பொழுதுபோக்கில் அரசியலை கலந்தால் இதுதான் நடக்கும்! "அவரை” மறைமுகமாக தாக்கிய பாலாஜி முருகதாஸ் பதிவு
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமடைந்த பாலாஜி முருகதாஸ் அந்த நிகழ்ச்சியில் இருக்கும் போட்டியாளரை குறித்து மறைமுகமாக சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு நெட்டிசன்கள் மத்தியில் கலாய்க்கப்பட்டு வருகிறது.
விக்ரமன், மணிகண்டனிடம் பேசிய வார்த்தையை மையப்படுத்தி பாலாஜி முருகதாஸ் பதிவு வெளியிட்டாரா? என்று ரசிகர்கள் கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.

நான்காவது சீசனில் பிரபலம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமான பாலாஜி முருகதாஸ் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு ஆண் அழகன் பட்டத்தை பெற்றிருந்தாலும் அந்த அளவிற்கு பிரபலமாகாமல் தான் இருந்தார். ஆனால் இந்த நிகழ்ச்சியின் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்து விட்டார். குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரிடம் தன்னுடைய கோபமான கேரக்டர் மூலமாகவே தனி இடத்தை பிடித்திருந்தார். கோபத்தை காட்டுவதில் இவருக்கு நிகர் இவர்தான் என்று சொல்லும் அளவிற்கு இவர் தன்னுடைய பாடி லாங்குவேஜ் காட்டி வந்தாலும் ரசிகர்கள் அதையும் ரசித்து வந்தனர்.

முரட்டு குணமும் அன்பும்
பாலாஜி முருகதாஸ் என்னதான் கோபப்பட்டு சக போட்டியாளர்களிடம் சண்டையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தாலும் அடுத்த சில நிமிடங்களில் தான் செய்த தவறை இனி திருத்திக்கொள்வதாக சமாதானம் செய்து விடுவார். குறிப்பாக ஆரியை ஒருமுறை இவர் அடித்து விடுவதாகவே கூறி அருகில் நெருங்கி இருந்தார் பின்பு ஆரியிடம் இவர் மன்னிப்பு கேட்டு விட்டார்.இதுவே இவருடைய ரசிகர்கள் இவரை ரசிப்பதற்கான காரணமாகவும் இருந்து வந்தது. அது மட்டுமல்லாமல் கதை சொல்லும் டாஸ்கில் இவருடைய பெற்றோர் இவருக்கு செய்த கொடுமைகளை பற்றியும் இவர் உருக்கமாக பேசியிருந்தார். அது பலருடைய வரவேற்பை ஆதரவை பெற்றிருந்தாலும் பலருடைய நெகட்டிவ் கருத்துக்களையும் பெற்றிருந்தது. இதற்கு முன்பு இவர் வெளியிட்ட புகைப்படங்களை கூட அந்த நேரத்தில் பலர் ட்ரண்டு செய்து வந்தனர்.

ப்ரோமோவில் வந்த சண்டை
அதே நேரத்தில் பிக் பாஸ் தமிழ் சீசன்4 நிகழ்ச்சியில் கடைசி வரைக்கும் இருந்து வின்னராக இவர் செலக்ட் ஆனார். தனக்கு இந்த வெற்றி போதாது என்று மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் ஜெயித்து விட்டார். இந்த நிலையில் தற்போது நடந்து வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் விக்ரமன் மற்றும் மணிகண்டன் இடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் மணிகண்டன் இடம் விக்ரமன் நான் ஒரு அரசியல்வாதி எனக்கு பல விஷயங்கள் தெரியும் ஆனாலும் நீங்கள் என்னை பற்றி தவறாக பேசுகிறீர்கள் என்று ப்ரோமோவில் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.

இது மட்டும் சரியா பாஸ்
அதே நேரத்தில் பாலாஜி முருகதாஸ் தன்னுடைய twitter பக்கத்தில் "நீங்கள் பொழுதுபோக்கை அரசியலுடன் கலக்கும்போது இது சாதாரண மக்களுக்கு பேரிழப்பாக இருக்கும்" என்று பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் இரு விதமாக இவருக்கு கருத்து வெளியிட்டு வருகிறார்கள். ஒரு சிலர் பாலாஜி சொல்வது சரிதான் என்று கருத்து தெரிவித்து வரும் நிலையில், பலர் இவர் விக்ரமனை தான் குறிப்பிட்டு இப்படி ஒரு பதிவு வெளியிட்டு இரக்கிறார் என்று விக்ரமனுக்கு ஆதரவாக பாலாஜி முருகதாஸை திட்டியும் கருத்து வெளியிட்டு வருகிறார்கள். ஒரு சில நெட்டிசன்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் கெட்ட வார்த்தையும், அடுத்தவர்களை மதிக்காமல் பாடி லாங்குவேஜ் காட்டுவதும், அடுத்தவர்களுக்கு மரியாதை இல்லாமல் பேசுவது மட்டும் சரியா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications