மன்சூர் அலிகான் உடன் பிக் பாஸ் குழு பேச்சுவார்த்தை! அவர் சொன்ன ஒரே கண்டிஷன்..இனி தான் ஆட்டம் ஆரம்பம்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை குறித்து மன்சூர் அலிகான் பேசிய வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிக் பாஸ் குழுவிற்கு மன்சூர் அலிகான் ஒரே ஒரு கண்டிஷனை தான் கூறி இருக்கிறாராம். அதனால் இனி பிக் பாஸ் எடுக்கும் முடிவுதான் இறுதியானது என்று கூறியிருக்கிறார்.
இந்த வாரத்தில் பிக் பாஸ் முடிவு எடுத்ததும் தெரியும் இனி யார் யார் என்ன பாடுபட போகிறார்கள் என்று ரசிகர்கள் இப்போதே கருத்து கூறி வருகிறார்கள்.

வேற மாதிரியான சீசன்
பிக் பாஸ் ஆறாவது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசன் ஆரம்பமான முதல் நாளிலிருந்து சண்டை சச்சரவுகள் கணக்கில்லாமல் எப்போது வேண்டுமென்றாலும் வெடித்துக் கொண்டிருக்கிறது.டாஸ்க்கில் மட்டுமல்லாமல் சும்மா இருக்கும்போது கூட போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் குறை கூறுவதிலும் ,பிரச்சனை செய்வதிலும் இந்த சீசன் இதற்கு முந்தைய சீசன்களை விட வேற மாதிரி என்று சொல்லும் விதமாக இருந்து வருகிறது .முதல் நாளில் விறுவிறுப்பாக தொடங்கிய பிக் பாஸ் ஜிபி முத்துவின் அல்டிமேட் காமெடியால் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து இழுத்தது. ஆனால் ஜிபி முத்து 15 நாட்களுக்குள்ளாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி அவருடைய ரசிகர்களுக்கு பெருத்த வருத்தமாக தான் இருந்து வருகிறது.

எதிர்பாராத ஜி பி முத்து வெளியேற்றம்
20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீடியோக்களை அனுப்பி விருப்பம் தெரிவித்து இருந்த நிலையில் அதில் 21 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் தேர்ந்தெடுத்து இருந்தது. அதில் முக்கியமாக பலரும் கருதப்பட்ட போட்டியாளராக ஜிபி முத்து இருந்தார். இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பலரும் பார்த்து வந்ததாகவும் கருத்து தெரிவித்து வந்தனர். இதற்கு முந்தைய சீசன்களை பார்க்காத ரசிகர்கள் கூட இந்த சீசனில் தாங்கள் பார்த்து வருவதாக கூறி வந்தனர். ஜி பி முத்து வெளியேறியதும் அவருக்கு பதிலாக அவரைப் போலவே பேன்ஸ் இருக்கும் போட்டியளர்கள் யாரையாவது உள்ளே இறக்க வேண்டும் என்று பிக் பாஸ் நிகழ்ச்சி செய்துகொண்டிருக்கிறதாம்.

பிக் பாஸில் பேச்சு வார்த்தை
ஜி பி முத்து வெளியேறியதற்கு முன்பு இந்த சீசனில் அவரோடு மன்சூர் அலிகான் கலந்து கொள்வார் என்று பேச்சு அதிகமாக அடிபட்டது .ஆனால் அதை குறித்து தன்னிடம் இதுவரை யாருமே பேசவில்லையே என்று இதற்கு முன்பு ஒரு வீடியோவில் மன்சூர் அலிகான் பேசி இருந்தார். ஆனால் தற்போது ஜிபி முத்து வெளியேறிய பிறகு இவர் வீட்டிற்குள் வந்தால் விளையாட்டு கலை கட்டும் என்று பலரும் கருத்து தெரிவித்ததன் காரணமாக மன்சூர் அலிகான் இடம் பிக் பாஸ் அணியிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்களாம். அதற்கு அவர் தனக்கு விரும்பும் சம்பளத்தை தந்தால் தான் தாராளமாக கலந்து கொள்வதாக கூறி இருக்கிறாராம்.

மன்சூர் அலிகான் கூறிய பதில்
மன்சூர் அலிகான் பேசிய வீடியோவில் என்னை பிக் பாஸில் கலந்து கொள்வதற்காக கூப்பிட்டாங்க, நான் ஒரு நாள் சம்பளம் கேட்டேன். அங்கு என்னவோ ஆம்பள வேஷம் போட சொல்லுவாங்களாம், பொம்பள வேஷம் போட சொல்லுவாங்களாம், பாட்டு பாடணுமாம், இதெல்லாம் தான் நாம் பண்ணி விடுவோமே. சினிமாவில் பண்றதை அங்க போய் பண்றோம். அதற்கு நான் ஒரு பணம் கேட்டேன் அதோடு அவர்கள் பேச்சை நிப்பாட்டி விட்டார்கள் .நான் கேட்கும் பெரிய சம்பளத்தை கொடுத்தால் அங்கு போய் நடிக்க போகிறேன். அவ்வளவு தான் அப்போது உள்ளே இருக்கும் அனைவரும் நடிக்கிறார்களா? என்று கேள்வி கேட்டபோது, ஒரு ரூமுக்குள் 10 பேரை விட்டால் என்ன செய்வார்கள்? என்று கேள்வியை கேட்டு இருக்கிறார் அதைத்தொடர்ந்து, அப்போது அதை தானே நானும் செய்யப் போகிறேன். பிக் பாஸ் பற்றி குறை சொல்பவர்கள் எதற்காக நிகழ்ச்சியை பார்க்கிறீர்கள்? டிவியை மாற்றிவிட்டு வேறு சேனலை பார்க்க வேண்டியதுதானே? அவன் பிக்பாஸ் நடத்துறான். அவன் சம்பாதிக்கிறான். அவன் என்னமோ செய்கிறான். நீங்கள் அதை ஏன் பார்க்கிறீர்கள்? வேறு சேனலை பாருங்கள் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியை குறை கூறுபவர்களுக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. இதனால் இவர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications