காதல்,தற்கொலை முயற்சி டான்சர் அல்போன்ஸாவுக்கும் ராபர்ட்க்கும் இப்படி ஒரு உறவா?ஜெயிலுக்கு செல்லகாரணம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருக்கும் ராபர்ட் மாஸ்டர் வெளியே தெரியாத குடும்ப ரகசியங்கள் பல வெளியே கசிந்து இருக்கிறது.
ராபர்ட் மாஸ்டரின் அக்கா சினிமாவில் டான்ஸராகவும், நடிகையாகவும் இருந்த அல்போன்ஸாதானாம். இவரைப் பற்றிய தகவல்களை ஏன் பிக் பாஸ் வீட்டிற்குள் ராபர்ட் மாஸ்டர் பேசவில்லை என்று பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

குடும்ப விஷயங்கள் வெளியானது
பிக் பாஸ் நிகழ்ச்சியில் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் ஒரு போட்டியாளராக அறிமுகமாகி இருக்கிறார். இதற்கு முன்பு இவர் பல திரைப்படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்து இருந்தாலும் தற்போது தான் பட்டி தொட்டி எல்லாம் இவர் பிரபலம் அடைய தொடங்கி இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் ரட்சிதாவுடன் அதிகமாக நெருக்கம் காட்டி வருவதாக இவரைப் பற்றி பல நெகடிவ் கருத்துக்கள் வெளியாகி கொண்டிருக்கும் போது இவருடைய நிஜ வாழ்க்கையிலும் நடந்த நிகழ்வுகள் பல வெளியாகி இருக்கிறது.

ரா ரா ராமையா பாடல்
விஜய் ,அஜித், சிம்பு என பல பிரபலங்களையும் ஆட வைத்துக் கொண்டிருக்கும ராபர்ட் மாஸ்டரின் அக்கா ஒரு டான்ஸராக தான் இருந்திருக்கிறார் .அவருடைய அக்காவின் பெயர் அல்போன்ஸாவாம் அவர் கமல் நடித்த பஞ்சதந்திரம் திரைப்படத்தில் நடித்திருக்கிறாராம். .90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் குத்து பாட்டு டான்ஸராக இருந்து இருந்திருக்கிறார்.ரஜினி நடிப்பில் வெளிவந்த பாச்சா திரைப்படத்தில் வரும் "ரா ரா ராமையா" படத்தில் டான்ஸ் ஆடுபவர் இவர்தானாம். ராபர்ட் பாஸ்டரின் குடும்பத்தில் அனைவரும் டான்ஸ் ஆடுபவர்கள் என்பது தெரிந்தாலும் அல்போன்ஸா ராபர்ட் மாஸ்டரின் அக்கா என்பது பலருக்கும் தெரியாமல் தான் இருந்து வந்துள்ளது.

50க்கும் மேற்பட்ட திரைப்படங்கள்
பஞ்சதந்திரம் திரைப்படத்திற்கு பிறகு இவர் தமிழில் சேர சோழ பாண்டியன், தாயின் மணிக்கொடி, பெரிய மனுஷன், சிவன் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். நடிப்பு மட்டுமல்லாமல் பத்ரி தில் ,காதல் சடுகுடு போன்ற படங்களில் குத்துப் பாடல்களுக்கு டான்ஸ் ஆடி இருக்கிறார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் தெலுங்கு என நடித்தும் நடனமடியும் சுமார் 50-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியிருக்கிறாராம்.

காதலும் பிரிவும்
அந்த நேரத்தில் தான் அல்போன்ஸாவும், நடிகர் வினோத்தும் காதலுக்கு இருந்தார்களாம். இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறுகின்றனர். வினோத் கவசம் என்ற படத்தில் நடித்து இருந்தாராம். பண பிரச்சனையால் இந்த படம் பாதியிலே கைவிடப்பட்டதால் அவர் மனம் உடைந்து 2012ல் தற்கொலை செய்து கொண்டாராம் .வினோத்தின் பிரிவை தாங்க முடியாமல் அப்போது அல்போன்ஸா மன உளைச்சலில் இருந்திருக்கிறார். ஆனாலும் வினோத்தை ராபர்ட் மற்றும் அல்போன்சா தான் கொலை செய்து விட்டார்கள் என்று வினோத்தின் தந்தை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்து இருந்தாராம். அந்த நேரத்தில் நடிகை வனிதாவின் அட்வகேட் தான் ராபர்ட் மாஸ்டரை வெளியே எடுத்ததாக கூறியிருக்கிறார். இந்த நிலையில் ஏற்கனவே ஜெயிலுக்கு சென்று வந்த ராபர்ட் மாஸ்டர் நேற்றைய எபிசோடில் தனக்கு ஜட்ஜ் பற்றி எதுவும் தெரியாது என்று பேசியதை குறித்தும் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

இதைப் பற்றி பேசவே இல்லை
அதற்குப் பிறகு சினிமாவில் தலை காட்டாமல் இருந்த அல்போன்ஸா திடீரென 2015 ஆம் ஆண்டு தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார் .எப்படியோ போராடி அவரை காப்பாற்றி விட்டார்களாம். இவருக்கு ஒரு மகள் இருப்பதாகவும் தற்போது அவரோடு தான் அவர் வாழ்ந்து வருவதாகவும் சில வருடங்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் செய்திகள் வெளியாகி இருந்தது .ஆனால் தற்போது அவர் எங்கே இருக்கிறார் என்ன செய்கிறார் என்ற தகவல்கள் எதுவும் ரசிகர்கள் யாருக்கும் தெரியாது ஆனாலும் அதை பற்றி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ராபர்ட் மாஸ்டர் யாரிடமும் கூறவே இல்லை என்றும் தன்னுடைய மகளைக் குறித்து மட்டும் உருக்கமாக பேசிய ராபர்ட் மாஸ்டர் அப்போ அவருடைய அக்காவிடம் இப்போது பேச்சுவார்த்தை கிடையாதா? என்றும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications