பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவை பாராட்டிய வெள்ளித்திரை நடிகை.. காரணம் இதுதானாம்! குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா கேரக்டரில் நடிக்கும் ஹேமா ராஜேஷை நடிகை ராதா பாராட்டி இருக்கிறாராம். விரைவில் இவர்கள் சந்திக்க இருப்பதாக மகிழ்ச்சியோடு ரசிகர்களிடம் ஹேமா பகிர்ந்து இருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர் சீரியல் விறுவிறுப்புக்கு காரணம் மீனா தான் என்று இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கும் வகையில் தற்போது இவர் செய்த செயலை வெள்ளித்திரை நடிகை பாராட்டியது குறித்து ரசிகர்களும் பாராட்டை தெரிவித்து வருகிறார்கள்.

ஆஃபீஸ் சீரியலில் அறிமுகம்
விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து வரும் ஹேமா முதல் முதலில் சின்ன திரையில் அறிமுகமானது ஆஃபீஸ் என்ற சீரியல் மூலமாகத்தான். இந்த சீரியலுக்குப் பிறகு பொன்னூஞ்சல், தென்றல், சின்னத்தம்பி, குலதெய்வம் மற்றும் மெல்ல திறந்தது கதவு என பல சீரியல்களில் நடித்திருக்கிறார். சீரியலில் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக ஆறாவது சினம், சவரக்கத்தி, வீரையன் மற்றும் இவன் யார் என்று தெரிகிறதா என படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் அந்த திரைப்படங்களில் இவர் எதிர்பார்த்த அளவிற்கு இவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.

ரசிகர்களை கவர்ந்த மீனா
திரைப்படங்களுக்கு வருவதற்கு முன்பு ஹேமா காவல் நிலையத்தில் ஹார்டுவேர் இன்ஜினியராகத்தான் கம்ப்யூட்டர் வொர்க் பார்த்து வந்தாராம். ஆனால் நடிப்பின் மீது இருந்த ஆசையால் மாடலிங் மூலமாக இவர் சீரியலில் அறிமுகமாக இருக்கிறார். ஆனால் இவர் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களின் மத்தியில் இவருக்கு பெரிய அளவில் பெயரையும் புகழையும் வாங்கிக் கொடுத்தது பாண்டியன் ஸ்டோர் சீரியல்தான். இந்த சீரியலில் மீனா கேரக்டரில் அனைத்து தரப்பட்ட ரசிகர்களையும் கவர்ந்து இருக்கிறார். இவருடைய பிடிவாதமும், குழந்தைத்தனமான கோபமும் ரசிகர்களை அதிகமாக கவர்கிறது. அதனாலேயே இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்
ஆரம்பத்தில் மீனா கேரக்டரை நெகட்டிவாக இந்த சீரியலில் காட்டி இருந்தனர். ஆனால் நாட்கள் போகப்போக இந்த சீரியலில் ரசிகர்கள் விரும்பும் கேரக்டராக மாறிவிட்டார். ஹேமா சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி போட்டோ சூட் நடத்தி எப்போதுமே தன்னுடைய ரசிகர்கள் தன்னை மறந்து விடாதபடி செய்து கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் இவர் Hema's diary என்ற பெயரில் சொந்தமாக யூடியூப் சேனலும் வைத்திருக்கிறார். அதில் பல வீடியோக்களை பகிர்ந்து வருவார்.குறிப்பாக மேக்கப், ஷூட்டிங் என பல கண்டன்ட் அதிலே இருக்கும்.அந்த வகையில் இன்று வெளியிட்ட வீடியோவில் பாண்டியன் ஸ்டோர் லொகேஷன் இருக்கும் இடத்தை சுற்றி காட்டிக் கொண்டிருக்கிறார்.

நடிகை ராதா பாராட்ட காரணம்
பாண்டியன் ஸ்டோர் சீரியல் தற்போது ஷூட்டிங் நடைபெறும் வீட்டில் அருகில் பல சீரியல்களின் அங்கே ஷூட்டிங் நடைபெறுவதை குறித்தும் ஒவ்வொரு வீட்டிற்கும் இதற்கு முன்பு எந்தெந்த திரைப்படங்களிலும், சீரியல்களிலும் இடம்பெற்றது என்பதை குறித்தும் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, "நாம் இப்போ லொகேஷன் வந்தாச்சு. ஏ.ஆர்.எஸ் ஒரு சூட்டிங் ஸ்பாட்டுங்கறதுனால, இங்க நிறைய சூட்டிங் நடக்கும். இதுக்கு முன்னாடி நம்ம போட்ட ஏ.ஆர்.எஸ் வீடியோ பாத்துட்டு அதோட ஓனர் இங்க மேனேஜர் கிட்ட சொல்லி இருக்காங்க, அந்த ஓனர் வேற யாரும் இல்லை நடிகை ராதா தான். நான் அவர்களை நேரில் பார்த்தது இல்லை. ஆனால் அவங்க நம்ம சேனல்ல பாத்துட்டு ரொம்ப நல்லா இருக்கு என இங்க இருக்கிற மேனேஜர் கிட்ட சொல்லி இருக்காங்க, அது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. கூடிய சீக்கிரம் அவங்களை சந்திக்கணும் என்று அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். மகிழ்ச்சியோடு ராதா தன்னை பாராட்டியதை குறித்து இவர் பேசியிருப்பதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி பாராட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications