குழந்தையாகவே மாறி குதூகலித்த கோபிநாத்..இந்த மகிழ்ச்சிக்கு காரணம் இதுதானாம்! இப்படி எதிர்பார்க்கலையே
சென்னை: விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியின் மூலமாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த கோபிநாத் இன்று குழந்தையாக மாறி குதூகலமிட்டு இருக்கிறார்.
வலைத்தளத்தில் கோபிநாத் கத்தி ஆர்ப்பாட்டம் செய்த வீடியோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து அவரா இவர் இப்படி மாறிவிட்டாரே என்று ஆச்சரியத்தோடு பார்த்து வருகின்றனர். இதுவரைக்கும் சமூக சிந்தனைகளை பற்றி பேசி வந்த கோபிநாத்தின் இந்த வித்தியாசமான வீடியோ பலரையும் கவர்ந்திருக்கிறது.

பிஎஸ்எல்வி சி54 ஏவுகணை
விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் தன்னுடைய சரியான தீர்ப்பின் மூலமாக ரசிகர்களின் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட கோபிநாத் பல நிகழ்ச்சிகளில் நடுவராக செயல்பட்டு வருகிறார். இவருடைய மோட்டிவேஷன் ஸ்பீச் கேட்பதற்காகவே பலர் இவரை பாலோ செய்து வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி54 ஏவுகணையை பார்த்து சந்தோஷத்தில் ஆர்ப்பரித்திருக்கிறார்.

வெற்றிகரமான ஏவுதல்
இந்தியா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ நிறுவனத்தின் பிஎஸ்எல்வி சி54/ ஈஓஎஸ்-06 விண்கலம் 9 செயற்கைக்கோளுடன் இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது. இந்த விண்கலத்தில் பூட்டானின் செயற்கைக்கோள் 8,நானோ இந்தியாவின் ஓசன் ஷாட் -3 என மொத்தம் ஒன்பது செயற்கைக்கோள்களை சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து இன்று ஏவப்பட்டு இருக்கிறது. இது போலார் சாட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிளின் எனப்படும் பி எஸ்எல்வி ஏவும் கருவியின் 56வது பயணமாக இருக்கிறது. மற்றும் 6 பிஎஸ்ஓம்-எக்ஸ்எல்கள் கொண்ட மேம்படுத்தப்பட்ட பிஎஸ்எல்வி பதிப்பின் 24 ஆவது விமானமாக இது அமைந்திருக்கிறது. 44.4 மீட்டர் ராக்கெட் 321 டன் எடையுடன் இது ஏவப்பட்டது.

பெருமையை கொண்டாடிய தருணம்
அதற்கான கவுண்டவுன் ஆந்திராவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் நேற்று தொடங்கியது. இந்நிலையில் திட்டமிட்டபடி இன்று முற்பகல் 11:56 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அந்த இடத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அதை காண்பதற்காக திரண்டு இருந்தனர் .அந்தப் பெருமையான தருணத்தில் அதே இடத்தில் கோபிநாத் இருந்து, வாவ்.... என ராக்கெட் விண்ணில் சீறி பாய்வதை பார்த்து தன்னை அறியாமல் குழந்தையாக ஆர்ப்பரித்து கைதட்டி உற்சாகமாக வழி அனுப்பி வைக்கிறார். அதோடு குழந்தை போலவே போய்விட்டது போய்விட்டது என்று அவர் பேசியதை மீம்ஸுகளில் பலர் கலாய்த்து வருகிறார்கள்.

குழந்தையாகவே மாறிட்டாரே
நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு முதிர்ச்சியுள்ள ஒரு நபராக சமூக அவலங்களில் நடுநிலைளராக தன்னுடைய தீர்ப்பை வழங்கி வரும் கோபிநாத் இன்று தன்னை அறியாமல் ஒரு குழந்தையாக கொண்டாடி மகிழ்ந்ததை பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர். எந்த நிலைமையிலும் தான் என்கிற ஆணவம் இல்லாமல் எப்போதும் ஒரே நிலையில் இருக்க வேண்டும் என்பது இவரைப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று பலர் இவரை பாராட்டி வருகிறார்கள். இன்னும் ஒரு சிலர் இந்த பெருமையான தருணத்தை சந்தோஷமாக கொண்டாடுவதில் எந்த தப்பும் இல்லை என்று இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications