"பிக் பாஸ் வீட்டிற்குள் நீங்க பார்த்த மாதிரி நான் இல்லை”ரொம்ப கஷ்டமாக இருக்கு..விளக்கம் கொடுத்த அசல்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அசல் கோலார் முதல் முறையாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவரைக் குறித்து வெளியான மீம்ஸ்களுக்கு அவர் கொடுத்த விளக்கம் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வெளியே வந்த பிறகு தான் தன்னுடைய தவறை உணர்ந்ததாகவும் இனி அதை திருத்திக் கொள்வதாகவும் அசல் கோலார் ரசிகர்களிடம் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

பெயரைக் கெடுத்துக் கொள்ளும் போட்டியாளர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்து விடுகிறது. எல்லா சீசன்களிலும் அறிமுகம் ஆவதற்கு முன்பு பல போட்டியாளர்கள் ஒரு நல்ல பெயரில் இருந்து வருகின்றனர். ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஒரு சிலர் இதுவரைக்கும் இருந்து கொண்ட பெயரையும், புகழையும் இழந்து விட்டு வெளியே வருகின்றனர் .அந்த வகையில் ஒரு போட்டியாளராக இந்த ஆறாவது சீசனில் களம் இறங்கி இருக்கும் அசல் கோலார் நடந்து கொண்டுள்ளார்.

வெளியே தான் தப்பு தெரிந்து இருக்கிறது
இந்த நிகழ்ச்சிக்கு அறிமுகம் ஆவதற்கு முன்பு கானா பாடகராக பலருக்கும் பரிச்சயமான அசல் கோலார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பெண் போட்டியாளர்களிடம் சகஜமாக பழகுகிறேன் என்கிற பெயரில் தொட்டு, தடவி வந்ததை பார்த்தால் நெட்டிசன்கள் இவரை வைத்து மீம்ஸ்களில் அதிகமாக சமூக வலைத்தளத்தில் கலாய்த்து வந்தனர். இதன் காரணமாக இவருக்கு கடந்த வாரம் ஓட்டு குறைவாக அளிக்கப்பட்டு இவர் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு தான் இவர் செய்த தவறு இவருக்கு தெரிந்திருக்கிறதாம். அதைக் குறித்து தற்போது ரசிகர்களிடம் விளக்கம் கொடுத்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

தப்பா நடந்துக்கலை
அதில் மக்கள் என்னோட விஷயத்தில் பார்த்தது என்னது என்றால் நான் எல்லா கிட்டயும் தவறாக நடந்த மாதிரி தான் நினைச்சுகிட்டு இருக்காங்க. நான் சொந்தக்காரர் வீட்டுக்கு போனா சக பெண்களிடம் எப்படி நடந்துக்கிடுவேனோ அந்த மாதிரி தான் அங்கேயும் இருந்தேன். நான் மீம்ஸ்களில் வந்த மாதிரி பையன் இல்லை. நான் அந்த மாதிரி மைண்ட் செட்டில் பொண்ணுங்க கிட்ட அப்படி நடந்துக்கல. அப்படி ஏதாவது நடந்துகிட்டா அந்த பெண்கள் என்னை பற்றி கம்ப்ளைன்ட் கூறி இருப்பார்கள். அவர்களுக்கு பார்வையை பார்த்தாலே தெரியும். நான் தவறாக பார்த்திருந்தால் அவர்கள் கண்டிப்பாக என்னைப் பற்றி குறை கூறியிருப்பார்கள். யாருமே என்னை பற்றி எதுவும் சொல்லவே இல்லையே.

இனி இப்படி நடந்துக்க மாட்டேன்
பொண்ணுங்க கிட்ட அந்த மாதிரி மைண்ட் செட்டில் நான் பழகல. சின்ன வயதிலிருந்தே நான் எல்லோரிடமும் எப்படி பழகுவேனோ அப்படித்தான் அந்த வீட்டுக்குள் இருந்தேன். இந்த கேரக்டர் சிறுவயதிலிருந்தே எனக்குள்ளே இருந்து வருகிறது. அது இதுவரைக்கும் எனக்கு தவறாக தெரியவில்லை .வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இது தவறாக தெரிகிறது .மற்றபடி நான் தவறானவன் இல்லை .இது மாற்ற வேண்டிய விஷயம்தான் .கண்டிப்பாக மாற்றிக் கொள்கிறேன். ரொம்ப கஷ்டமாக இருக்கு நான் இனி பொண்ணு கிட்ட இனிமேல் இப்படி நடந்து கொள்ள மாட்டேன் என்று அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications