Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாரதி கண்ணம்மா சீரியல் இரண்டாவது பாகத்தின் கதை இதுதானாம்?லீக்கான வீடியோ.. என்னம்மா யோசிச்சிருக்காங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் முதல் பாகம் விரைவில் முடிவடைய இருக்கும் நிலையில் தற்போது அதனுடைய இரண்டாவது பாகம் குறித்த வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

யாரும் எதிர்பார்க்காத கதை களத்துடன் பாரதி கண்ணம்மா சீரியல் இரண்டாவது பாகம் பல்வேறு திருப்பங்களும், மாற்றங்களும் அந்த வீடியோவில் இருக்கின்றது.

முதல் பாகத்துக்கு முடிவு

முதல் பாகத்துக்கு முடிவு

பாரதி கண்ணம்மா சீரியல் விரைவில் முதல் சீசன் முடிவடைய இருக்கின்றது என்ற தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இது இந்த சீரியல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருந்தது. பல வருடங்களாகவே இந்த சீரியல் எப்போது முடியும் என்று ரசிகர்கள் பலர் கேள்வி கேட்டு வந்தனர் .இந்த நிலையில் முதல் பாகம் வெளிவடைய முடிவடைய இருக்கிறது என்று தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இரண்டாவது பாகம் பற்றி தற்போது இணையதளத்தில் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடைசியில் டிஎன்ஏ டெஸ்ட் முடிவு

கடைசியில் டிஎன்ஏ டெஸ்ட் முடிவு

தற்போது டிஎன்ஏ டெஸ்ட் வெளியாக இன்னும் இரண்டு மூன்று நாட்கள் ஆகும் என்று கிளினிக்கில் இருந்து பாரதிக்கு போன் செய்து சொல்லி இருக்கின்றனர் .ஏற்கனவே இரண்டு முறை வெண்பா பாரதியின் டிஎன்ஏ டெஸ்டில் ஏமாற்றம் செய்தது போல இந்த முறையும் ஏமாற்றம் செய்து கண்ணம்மா மீது குற்றம் சுமத்த இருக்கிறாராம். இதனால் கோபத்தில் பாரதி கண்ணம்மாவை வெறுத்து ஒதுக்கியதும், இனி இந்த ஊரில் இருக்க வேண்டாம் என்று கண்ணம்மா ஊரை விட்டு கிளம்பி போக இருக்கிறாராம். அப்போது கண்ணம்மா ஹேமா மற்றும் லட்சுமியோடு காரில் சென்று கொண்டிருக்கும் போது வெண்பா செட் பண்ணி வைத்திருந்த லாரி இடித்து ஆக்சிடென்ட் ஆகிவிடுகிறது.

மீண்டும் சந்தித்த அக்கா தங்கை

மீண்டும் சந்தித்த அக்கா தங்கை

ஆக்சிடெண்டில் லட்சுமி மற்றும் ஹேமா இருவரும் பிரிந்து விடுகின்றனர் .அதில் லட்சுமியை ஒரு பணக்கார தம்பதியினர் எடுத்து வளர்த்து அவரை டாக்டர் படிக்க வைக்கின்றனர் அதே நேரத்தில் ஹேமா ஒரு ஆட்டோ டிரைவராக மாறிவிடுகிறார். இருந்தாலும் இருவரும் கண்ணம்மா உடன் இருந்த நினைவுகளை நினைத்தபடியே வாழ்ந்து வருகின்றனர் .ஒருமுறை காரில் லட்சுமியும், ஆட்டோவில் ஹேமாவும் வந்து கொண்டு இருக்கும் போது ஆக்சிடென்ட் ஆகிவிடுகிறது. அதில் ஹேமா மயக்கமடைந்து விடுகிறார். லட்சுமி காரில் இருந்து இறங்கி ஹேமாவை தூக்கிக் கொண்டு ஹாஸ்பிடல் செல்கிறார். அப்போது இருவர் கையிலும் கே. எல் என்று பச்சை குத்தி இருக்கின்றனர்.

இப்படி ஒரு கதையா

இப்படி ஒரு கதையா

ஹேமா மற்றும் லட்சுமி இரண்டாவது பாகத்தில் ஒரு டாக்டராகவும் ஆட்டோ ஓட்டுநராகவும் எதிர்பாராத பயணத்தை தொடங்கு தொடங்குவதை குறித்ததாக இந்த வீடியோ இருக்கிறது .ஆனால் இது பாரதி கண்ணம்மா சீரியலின் இரண்டாவது பாக கதை அல்ல என்றும் இது எடிட் செய்யப்பட்ட வீடியோ என்றும் பார்க்கும்போது தெரிகிறது. ஆனால் இந்த வீடியோ குறித்து எந்த தகவலையும் சீரியல் தரப்பிலிருந்து கூறப்படவில்லை. இது நெட்டிசன்களின் கைவரிசையாக தான் இருக்க வேண்டும் என்று துல்லியமாக தெரிகிறது. தற்போது இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் இதுதான் பாரதி கண்ணம்மா சீரியலின் இரண்டாவது பாகம் என்று பகிர்ந்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+