"என் தலையில்” உருக்கமாக பதிவிட்ட மகாலட்சுமி..ரவீந்தரின் எதிர்பாராத கேப்ஷன்..இதற்குள் இத்தனை நாட்களா?
சென்னை: திருமணம் முடிந்து 100 நாட்கள் முடிந்து விட்டது என்று ரவீந்தர் உருக்கமாக பதிவிட அவருடைய பதிவுக்கு விஜே மகாலட்சுமி வெளியிட்ட கருத்துதான் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பலரால் மீண்டும் கலாய்க்கப்பட்டு வருகிறது.
இரண்டாவது திருமணம் செய்த விஜே மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் ஜோடி ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஜோடியாக இருக்கும் நிலையில், மீண்டும் சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு கொண்டாட்டத்தை தொடங்கி இருக்கின்றனர்.

நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரம்
விஜே மகாலட்சுமி தற்போது தொகுப்பாளராக இல்லாமல் சீரியல்களில் நடித்து வருகிறார். அதுவும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் மகாலட்சுமி வில்லி கேரக்டரில் அனைவரையும் மிரட்டிக் கொண்டிருக்கிறார். இந்த சீரியலில் இவரை பார்த்த குடும்ப பெண்கள் பலர் இவரை கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர். அதுவெல்லாம் தன்னுடைய நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்று இவர் அதை சந்தோஷமாக வாங்கிக் கொள்கிறார். இந்த நிலையில் தான் சமூக வலைத்தளத்தில் இவர் ட்ரெண்டிங்காக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மிரட்டிய திருமணம்
ஏற்கனவே திருமணம் முடிந்து விவாகரத்து ஆன மகாலட்சுமி தற்போது எளிமையாக தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒன்றரை வருடங்களாக இவர்களுடைய காதல் வாழ்க்கை வெளி உலகத்திற்கே தெரியாமல் மறைந்து வந்த நிலையில் தற்போது இவர்களுடைய திருமணம் சமூக வலைத்தளத்தில் புரட்டி போடும் அளவிற்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எந்த பக்கம் திரும்பினாலும் இவர்களுடைய புகைப்படம் தான் அங்கே ஆக்கிரமித்து பலரையும் மிரட்டி கொண்டிருந்தது.

மகிழ்ச்சியான கொண்டாட்டம்
இந்த நிலையில் தற்போது தங்களுடைய திருமண முடிந்து 100 நாட்கள் ஆகிவிட்ட மகிழ்ச்சியை ரெஸ்டாரன்ட் சென்று கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர். அந்த புகைப்படத்தை வெளியிட்டு ரவீந்தர் நூறு நாட்கள் முடிந்தது, ஆம்! அம்மு, இந்த 100 நாள் பதிவுக்கு நல்லதொரு தலைப்பை எழுத முயற்சி செய்தேன். என்னால் நாடகமாக எழுத முடியவில்லை. எனக்கு தோன்றியதை எழுதுவேன். அம்மு 37 வருடங்களுக்குப் பிறகு ஒவ்வொரு நொடியும் 100 நாட்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தேன். அதே அல்லது அதிக அன்பு, அக்கறை, வேடிக்கை, சண்டை ஆகியவற்றுடன் என்னை நகர்த்திக் கொண்டே இருங்கள். வளர்கிறேன். அம்மோ சந்தோஷமாக உன்னால் என்று கேப்ஷன் எழுதி இருக்கிறார்.

மகாலட்சுமியின் பதில் கருத்து
ரவீந்தர் வெளியிட்ட புகைப்படத்திற்கும் கேப்ஷனுக்கும் மகாலட்சுமி, வாழ்வோம் அம்மு சந்தோஷமாக, என் தலையில் உள்ள எண்ணங்கள் அனைத்தும், என் இதயத்தில் உள்ள அன்பு எல்லாம் நீயே! லவ் யூ மை புருஷா.... என்று கருத்து வெளியிட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் நீங்கள் தலைப்பை வியத்தகு முறையில் எழுதாமல், இதய பூர்வமாக எழுதி இருக்கிறீர்கள் என்றும் இவர்களுடைய வாழ்க்கை மேலும் சிறப்பாக பலர் வாழ்த்து கூறி வருகிறார்கள். இன்னும் சில நெட்டிசன்கள் எப்போதும் போல இவர்களுடைய போட்டோவை மீண்டும் ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். மார்டன் உடையில் இருக்கும் மகாலட்சுமியை இந்த புகைப்படத்திலும் விட்டு வைக்காமல் கலாய்த்து வருகிறார்கள்.இன்னும் ஒரு சில ரசிகர்கள் திருமணத்திற்கு பிறகு மகாலட்சுமியின் மகன் புகைப்படத்தை எங்கேயும் காணவில்லையே? என்று கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
-
சிறகடிக்க ஆசை: ஆந்திரா வரை சென்று ரேகாவை மீட்ட முத்து! உயிரை பணயம் வைத்த மீனா... அதிரடி திருப்பம் -
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
வாழ்க்கையை கெடுத்த "வதந்தி”.. இப்போ கஷ்டப்படுறேன்.. கண்ணீருடன் உதவி கேட்ட பாவா லட்சுமணன்! -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
சிறகடிக்க ஆசை: மனோஜ் சொன்னதை கேட்டு கோபப்பட்ட விஜயா.. உயிரை பணயம் வைக்கும் முத்து! கதையே மாறிப்போச்சு -
"பாரதிராஜாவை போலவே... கடைசி நாட்களில் அமைதியாக வலியை சுமந்த மணிவண்ணன்!" சோக கதை -
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications