இதற்குத்தானே ஆசைப்பட்டேன்.. பல வருட கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் ஷபானா.. வாழ்த்தும் ரசிகர்கள்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் கதாநாயகி ஷபானா தற்போது விஜயை சந்தித்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
ஆரம்பத்தில் இருந்தே தான் விஜயின் தீவிரமான ரசிகை என்று கூறிக் கொண்டிருக்கும் ஷபானாவிற்கு பல நாள் கனவு நிறைவேறிவிட்டது என்று மகிழ்ச்சியோடு கூறி இருக்கிறார்.
ஒரு திரைப்படத்திலாவது விஜய் உடன் தான் நடித்து விட வேண்டும் என்று ஆசையோடு எதிர்பார்த்த ஷபானா வெளியிட்ட புகைப்படத்திற்கு பல்வேறு கேள்விகள் குவிந்து வருகிறது.

செம்பருத்தி பார்வதி
கேரளாவை சார்ந்த ஷபானா முதல் முறையாக தமிழில் செம்பருத்தி சீரியலில் அறிமுகமானார். இந்த சீரியலில் பார்வதி கேரக்டரில் இளைஞர்களையும் வீட்டு பெண்களின் மனதையும் அதிகமாகவே கவர்ந்து விட்டார். சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைதளத்திலும் இவர் ஆக்டிவாகவே இருந்து வருகிறார். செம்பருத்தி சீரியலில் பார்வதி மற்றும் ஆரம்பத்தில் இருந்த ஆதியின் காதல் கெமிஸ்ட்ரி அதிகமாக இளைஞர்களை கவர்ந்திருந்தது. கதாநாயகனை பெரிய ஐயா என்று அழைத்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு விட்டார். இவருடைய யதார்த்தமான நடிப்பு மற்றும் அமைதியான கேரக்டரை சீரியலில் பார்த்து போன ரசிகர்கள் இவருடைய நிஜ கேரக்டரை சமூக வலைத்தளத்தில் பார்த்து கொஞ்சம் மிரண்டு தான் போயிருந்தனர்.

திடீர் திருமணம்
சமூக வலைத்தளத்தில் தன்னுடைய பெண் தோழிகளோடு அதிகமாக சேட்டை செய்து கொண்டு இருக்கும் ஷபானா சின்னத்திரை நடிகரை திடீரென திருமணம் செய்து கொண்டார். விஜய் டிவி ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியலின் கதாநாயகனாக இருந்த ஆரியனை இவர் காதலிக்கும் விஷயம் சமூக வலைத்தளத்தில் வெளியானதும் தமிழ் இளைஞர்களின் மனதில் அதிகமான ரணத்தை ஏற்படுத்தி விட்டது. ஆரம்பத்தில் இருந்தே இவருக்கு திரைப்பட கதாநாயகிகளுக்கு இருக்கும் அளவிற்கு இளைஞர் ரசிகர்கள் இருந்த நிலையில் இவருடைய ரசிகர்கள் இவருடைய திருமணத்தன்று ரொம்பவே ஃபீல் பண்ணினார்கள். காரணம் திருமணத்தன்று தான் இவர் இன்று எனக்கு திருமணம் என்பதை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருந்தார்.

இசை வெளியீட்டு விழாவில் போட்டோ
இந்த நிலையில் எப்போதுமே பேட்டிகளில் ஷபானா தனக்கு பிடித்த நடிகர் என்றால் அது விஜய் தான் அவரோடு தங்கச்சி ரோல் கிடைத்தாலும் பரவாயில்லை நான் நடிப்பதற்காக ரொம்பவே ஆசைப்படுகிறேன் என்று கூறிக் கொண்டிருப்பார். விஜய்யோடு சேர்ந்து புகைப்படம் ஆவது எடுக்க வேண்டும் என்று இருப்பதாக கூறி இருந்தார். இந்த நிலையில் தற்போது அவருடைய ஆசை நிறைவேறி இருக்கிறது. பல நாட்களாக ஏங்கி இருந்த ஷபானாவிற்கு விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு விஜயோடு சேர்ந்து புகைப்படத்தை எடுத்து தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார்.

நெகிழ்ச்சியான பதிவு
தான் வெளியிட்ட பதிவிற்கு கடைசியில் இறுதியாக கனவுகள் நினைவாகும். அண்ணனை பார்த்துவிட்டு நேற்று நான் அடைந்த மகிழ்ச்சியையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதனால் நான் அதை என்றென்றும் என்னோடு வைத்திருக்கிறேன். ஆனா ஒன்னு சொல்றேன் அவர பார்த்ததுக்கு அப்புறம் அவர் மேல இருக்கிற அன்பு மறுபடியும் 100 மடங்கு அதிகமாகத்தான் ஆகி இருக்கு. அவ்வளவுதான் சொல்லுவேன். லவ் யூ அண்ணா என்று நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாக பதிவு வெளியிட்டிருக்கிறார். இதுக்கு சின்னத்திரை நடிகையான சமீரா, சைத்ரா ரெட்டி, தியா மேனன், ஜனனி அசோக்குமார், நட்சத்திரா என பல நடிகைகளும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications