வெளியே வந்து மாறிப்போன மணிகண்டன்.. பண விஷயத்தில் விக்ரமன் பற்றி உளறிய உண்மை!? இதை கவனிச்சிகளா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த மணிகண்டன் அந்த நிகழ்ச்சியில் இருக்கும் விக்ரமன் பற்றி பல தகவல்களை கூறி இருக்கிறார்.
ஆரம்பத்தில் இருந்து விக்ரமனோடு கருத்து வேறுபாடு இருந்த நிலையில் தற்போது விக்கிரமனை பற்றி பெருமையாக மணிகண்டன் பேசி இருக்கிறார்.

ஆரம்பத்தில் இருந்தே பிரச்சனை தான்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு கடந்த வாரம் மணிகண்டன் வெளியேறியிருந்தார். இந்த நிகழ்ச்சியில் மணிகண்டன் இருக்கும் போது டாஸ்க் விஷயத்தில் தனித்துவத்தை காட்டி சிறப்பாக விளையாடி வந்த மணிகண்டன் அதிக முறை பிக் பாஸ் வீட்டிற்குள் தலைவர் பதவியில் இருந்திருக்கிறார். ஆனாலும் ஆரம்பத்தில் இருந்து மணிகண்டனுக்கு விக்ரமனோடு செட் ஆகவில்லை வெறும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி முட்டி மோதி கொண்டனர்.

பொம்மை டாக்கில் தொடங்கிய பிரச்சனை
ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு மணிகண்டனிடம் பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்களின் ஒவ்வொருவருடைய கேரக்டரை பற்றி இன்று லைவில் ரசிகர்கள் கேள்வி கேட்டு வந்தனர். அதில் விக்ரமனை பற்றிய கேள்விக்கு விக்ரமன் வெளியே இருந்து பார்ப்பது போலத்தான் உள்ளேயும் இருக்கிறார். அவர் எந்த இடத்திலும் நியாயமாக செயல்படுவதாக தான் எனக்கு தெரிகிறது. பிக் காஸ் வீட்டிற்குள் நான் இருக்கும்போது பொம்மை டாஸ்க்கில் விளையாடும் போது எனக்கு ஏற்பட்ட மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் கடைசி வரைக்கும் எனக்கு அது நீடித்து வந்தது. ஆனாலும் விக்ரமன் செய்யும் செயல்களை நான் அங்கே இருக்கும் போது கூட பலமுறை அவருக்கே தெரியாமல் பார்த்து இருக்கிறேன்.

பணத்தைப் பற்றிய கருத்து
விக்ரமன் வெளியே இருந்து பார்க்கும்போது எப்படி இருக்கிறாரோ அப்படியே தான் உள்ளேயும் இருக்கிறார். யாரிடமும் நடித்த மாதிரி எனக்கு தெரியவில்லை. எந்த விஷயத்திலும் நிதானமாக சரியான முடிவை எடுக்கிறார். அதுமட்டுமல்லாமல் டைட்டில் ஜெயித்தால் எப்படியும் 50 லட்சம் கிட்ட கிடைக்கும் அதை வீடு கட்ட வைத்துக் கொள்ளுங்கள் என்று கூட நான் ஒரு முறை பேசிக் கொண்டிருக்கும்போது சொன்னேன் ஆனால் அதற்கு விக்ரமன். இல்லை என்னுடைய பல நாள் கனவு இருக்கிறது அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று என்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காகத்தான் அதை பயன்படுத்திக் கொள்வேன் என்று என்னிடம் ஆரம்பத்திலேயே கூறி இருந்தார் என்றும் கூறியிருக்கிறார்.

உண்மையை உளறிட்டாரே
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வெளியே இருக்கும் ரசிகர்களும் விக்கிரமம்தான் டைட்டில் ஜெயிப்பார் என்று ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகின்றனர். ஆனால் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கும் இது தெரிந்திருக்கிறது. அதனால் தான் விக்ரமனிடம், மணிகண்டன் உங்களுக்கு டைட்டில் ஜெயித்தால் கிடைக்கும் பணத்தை வீடு கட்டுங்கள் என்று கூறியிருக்கிறார். இது தெரிந்ததால்தான் விக்ரமனின் மீது மணிகண்டனுக்கு ஆரம்பத்தில் கோபம் இருந்ததோ என்னவோ ஆனாலும் கடைசி நேரத்தில் மணிகண்டன் வெளியே செல்வதற்கு முன்பு அவர்களுடைய லக்கி செயினை விக்ரமணியிடம் கொடுத்துவிட்டு தான் சென்றார். அப்போது இருவருக்கும் இருந்த கருத்து வேறுபாடு விலகி அதுவரைக்கும் மணிகண்டன் மீது இருந்த கோபமும் குறைய தொடங்கிவிட்டது. இந்த நிலையில் தற்போது மணிகண்டன் பேசி இருக்கும் வார்த்தைகள் விக்ரமன் ரசிகர்களுக்கு மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications