திருமதி ஹிட்லர் சீரியலில் என்ட்ரியாகும் நடிகை...இனி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சென்னை: ஜீ தமிழ் சீரியலில் இவருக்கு பதில் இவர் என்று புதியதாக களமிறங்கும் விஜே மகாலட்சுமி தற்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்.
என்னதான் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தாலும் தன்னுடைய கேரக்டருக்கு சம்பந்தம் இல்லாத வகையில் அமைதியின் சொரூபமாக சில காலங்கள் இருந்த மகாலட்சுமிக்கு தற்போது பம்பர் பரிசு கிடைத்திருக்கிறது.
ஜீ தமிழில் டி ஆர் பி யில் முதன்மை இடத்தில் இருக்கும் திருமதி ஹிட்லர் சீரியலில் அர்ச்சனா கேரக்டரில் இவர் அறிமுகமாகிறார்.

ரீமேக் சீரியல்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் திருமதி ஹிட்லர் சீரியலில் அமித் பார்கவ் மற்றும் கீர்த்தனா பொடுவால் கதாநாயகன் கதாநாயகியாக நடித்து வருகின்றனர். இவர்களுடன் முக்கிய வேடத்தில் நடிகை அம்பிகாவும் நடித்து வருகிறார். இந்த சீரியல் இந்தி தொலைக்காட்சி தொடராக "குட்டன் தும்சே நா ஹோ பயேகா"வின் ரீமேக் சீரியல்தான். ஆனாலும் தமிழில் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் ஹீரோயினி கீர்த்தனா பொடுவால், ஹாசினி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். ஹீரோ அமித் பார்கவ், ஏஜே கேரக்டரில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரும் செய்யும் சேட்டைகள் சீரியலுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மருமகள்களின் தொல்லை
சீரியல்களாக இருந்தாலும் சரி, சினிமாவாக இருந்தாலும் சரி அதில் வில்லன்கள் இல்லாமல் இருந்தால் கதை சுவாரஸ்யமாக இருக்காது என்பதற்கு சான்றாக இந்த சீரியலிலும் ஏஜேவின் மருமகள்கள் வில்லத்தனம் செய்து மிரட்டி வருகின்றனர். இவர்கள் செய்யும் வில்லத்தனங்கள் எல்லாமே ஒரு கட்டத்தில் ஃபெயிலியர் ஆகி ஹாசினிக்கு சாதகமாகத்தான் அமைந்து கொண்டிருக்கிறது. ஹாசினி இவர்களை கண்டுகொள்ளாமல் போனாலும் விடாமல் துரத்திக் கொண்டிருக்கும் இந்த மருமகள்களின் தொல்லையிலிருந்து ஹாசினி எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் இந்த கதை. சீரியலும் நன்றாகவே சுவாரஸ்யமாக போய்க்கொண்டிருக்கிறது. ஹாசினியும், ஏஜேவும் வெவ்வேறு குணாதிசயங்களோடும் கேரக்டர்களோடும் இருந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் விதியின் வசத்தால் ஒன்று சேர்ந்து திருமண பந்தத்தில் இணைந்து விடுகின்றனர்.

குறும்பான ஹாசினி
ஹாசினி திருமணம் முடிந்து ஏஜேவின் வீட்டிற்கு வந்த நாள் முதலே அவரை எப்படியாவது வெளியே போக வைத்து விட வேண்டுமென்று மூன்று மருமகள்களும் கங்கணம் கட்டிக்கொண்டு ஹாசினிக்கு எதிராக செயல்களை செய்து கொண்டு வருகின்றனர். ஆனால் ஹாசினிக்கு துணையாக அம்பிகா இருந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர் செய்யும் குறும்புகள் ரசிகர்களுக்கு எனர்ஜியை கொடுத்துக் கொண்டிருப்பது போல, ஏஜேக்கு பெரிய தலைவலியாக இருந்து வருகிறது. ஹாசினி என்று பெயர் வைத்தாலே இப்படித்தான் இருப்பார்களோ என்று ரசிகர்களுக்கு தோன்றும் வகையில் தான் செல்லமாக சேட்டைகள் செய்யும் நடிகைகளுக்கு எல்லாம் ஹாசினி என்று பெயர் வைத்து வருகின்றனர். ஏற்கனவே ஜெனிலியாவை ஹாசினியாக பார்த்த ரசிகர்கள் தற்போது கீர்த்தனாவை ஹாசினியாக பார்த்து வருகின்றனர்.

புது அர்ச்சனா
இந்த சீரியலில் ஏஜே மருமகள்களின் மூத்த மகள் அர்ச்சனாவாக இதுவரைக்கும் சௌமியா ராய் நடித்துக்கொண்டிருந்தார். இவர் பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் இந்த சீரியல்களில் தன்னுடைய மிரட்டலான நடிப்பை நன்றாகத்தான் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். ஆனால் தற்போது ஒரு சில எபிசோடுகள் ஆக இவர் சீரியலில் தென்படவில்லை. இதனால் ரசிகர்கள் பலர் இயேசுவின் மூத்த மகளை காணவில்லை என்று கேட்டு வந்தனர் இந்த நிலையில் அவருக்கு பதிலாக தற்போது விஜய் மகாலட்சுமி அறிமுகமாகிறார். இந்த செய்தி ரசிகர்களின் மத்தியில் இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. விஜே மகாலட்சுமிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் தான். தற்போது இவர் சின்னத்திரையில் கதாநாயகியாக தொடங்கி வில்லி கேரக்டரிலும் குணச்சித்திர கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இந்த சீரியலில் இவருடைய நடிப்பு எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications