வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பாலா...இந்த செயலை எதிர்பார்க்கவில்லையே! பாராட்டும் ரசிகர்கள்
சென்னை: கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த பாலா தற்போது நடைபெற்ற நடிகை ரித்திகாவின் ரிசப்ஷனில் கலந்து கொண்டிருக்கும் வீடியோவை ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார்.
ரத்திகாவின் திருமணத்தில் பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளாத நிலையில் ரிஷப்ஷனில் சின்னத்திரை பிரபலங்கள் அதிகமானோர் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் ஒருவராக பாலாவும் கலந்து கொண்டு மனமேடையில் இருக்கும் ரித்திகாவுக்கும், வினோத்துக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

ரித்திகாவின் எளிமையான திருமணம்
விஜய் டிவி பிரபலமான ரித்திகாவிற்கு விஜய் டிவியை சேர்ந்த வினோத் என்பவரோடு கடந்த வாரம் 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கேரளாவில் உள்ள கோவிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. அதில் குடும்ப உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.அதைத் தொடர்ந்து அவருடைய ரிசப்ஷன் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்றிருக்கிறது. அதற்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு ஆசிர்வாதங்களை தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் ரித்திகாவின் திருமண செய்தி வெளியானதும் ரசிகர்கள் பலர் பாலாவின் நிலை என்ன என்று கேள்விகளை எழுப்பி வந்தனர்.

வதந்திகள்
ரித்திகா விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் மூலமாக சின்னதிறையில் அறிமுகமானார். அதற்கு பிறகு விஜய் டிவியை சேர்ந்த பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டிருந்தார். அப்படி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கும்போது அவரோடு தொகுப்பாளராக இருக்கும் கலக்கப்போவது யாரு பாலா ரித்திகாவை அதிகமாக கலாய்த்து வருவார். குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்த ரித்திகாவை அந்த நிகழ்ச்சியின் சுவாரசியத்துக்காகவே அதிகமாக ரித்திகாவின் பின்னாடி அவர் சுற்றுவது போல அதிகமாக கலாய்த்து வந்தார். இதனாலே இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக பேசப்பட்டு வந்தது.

கசிந்த ரகசியம்
தங்களுக்குள் காதல் என்ற ஒன்று இல்லை என்றும் அப்படி இருந்தால் நாங்களே சொல்லி விடுவோம் என்றும் நாங்கள் நட்பாக தான் இருக்கிறோம் அதுவும் நிகழ்ச்சியில் இருக்கும் போது நிகழ்ச்சியின் சுவாரசியத்திற்காக கலகலப்பாக கொண்டு போய் கொண்டு இருந்தோம். எங்களுக்குள் அப்படி எதுவும் இல்லை என்று சற்று கோபமாகவே ரித்திகா ரசிகர்களிடம் விளக்கம் கொடுத்திருந்தார். அதற்கு பிறகும் அவர்கள் இருவரும் வழக்கமாக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் ஜாலியாக பேசிக் கொண்டுதான் இருந்தனர். ரசிகர்களும் ஒரு பக்கம் அதே பாணியில் எப்போதும் போல இவர்களை கலாய்த்த வண்ணம் ஆகவே இருந்தனர்.இந்த நிலையில் தான் ஒரு சில வாரங்களுக்கு முன்பு ரித்திகா விஜய் டிவி பிரபலம் ஒருவரை திருமணம் செய்ய போகிறார் என்ற செய்தி வெளியானது.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
பாலாவின் தீவிரமான ரசிகர்கள் அப்போ பாலாவின் நிலைமை என்ன என்று கேள்விகளை எழுப்பி வந்தனர். இதைக் குறித்து பாலாவும் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. தற்போது ரித்திகாவுக்கு திருமணம் எளிமையாக முடிவடைந்து இருக்கிறது. சென்னையில் நடைபெற்ற ரிஷப்ஷனுக்கு பாலாவும் கலந்து கொண்டிருக்கிறார். அவர் அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதற்கு அதிகமான ரசிகர்கள் நீங்கள் வேற லெவல் தலைவா! மனதிற்குள் சோகத்தை வைத்துக்கொண்டு இப்படி சிரிக்கிறீர்கள் என்றெல்லாம் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதை பார்த்து சிரிப்பாகத்தான் வருகிறது என்று அவர்களுடைய நெருங்கிய நண்பர்களான குக் வித் கோமாளி பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மேடையில் பாலா செய்த சேட்டை
ஒரு வழியாக வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத்தான் பாலா இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியிருக்கிறார். மணமேடையில் ரித்திகாவிற்கு பூங்கொத்துகளை கொடுத்து மணமக்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து போட்டோ எடுத்ததும் நான் கிளம்புகிறேன் என பாலா சொன்ன போது ரித்திகா சாப்பிட்டு விட்டு தான் செல்ல வேண்டும் என்று சொல்ல அங்கே புகழ் வந்து பாலாவை கலாய்த்து அவரும் சேர்ந்து போட்டோ எடுத்தபடி அந்த இடத்தை விட்டு கிளம்புகின்றனர். ஸ்டேஜ் விட்டு கீழே வந்து ரித்திகாவிற்கு டாட்டா காட்டிவிட்டு ஜாலியாக அந்த மண்டபத்தை விட்டு பாலா கிளம்புகிறார் .ஆனால் அதையும் விட்டு வைக்காமல் எப்படி கலாய்க்கிறார்களே என்று பலர் கருத்து கூறி வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
சஞ்சய் 4 வருஷமாக படும்பாடு.. விஜய் நிஜ ஹீரோ இல்ல, தந்தையாக தோற்று விட்டார்! பிரபலம் ஆதங்கம் -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
விஜய் சினிமாவை விட்டு விலக உண்மையான காரணம் இதுதான்! நேரடியாகவே சொன்னாரு! நடிகர் ஷியாம் ஓபன் -
விஜய் பற்றி என்னால் தப்பா பேச முடியாது.. ஏனென்றால்? ஓபனாக பேசிய சுந்தர் சி.. பாராட்டும் தவெக ரசிகர்கள் -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
Bhavani: சோசியல் மீடியாவை கலக்கும் இந்த நடிகை யார் தெரியுதா? அல்லு அர்ஜுனின் “சொந்தம்” -
Happy Raj OTT: ஓடிடிக்கு வரும் ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ்... எந்த தளத்தில், எப்போ பார்க்கலாம்? லீக்கான தகவல் -
அறந்தாங்கி நிஷா ஓபனாக சொன்ன ஒரு வார்த்தை.. அறிவே இல்லையா இப்படியா பேசுறது? மேடையிலேயே திட்டிய நடிகர் -
நடிகர் பிரகாஷ் ராஜின் அம்மா திடீர் இறப்பு.. இவ்வளவு பெரிய சோகங்களை கடந்து வந்தவரா அவர்! நெகிழ வைத்த கதை












Click it and Unblock the Notifications