விலகி இருப்பதை எல்லாம் பார்க்கவில்லை.. கையைதான் பார்க்கிறோம்.. தர்ஷாவை வம்பிழுக்கும் ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : பாவாடை தாவணியில் இடுப்பில் கூடையை வைத்தபடி வியாபாரத்தைத் தொடங்கிய தர்ஷாவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனராம்.

இந்த மாதிரி ஒரு வியாபாரி வந்தால் மொத்தமாக அள்ளிட்டு போயிறலாமே என்று பலர் கிறங்கி போய் கமெண்டுகளில் சில்மிஷம் பண்ணுகிறார்கள்.

அதுவும் அந்த சிரிப்புக்கு எந்த விலை கொடுத்தாலும் போதாது என்று குதூகலிக்கும் ரசிகர்கள், பாவாடை தாவணியில் வெட்கத்தை சிந்தும் தர்ஷாவை பார்த்து சொக்கிப் போய் இருக்கிறார்கள்.

இதைத்தானே எதிர்பார்த்தோம்

இதைத்தானே எதிர்பார்த்தோம்

ரொம்ப நாளைக்கு பிறகு மீண்டும் ரீலீஸ் வீடியோக்களில் பட்டையை கிளப்ப ஆரம்பித்திருக்கும் தர்ஷா குப்தாவைப் பார்த்து அசந்துபோன ரசிகர்களால் இன்ஸ்டாகிராமே அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறது. போட்டி போட்டுக்கொண்டு ரசிகர்கள் கமெண்டுகளை போடுவதால் அங்கே கொஞ்சம் டிராபிக் ஜாம் ஹெவியாக தான் இருக்கிறதாம். அந்த அளவிற்கு பாவாடை தாவணியில் ரசிகர்களை பாடாய்படுத்தி எடுத்திருக்கிறார். எப்போதுமே பாவாடை தாவணியிலும், புடவையும் இவரை பார்த்து ரசித்து இருந்தாலும், தற்போது இவர் வேற லெவல் அசத்திவிட்டார் என்று ரசிகர்கள் கவிதை பாடி வருகிறார்கள். சும்மாவே இவருக்கு துதிபாடும் ரசிகர்கள் இப்படிப் பார்த்தால் விட்டு வைப்பார்களா! !வரிந்துகட்டிக்கொண்டு கமெண்டுகளை கொட்ட ஆரம்பித்து விட்டார்கள். இனி இவர்களுடைய கமெண்டுகளை படிப்பதற்கே தர்ஷாவிற்கு நேரம் கிடைக்காது போல, அந்த அளவிற்கு கமெண்டுகள் மழை போல குவிகிறது.

அடடா அழகு அள்ளுதே

அடடா அழகு அள்ளுதே

தர்ஷா குப்தா ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியலில் பாவாடை தாவணியில் தான் முதன்முதலில் அறிமுகம் ஆகியிருந்தார். அந்த சீரியலில் கிராமத்து அழகு தேவதையாக வலம் வந்த இவர், அதற்கு பிறகு நடித்த சீரியல்களில் எல்லாமே நெகட்டிவ் கேரக்டரில் நடித்துக்கொண்டிருந்தார் இவர் என்னதான் வில்லத்தனம் செய்து கொண்டிருந்தாலும் இவரை ரசிக்கும் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டுதான் இருந்தது. காரணம் இவர் சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் செம ஆக்டிவாக இருந்து கொண்டிருந்தார். தன்னுடைய ரசிகர்களை கவர்ந்து இழுப்பதற்காக அடிக்கடி விதவிதமாக போட்டோசூட்களையும் நடத்திக்கொண்டு இன்ஸ்டாகிராமில் புதுசு புதுசாக போஸ்ட் போட்டுக்கொண்டிருந்தார். இவருடைய போஸ்டுக்கு வரும் கமெண்ட் களுக்கு பதில் அளிப்பது இவருடைய ஸ்பெஷல் கேரக்டராக இருந்தது. இதனாலேயே பலருக்கும் இவரை பிடித்து விட்டது. ஆனால் தற்போது இவர் பிசியாக மாறிவிட்டதால் முன்ன மாதிரி இப்போது பதில் அளிக்கவில்லை என்பது பலருடைய வருத்தமாகவும் இருக்கிறது.

அதைப் பாக்கல இதைத்தான் பார்க்கிறோம்

அதைப் பாக்கல இதைத்தான் பார்க்கிறோம்

என்ன வருத்தம் இருந்தாலும் இவர் தினமும் போஸ்ட் போட வேண்டுமென்று தான் இவருடைய ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். ரசிகர்களின் ஆசையை நிறைவேற்ற துடித்துக்கொண்டிருக்கும் தர்ஷாவும் தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பல போட்டோசூட்களையும், வீடியோக்களையும் எடுத்து வைத்து விடுகிறார். அதை தினமும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது இவருடைய
பெரிய கடமையாக இருந்து வருகிறது. இவர் கடமை தவறாமல் இருப்பதைப் பார்த்ததும் இவருடைய ரசிகர்களும் நாங்களும் அப்படித்தான் என்று இவர் போஸ்ட்க்கு பார்த்துப் பார்த்து கமெண்ட்களை கொட்டுகின்றனர். அதுவும் பல ரசிகர்கள் கவிஞர்களாக மாறி கவிதைகளையும் பொழிகிறார்கள். அதில் பாதி சுட்ட, கவிதையாகவும் பாதி சுடாத கவிதையாகவும் இருக்கிறது. என்ன மாதிரி இருந்தாலும் சரி ரசிகர்களின் பீலிங் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் வருகிறது.

ரசிகர்களை மறக்கலையே

ரசிகர்களை மறக்கலையே

தற்போது இவர் சீரியலை விட்டு சினிமாக்களுக்கு சென்றுவிட்டார். சினிமாக்களில் கதாநாயகியாக இவர் அறிமுகமாகி இருந்தாலும் தன்னுடைய ரசிகர்களை எப்போதுமே மறந்துவிடவில்லை, என்பதை அடிக்கடி நிரூபித்து வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் பாலோவர்ஸ் வந்ததும் அதனை சிறப்பாக கொண்டாட நினைத்து தன்னுடைய ரசிகர்களை வர வைத்து அவர்களுடன் செமையாக கொண்டாடிவிட்டார். இதுவே ரசிகர்களுக்கு பெரிய மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால் மீண்டும் அடுத்த மீட்டிங் எப்போது போடலாம் என்று ரசிகர்கள் இவரிடம் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருக்கின்றனர். தன்னுடைய சொந்த உறவினர்களை விடவும் ரசிகர்கள்தான் முக்கியம் என்று கூறியிருக்கிறார். ரசிகர்கள்தான் என்னுடைய ஒவ்வொரு கடினமான சூழ்நிலையிலும் பக்கபலமாக இருந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

இப்படி சிரித்தால் எப்படி

இப்படி சிரித்தால் எப்படி

தற்போது ரொம்ப நாளைக்கு பிறகு தர்ஷா குப்தா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு ரீல்ஸ் வீடியோவைப் பதிவிட்டிருக்கிறார். அதில் பாவாடை தாவணியில் இவரை பார்த்ததும் சொக்கிப் போன ரசிகர்கள் கமெண்டுகளை கொட்டுகின்றனர். அதில் இவர் பூ விற்பதை பார்த்ததும் 'ஒரு பூவே பூ விற்குது' என்று ஆச்சரியப்பட்டு இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் ஒரு கவிஞர் இவருக்கு, புயலை விட வேகமாக தாக்குகின்றது உன் பார்வை..கொஞ்சம் தாழ்த்திக் கொள், நான் நிலையாக நிற்க..யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே, ஆனால் உனக்காக தன்னையே மாற்றிக் கொள்பவர் கிடைத்தால் அவர்களை தொலைத்து விடாதே.. என்று ஹார்ட்டின் களை பறக்க விட்டிருக்கிறார். இப்படியே பல ரசிகர்கள் ஹாட்டின்களை பறக்கவிட்டு கொண்டிருந்தாலும் இவருடைய சிரிப்புக்கு முன்னாடி எல்லாம் தூள் தூளாக சிதறி விடுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+