குழந்தை பிறந்ததும் அர்ச்சனா செய்த தில்லாலங்கடி வேலை.. ராஜா ராணியில் சிவகாமி எடுக்கப் போகும் முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் இரண்டில் விறுவிறுப்பான கதைக்களம் வந்துள்ளது.
பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த அர்ச்சனா தனக்கு பிறந்த பெண் குழந்தையை மாற்றி இருக்கிறார்.
இனி சிவகாமி எடுக்கப் போகும் முடிவு தான் என்னவென்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

மகிழ்ச்சியில் சந்தியா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் 2 சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போதைய எபிசோடு விறுவிறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் சந்தியா ஐபிஎஸ் பயிற்சிக்கு செல்வதற்காக தயாராகி போலீஸ் உடையில் வந்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார். இதற்கெல்லாம் காரணம் சரவணனும் அத்தையும் தான் என சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்.

அர்ச்சனாவுக்கு கிடைத்த அதிர்ச்சி
அதே நேரத்தில் அர்ச்சனா பிரசவலியால் துடித்தபடியே கதறி கொண்டிருக்கிறார். உடனே மயிலு ஆட்டோவை அழைத்து வந்து ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கிறார். அர்ச்சனாவின் பக்கத்து வீட்டுக்காரரின் மகளுக்கும் பிரசவ வலி ஏற்படவே இருவரும் ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மயில் செந்திலுக்கு போன் போட்டுக் கொண்டு இருக்க அவர் போனை எடுக்கவில்லை. இதே நேரத்தில் சந்தியா பரோடுக்கு செல்ல சரவணன் சிவகாமி மற்றும் அவருடைய கணவர் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். அப்போது போலீஸ் அதிகாரி பைக்கில் வந்து கொண்டிருக்கிறார்.

பெண் குழந்தை பிறந்தது
அப்போது ரவி தவறுதலாக நடுரோட்டிற்கு சென்று விடுகிறார். உடனே பைக்கை நிறுத்தி அந்த போலீஸ் ஆபீஸரிடம் சிவகாமி சண்டையிடுகிறார். பிறகு போலீஸ் அதிகாரி கிளம்பி செல்ல இந்த பக்கம் மருத்துவமனையில் அர்ச்சனாவிற்கு பெண் குழந்தையும் அர்ச்சனாவின் வீட்டின் பக்கத்தில் இருக்கும் பெண்ணுக்கு ஆண் குழந்தையும் பிறந்திருக்கிறது. மயிலு செந்திலுக்கு தகவல் தெரிவிக்க போனில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பக்கத்து வீட்டு பெண்மணி கீழே கோவிலுக்கு சென்று இருக்கிறார். இவர்கள் இருவரும் இல்லாததால் குழந்தையை காட்டாமல் தொட்டிலில் போட்டு விடுகின்றனர். பெண் குழந்தை பிறந்ததாக கேள்விப்பட்ட அர்ச்சனா அதிர்ச்சி அடைந்து மயங்கி விடுகிறார்.

சிவகாமி இழுத்த பிரச்சனை
அதேபோல பரோடில் எல்லோருக்கும் பயிற்சி கொடுக்க வந்திருக்கும் போலீஸ் அதிகாரியான உமா ரியாஸ் கானை பார்த்ததும் சிவகாமி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். இப்போது அவரிடம் சண்டை போட்டோம் இனி இதை மனதில் வைத்து சந்தியாவை ஏதேனும் பனிஷ்மென்ட் கொடுத்து விடுவாரோ என்று இவர்களுக்குள் குழப்பமும் ,பயமும் ஏற்பட்டிருக்கிறது. இதோடு இன்றைய எபிசோடு முடிந்துவிட்டது. நாளை எபிசோட்டுக்கான ப்ரோமோ வீடியோவில் அர்ச்சனா யாருக்கும் தெரியாமல் தனக்கு பிறந்த பெண் குழந்தையை மாற்றி வைத்துவிட்டு ஆண் குழந்தையை தூக்கி வந்து தொட்டிலில் வைத்து விடுகிறார். இதனால் ஏற்படும் பிரச்சனைகள் நாளை எபிசோட்டில் பார்க்கலாம்.
-
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications