்தில் படுத்து கொள்கிறார். பாத்ரூமில் இருந்து வந்து பார்த்து கோபி ராதிகாவுடன் மையூ இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியலின் எபிசோடு முடிவடைந்து விட்டது.
-
அந்த நடிகர் என் நகையை ஏமாற்றி விட்டார்... பிக் பாஸ் தாமரை செல்வி கண்ணீர் வீடியோ! சீரியல் பழக்கம் சீரியஸானது! -
விஜய் டிவியில் மீண்டும் சேரும் பாக்கியலட்சுமி கோபி பாக்கியா.. ஹீரோ யாரு தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் ஹேப்பி -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications